தேவனுக்கு செவிக்கொடுத்தல்

தியானத்திற்கு

தேவனுடைய சத்தத்தைக் கேட்டல்

யோபுவை போல, என்னுடைய அனுதின உணவை காட்டிலும், நான் தேவனுடைய வார்த்தைகளையும் வழிநடத்துதலையும் பெறவே விரும்புகிறேன் (வாஞ்சிக்கிறேன்)! நீயும் அவ்வாறு வாஞ்சிக்கவில்லையா? ஏசாயாவில் வேதாகமம் கற்றுத்தருவதுபோல, நான் நடக்க வேண்டிய பாதையை எனக்கு சொல்ல எனக்கு தேவனுடைய சத்தம் தேவை.


ஆனால், தேவனுடைய சத்தத்தை எப்படி கேட்பது? மற்றும், அவர் உண்மையில் இன்னும் பேசுகிறாரா? திடன் கொள்ளுங்கள்; தேவன் ஒரு சிறந்த தொடர்பாளர்! அவர்தான் இந்த பேசும் திறனை சிருஷ்டித்தவர். ஆகவே அவர் பேசுகிறார், அவரை கேட்க நம்மால் கூடும், அதற்கு பிரதிகிரியை செய்யவும் கூடும். தேவன் பேசுகிறார் என்றால்-நாம் அதை அறிந்துகொள்ள முயல வேண்டும் கவனமாக! கவனமாக கேட்பதுதான் இன்று மிக தேவையாக இருக்கிறது, ஆனால் குறைவாகவே தென்படுகிறது.


முதலாவது, தேவன் நம்மோடு பேசும் விதங்களை நாம் அறிந்துகொள்வோம்.


தேவன் தன் வார்த்தையின் மூலம் பேசுகிறார். தேவன் அவர் வார்த்தையின் மூலம் அவருடைய சித்தம் மற்றும் திட்டத்தின் அதிக பங்கை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரிடம் இருந்து நேரிடியாக கேட்பதற்க்கு வல்லமையான முறை அவருடைய வார்த்தையை வாசிப்பதுதான்.


தேவன் அமர்ந்த சத்தத்தோடு பேசுகிறார். அநேக வேளையில் தேவன் நம்முடைய ஆவியோடு பேசுவார், சொப்பனங்களை தருவார், தரிசனங்கள் மூலம் நம்முடைய சூழ்நிலைக்கான அறிவுரையை தருவார். அவர் திட்டத்திற்கு நம்மை திசை திருப்ப நம்மை வழிநடத்துவார்.


தேவன் அவர் மக்கள் மூலம் நம்மோடு பேசுவார். சில வேளைகளில் தேவன் மற்ற கிருஸ்துவர்கள் மூலம் நம் இருதயத்தில் பேசுவார். அது உற்சாகத்தின் வார்த்தையாகவோ, திருத்துதலோ, வழிநடத்துதலாகவோ இருக்கலாம்.


இந்த ஏழு-நாள் வேத திட்டம் நம்முடைய அன்புள்ள பிதாவின் இருதயத்திலிருந்து உங்களுக்கு பேசும் ஒரு கருவியாக இருந்து இந்த எதிர்க்கும் சக்திகளை மறந்து, அவருடைய சத்தத்தை கேட்டு, உங்கள் இருதயத்தை அவர் அதிகமாக கவர வேண்டும் என்பதுதான் என் ஜெபமாக இருக்கிறது.


பிதாவை கேளுங்கள்: கவனமாக கேட்க நான் என்ன செய்ய வேண்டும்?


இன்றைய ஆராதனை பாடல் பரிந்துரை: “Yield My Heart” by Kim Walker-Smith