திட்ட விவரம்

தெய்வீக கால நிர்வாகம்மாதிரி

Divine Time Management

6 ல் 3 நாள்

அடையாளத்திற்கு அல்ல அடையாளத்திலிருந்து வாழ்வது



நாம் நம்மை யாரென்று எண்ணுகிறோமோ, அதுவே நாம் என்ன செய்கிறோம், நம் செயல்களை குறித்து நாம் என்ன உணருகிறோம் என்பதை தீர்மானிக்கும். தேவன் நம்முடைய நேரத்தை அடையாளத்திலிருந்து உபயோகிக்க விரும்புகிறார் அடையாளத்திற்காக அல்ல அதன் மூலம் அவரில் நாம் பாதுக்காப்பாக உணரும்படியாக.



அதற்கு நம்முடைய அடையாளத்தைப்பற்றிய மன மாற்றங்களை கொண்டிருக்கவேண்டும்:




  • நிச்சயமில்லாத மாறி நிச்சயமாகவேண்டும்

  • வெளிப்புறமான மாற்றம் உள்ளான மாற்றமாகவேண்டும்

  • தெளிவற்ற நிலை மாறி நிச்சயமான நிலையாகவேண்டும்


உலகம் சொல்லும் பொய் என்னவென்றால் நம்முடைய அடையாளம் நிச்சயமற்றது என்பதுதான் அது இழந்துபோக கூடியது மாறக்கூடியது என்று. தேவனுடைய வார்த்தையிலிருந்து வரக்கூடிய சத்தியம் என்னவென்றால் நம்முடைய அடையாளம் கிறிஸ்துவில் நிச்சயமானது என்பது. கலாத்தியர் 3:26 (TAOVBSI) சொல்கிறது "நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே."



உலகம் சொல்லும் பொய் என்னவென்றால் வெளிப்புற தோற்றம்தான் நம்முடைய அடையாளத்தை தீர்மானிக்கிறது என்று—நாம் எப்படி காட்சியளிக்கிறோம், எதை கொண்டிருக்கிறோம் அல்லது என்ன அந்தஸ்தை கொண்டிருக்கிறோம். தேவனுடைய வார்த்தையிலிருந்து வரக்கூடிய சத்தியம் என்னவென்றால் நாம் கிறிஸ்துவில் உள்ளாக எதை கொண்டிருக்கிறோமோ, அதுவே முக்கியமானது. கொலோசெயர் 3:12 (TAOVBSI)சொல்கிறது நம்முடைய உள்ளான குணமே நம்முடைய வெளிப்படையான ஆபரணம் என்று: "ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு இருக்கவேண்டும்.”



உலகம் சொல்லும் பொய் என்னவென்றால் அடையாளம் ஒப்பீடினால் வருகிறது என்று, நம்மை சுற்றிலும் இருக்கும் நபர்களை விட சிறப்பாகவா அல்லது குறைவாகவா இருக்கிறோம் என்று. தேவனுடைய வார்த்தையிலிருந்து வரக்கூடிய சத்தியம் என்னவென்றால் நம்முடைய அடையாளம் நிச்சசயமானது, உலகப்பிரகாரமான ஒப்பீடுகள் மற்றும் நீதிகள் தேவனுக்கு முன்னாள் அர்த்தமற்றவை என்று. பிலிப்பியர் 2:3-4 (TAOVBSI) இவ்வாறு சொல்கிறது: "ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.”



உங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்று யோசிக்கும்போது, உங்கள் அடையாளம் நிலையற்றது, வெளிப்படையானது, ஒப்பீடுக்குட்பட்டது என்று யோசித்திருக்கிறீர்களா?



அப்படியென்றால், எப்படி வித்தியாசமாக யோசிக்கமுடியும், தேவனுக்குள் இருக்கும் பாதுகாப்பில் இருந்து எப்படி தெரிந்தெடுக்கமுடியும்?


நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Divine Time Management

உலகப்பிரகாரமாக நேரத்தை நன்மையாக கடைபிடிக்கும் பொது நம்முடைய சொந்த பெலத்தாலும் சுய ஒழுங்கினாலும் வாழ்க்கையை அடக்க முயலுவது மன அழுத்தத்தை உண்டாக்கும். வேதாகமம் சொல்கிறது நம்முடைய நேரத்தை தேவனிடம் விசுவாசித்து கொடுக்கும்போத...

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக எலிசபெத் கிரேஸ் சாண்டர்ஸ்க்கு நன்றி செலுத்திக்கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு: http://www.divinetimebook.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்