திட்ட விவரம்

தெய்வீக கால நிர்வாகம்மாதிரி

Divine Time Management

6 ல் 2 நாள்

காலத்தை தேவனிடம் விசுவாசித்து ஒப்படைப்பது



விசுவாசம் என்பது ஒருவர்மீது அல்லது ஒரு பொருளின்மீது இருக்கக்கூடிய நம்பிக்கைத்தன்மை, உண்மை மற்றும் திறனின்மீது வைக்கக்கூடிய "திடமான நம்பிக்கையாகும்." இந்த வார்த்தை வேதாகமத்தில் 150-க்கும் மேற்பட்டமுறை உபயோகிக்கப்பட்டுள்ளது. வேதாகமத்தில் தேவனை விசுவாசிப்பது ஒரு மைய பொருளாகும். வேதாகமத்தின் மாந்தர் தேவனை நம்பியபோது, அவருடைய சிறந்ததை அனுபவித்தார்கள். தேவனை தவிர மற்றதில் நம்பிக்கைவைத்தபோதோ அவர்கள் அதை அனுபவிக்கவில்லை.



எரேமியா 17:7-8 ( TAOVBSI) கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்:



“கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்,



கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து.



அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும்



கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும்.



உஷ்ணம் வருகிறதைக் காணாமல்;



இலை பச்சையாயிருக்கிறதும்.



மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றி



தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.”



ஆகவே கால நிர்வாகத்தில் தேவனை விசுவாசித்து என்பது என்ன? கிறிஸ்துவர்களாக, என்ன வேலையை தேர்ந்தெடுப்பது, எங்கு செல்வது, இவரை திருமணம் செய்யலாமா என்பதுபோன்ற பெரிய முடிவுகளில் தேவனை உதவிக்காக கேட்கவிரும்புகிறோம். ஆனால், அனுதின நாளின் முடிவுகளில் தேவன் நம் கையை பிடித்து நடத்த கேட்க அநேக முறை நாம் மறக்கிறோம்.



கால நிர்வாகத்தின் மத்தியில் தேவனை விசுவாசிக்க சில வழிமுறைகள் இவைகள்:




  • உங்கள் அட்டவணையை சரிசெயுங்கள்: ஒரு நாளின் வேலை அட்டவணையை சரிபார்த்து, எதற்கு நேரத்தை அதிகமாகவோ குறைவாகவோ செலவழிக்கவேண்டும் என்று ஜெபியுங்கள்.

  • தேவனோடு உங்கள் உறவில் முதலீடு செய்யுங்கள்: பரம பிதாவோடு தொடர்பில் இருந்து நீங்கள் சுமக்கும் பாரங்களை கொடுக்க அனுதின நேரத்தை தேவனுடைய வார்த்தையிலும் ஜெபத்திலும் செலவழியுங்கள்.

  • தேவனோடு இளைப்பாருங்கள்: தேவனுடைய பராமரிப்பில் விசுவாசிக்கும் வண்ணமாக தேவனுடைய நாளையோ அல்லது ஒரு விடுமுறை நாளையோ இளைப்பாறுதலில் அனுசரியுங்கள்.

  • கவலையை விட்டுவிடுங்கள்: நீங்கள் ஒருவர் மீது பொறுப்பெடுத்து கவலைப்படுவீர்களானால், தேவனிடம் நீங்கள் நேசிக்கும் மக்களின்மீது அவர் கொண்டுள்ள அன்பில் விசுவாசிக்க உதவி கேளுங்கள். வேலையில் மும்முரமாக இருந்து அதிக கவலைப்படுவீர்களானால், மற்றவர்கள் மீது கவலைகொள்ள நேரத்தை செலவழிக்க தேவனிடம் உதவி கேளுங்கள்.


கிறிஸ்துவர்களாக, நாம் நேரத்தை உபயோகிப்பதும், நேரத்தை சமாதானமாக செலவழிப்பதும், கால நிர்வாகத்தில் நாம் தேவனை விசுவாசிப்பதை வெளிக்காட்டவேண்டும்.





நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Divine Time Management

உலகப்பிரகாரமாக நேரத்தை நன்மையாக கடைபிடிக்கும் பொது நம்முடைய சொந்த பெலத்தாலும் சுய ஒழுங்கினாலும் வாழ்க்கையை அடக்க முயலுவது மன அழுத்தத்தை உண்டாக்கும். வேதாகமம் சொல்கிறது நம்முடைய நேரத்தை தேவனிடம் விசுவாசித்து கொடுக்கும்போத...

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக எலிசபெத் கிரேஸ் சாண்டர்ஸ்க்கு நன்றி செலுத்திக்கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு: http://www.divinetimebook.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்