திட்ட விவரம்

எங்களுடைய இடத்தில்: Time of Grace லிருந்து தபசுக்கால தியானங்கள்மாதிரி

In Our Place: Lenten Devotions

14 ல் 8 நாள்

முடிந்தது மனித சரித்திரத்திலேயே மிக முக்கியமான இரண்டு நாட்களில் ஒன்று ரோம போர்சேவகர்களுக்கு சாதரணமாக தான் தெரிந்தது. பஸ்கா ஓய்வுநாளுக்கு முந்தைய நாளில் மூன்று பொது மரணதண்டனைகளை நிறைவேற்றுவது அவர்களது அன்றாட கடமையாக இருந்தது. தங்கள் பணியை கொடூரத்துடனும் பயிற்சியால் ஏற்பட்ட திறமையுடனும், தங்கள் பலியாட்களின் கைகளிலும் கால்களிலும் ஆணிகளை சுத்தியலால் பாய்த்தனர். இருவர் வலியாலும் வெறுப்பாலும் அலறினர். நடுவில் இருந்த ஒருவர் தன் துன்பங்களை பெரும்பாலாக மௌனத்திலேயே சகித்தார். ஒரு முறை தன் தந்தையிடம் தன்னை துன்புறுத்துபவர்களின் மன்னிப்பை கேட்க பேசினார். இயேசு மரித்துக்கொண்டிருக்கையில் தான், சிலுவையில் அறைவதன் விவரங்களுக்கு பொறுப்பாக இருந்தவருக்கு உதயமானது தனக்கு முன் தொங்கிக்கொண்டிருப்பவர் யார் என்று: "அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக்கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்." (மாற்கு 15:39) அந்த நூற்றுக்கதிபதி அன்றைக்கு தன் குடியிருப்புக்கு செல்கையில் மூன்று காரியங்களை சுமந்து சென்றார்: கொல்லப்பட்டவர்களிடமிருந்து எடுத்த துணிகளின் தன் பங்கு, ஒரு குற்றமற்ற மனிதனை மட்டுமல்லாமல் தேவனுடைய குமாரனையே சிலுவையில் அறைந்ததை பற்றிய பயங்கரமான குற்ற உணர்வு, மற்றும் தன்னை போன்ற கொலைகாரர்களுக்கு கூட வழங்கப்பட்ட மன்னிப்பின் நற்செய்தி. இந்த வியக்கத்தக்க காட்சியிலிருந்து உங்களுக்கும் எனக்கும் அனேக பாடங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு மிகவும் முக்கியமானவை. முதலாவது, நம் பாவங்கள் எவ்வளவு மோசமானவை என்று கிறிஸ்துவின் சிலுவை காட்சி நமக்கு காட்டுகின்றது. இரண்டாவதாக, நாம் அனைவருக்காகவும் செய்த மன்னிப்பின் கொள்முதல் வெற்றிகரமானது என்று அவர் சிலுவை காட்டுகிறது. முடிந்தது. சாத்தான் முடிந்தான். கிறிஸ்து உன்னை விடுதலை செய்தார்.

வேதவசனங்கள்

நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

In Our Place: Lenten Devotions

தபசுக்காலத்தின் வழியாக நம்மை நடத்தி செல்லும் இந்த வாசிப்பு திட்டம், இயேசு கிறிஸ்துவின் துன்பம், கண்டனம், மற்றும் நமக்கு பதிலாக மரித்ததின் வியக்கத்தக்க சம்பவங்களை நமக்கு கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தை வழங்கும் Time of Grace ஊழியத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.timeofgrace.org க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்