திட்ட விவரம்

எங்களுடைய இடத்தில்: Time of Grace லிருந்து தபசுக்கால தியானங்கள்மாதிரி

In Our Place: Lenten Devotions

14 ல் 12 நாள்

நீங்கள் அழிவில்லாதவர்கள் முக்கியமானவற்றை தனக்கு சாதகமாக எடுத்துக்கொள்வது மனித சுவாபம் அல்லவா? உங்கள் காரில் சென்றுக்கொண்டிருக்கும் போது, திடீரென உங்களுக்கு முன் உள்ள காரில் சிவப்பு வெளிச்சம் பிரகாசிக்கிறதை நீங்கள் பார்த்தால், "உராய்வின் விதிகள் இன்றைக்கும் உண்மையானதா என்ன?" என்று நீங்கள் யோசிப்பது கூட இல்லை. நீங்கள் பிரேக்குகளை அழுத்துவீர்கள். அல்லது காலையில் எழுந்ததும், "ஒரு வேளை பூமியின் ஈர்ப்பு தன்மை இல்லாமலிருக்கும் நாள் இன்று தானோ, நான் காற்றில் பறந்து போய் விடுவேனோ" என்று நீங்கள் யோசிப்பதில்லை. நீங்கள் நடைபாதையில் காலடி எடுத்து வைக்கும் போது உங்கள் கால்கள் தரையில் நிற்கும் என்று கருதுகிறீர்கள். நம் வாழ்க்கையை இயக்கிக்கொண்டிருக்கும் உலகளாவிய நியமங்களுக்கு பொதுவாக நாம் அதிக கவனம் கொடுப்பதில்லை. ஆனால் ஈஸ்டர் நிகழாமலிருந்திருந்தால்? கிறிஸ்து உயிர்த்தெழவில்லையென்றால், கிறிஸ்தவத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவை எல்லாம் அடித்தளம் இல்லாத கட்டிடம் புயல் காற்றில் விரிசல் விட்டு நொறுங்கி விடுவது போல் ஆகி விடும். கிறிஸ்து உயிர்த்தெழவில்லையென்றால், உங்கள் பாவங்கள் மனிக்கப்படாமலே இருக்கும், அவற்றிற்காக நீங்கள் ஆக்கினைத்தீர்க்கப்படுவீர்கள். இது தான் மிகவும் அச்சுறுத்த கூடிய பகுதி! கிறிஸ்துவில் மரித்தோர் தொலைந்து போய் விட்டனர். இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம் என்று பவுல் கூறியிருக்கிறார். ஆனால் இதனை அறிந்து கொள்ளுங்கள்: பைபிள் சொல்லுகிறது, "கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்." (1 கொரிந்தியர் 15:20) உயிர்த்தெழுதலின் முதல் தவணை கிறிஸ்து இயேசுவே. அவர் தன் கல்லறையிலிருந்து ஆத்துமாவும் உடலுமாக படாரென வந்ததால், நீங்களும் நானும் அழிவில்லாதவர்களாக இருக்கிறோம். அவரது உயிர்த்தெழுதல் உங்கள் மன்னிப்பை உறுதி செய்கிறது. அவரது உயிர்த்தெழுதல் உங்கள் உயிர்த்தெழுதலை உறுதி செய்கிறது.

வேதவசனங்கள்

நாள் 11நாள் 13

இந்த திட்டத்தைப் பற்றி

In Our Place: Lenten Devotions

தபசுக்காலத்தின் வழியாக நம்மை நடத்தி செல்லும் இந்த வாசிப்பு திட்டம், இயேசு கிறிஸ்துவின் துன்பம், கண்டனம், மற்றும் நமக்கு பதிலாக மரித்ததின் வியக்கத்தக்க சம்பவங்களை நமக்கு கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தை வழங்கும் Time of Grace ஊழியத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.timeofgrace.org க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்