திட்ட விவரம்

எங்களுடைய இடத்தில்: Time of Grace லிருந்து தபசுக்கால தியானங்கள்மாதிரி

In Our Place: Lenten Devotions

14 ல் 5 நாள்

"மாண்டி" என்றால் என்ன?⏎ ⏎ இயேசு சிறை பிடிக்கப்பட்ட மாலைவேளையில், எருசலேமில் ஒரு மாடி அறையில் பஸ்கா ஆண்டு உணவை யூத மற்றும் ரோமன் நீதிமன்றங்கள் அமைதியாக தொடங்கியது. இயேசு அந்த பொன்னான இறுதி நேரத்தை ஒரு கற்பிக்கும் போதனையாக பயன்படுத்தினார். அவர் சொன்ன அநேக காரியங்கள், சீடர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் குனிந்து அவர்களுடைய கால்களை கழுவினார். அவர் தன் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்து முன்னுரைத்தார் மற்றும் "ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை கொடுத்தார். நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்" (யோவான் 13:34). முன்னதாக தங்கள் பயிற்சியின் போது, கிறிஸ்துவின் வார்த்தையில் நிலைத்து நிற்பவனே ஒரு உண்மையான விசுவாசி என்று அவர் சொல்லியிருந்தார். இப்போது அவர் "புதிய" கட்டளையை கூறினார். அது புதிதல்ல, ஆனால் காலத்தால் அழியாதது: "ஒருவரிலொருவர் அன்பு கூறுங்கள்" . நம்முடைய பாவ சுபாவங்களின் தொடர்ச்சியாக சுயநல எண்ணங்கள், சுயநல வார்த்தைகள் மற்றும் சுயநல நடத்தைகளை புதிதாக உருவாக்குகிறது. ஒவ்வொரு காலையிலும் கிறிஸ்துவின் மன்னிக்கும் கருணை புதிதாக இருப்பது போல, ஆத்துமாவிற்கு மன்னிப்பின் புதுப்பித்தல் மழையை கொடுப்பது போல, நாமும் மற்றவர்களை கிறிஸ்து நடப்பிப்பது போல பொறுமையான, நிலையான, நிபந்தனையற்ற அன்பு கொண்டு நடப்பிக்க வேண்டும்.⏎ ⏎ "மாண்டாடும்" என்பது "கட்டளை" என்கிற சொல்லின் லத்தீன் வார்த்தை. அதுவே இயேசுவின் மரணத்திற்கு முந்தைய சிறப்பு வியாழக்கிழமையின் பெயர் ஆனது. நாம் அந்த சிறப்பான மாலை வேளையை பற்றி நினைக்கும் பொழுது, தேவ ஆட்டுக்குட்டியானவர் அவரது நண்பர்களுடன் பஸ்கா உணவு உண்ணும் போது தாழ்மையுடன் அவர்களின் பாதங்களைக் கழுவி, அவர்களுக்கு தேவ வார்த்தைகளின் இரகிசயத்தை அவர்களின் நன்மைக்காக வெளிப்படுத்தியதால் நாம் ஈர்க்கப்பட்டோம். அன்பினால் ஈர்க்கப்பட்டோம்.

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

In Our Place: Lenten Devotions

தபசுக்காலத்தின் வழியாக நம்மை நடத்தி செல்லும் இந்த வாசிப்பு திட்டம், இயேசு கிறிஸ்துவின் துன்பம், கண்டனம், மற்றும் நமக்கு பதிலாக மரித்ததின் வியக்கத்தக்க சம்பவங்களை நமக்கு கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தை வழங்கும் Time of Grace ஊழியத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.timeofgrace.org க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்