திட்ட விவரம்

திருமணம் என்னும் இராஜ்ஜியம்மாதிரி

Kingdom Marriage

5 ல் 4 நாள்

பேட்மேன் பிகின்ஸ் என்ற திரைப்படத்தில், வில்லன் ராவின் அல் குல் தனது உண்மையான அடையாளத்தை மறைத்தார். அவர் ரகசியமாக வேலை செய்யும் போது அதிக சேதத்தை ஏற்படுத்த முடியும், மேலும் குழப்பத்தை ஏற்படுத்த முடியும், மேலும் பல உயிர்களை அழிக்க முடியும் என்பதை அவர் அறிந்திருடந்ததால் இதைச் செய்தார். பேட்மேன் தவறான வில்லனை துரத்தினார். திரைப்படத்தின் பிற்பகுதியில், பேட்மேன் உண்மையான எதிரி யார் என்பதைக் கண்டறிந்து, அவருடன் சண்டையிட்டு வெற்றியை அடைகிறார்.


சாத்தானும் அதே வழியில் தான் செயல்படுகிறான். அவன் திரைக்குப் பின்னால் வேலை செய்யும் போது அவன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறான். அவன் ஏற்படுத்தும் குழப்பங்களுக்குப் பிறர் அவமதிப்பைப் பெற விரும்புவான். அவன் இல்லை என்று நீங்கள் நம்புவதை அவன் விரும்புவான், ஏனென்றால் உண்மையான வில்லன் உங்கள் மனைவி என்று நீங்கள் நினைப்பீர்கள். திருமணங்கள் குழப்பமடையும் போது, ​​​​தம்பதிகள் பொதுவாக ஒருவர் மாற்றி மற்றவரைக் குறை கூறுவார்கள். பிசாசு விரும்புவதும் அதைத்தான். அடிப்படையில், நீங்கள் உங்கள் மனைவியை எதிரியாகப் பார்க்கும்போதும், சாத்தானை உண்மையான வில்லனாகப் புறக்கணிக்கும்போதும், நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்! இது நிகழும்போது, ​​உங்கள் திருமணத்திற்கான தேவனின் திட்டத்தை சாத்தான் அழிக்க முயற்சிக்கிறான் என்பதை உணராமல், உங்கள் மனைவிக்கு எதிர்மறையாக நடந்துகொள்வீர்கள்.


உங்கள் திருமணத்தை சாத்தான் அழிக்க விரும்புகிறான் என்பதை நீங்கள் உணர வேண்டும். அதை அழிப்பதற்காக மட்டுமல்ல, அதை அகற்றுவதன் மூலம், அவன் உங்கள் பாரம்பரியத்தையும் அழித்துவிடுவான். அவன் உங்கள் திருமணத்தை விரும்பவில்லை; அவன் உங்கள் குடும்பத்தை அழிக்க விரும்புகிறான். உங்கள் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் உடைந்த திருமணங்களிலிருந்து வர வேண்டும் என்று அவன் விரும்புகிறான், இதனால் விசுவாசம் ஒரு தலைமுறையினிடத்தில் இருந்து இன்னொரு தலைமுறையினருக்கு கடந்து செல்லாது.


உங்கள் திருமணத்தில் நடக்கும் அனைத்திற்கும் நீங்கள் ஆன்மீக தொடர்பை ஏற்படுத்தாவிட்டால், நீங்கள் தொடர்ந்து தவறான போரில் ஈடுபடுவீர்கள். இது உங்களுக்குள் ஏற்படும் போர் அல்ல, ஆவிக்குரிய போர். நீங்கள் ஆவிக்க்குரிய ஆயுதங்களுடன் சண்டையிடும்போது மட்டுமே உங்கள் திருமண வாழ்க்கையில் வெற்றியை அனுபவிப்பீர்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனின் முழு கவசத்தையும் அணிந்து போரிடுங்கள். தேவன் இந்த ஆவிக்குரிய ஆயுதங்களைக் கிடைக்கச் செய்கிறார், ஆனால் அவற்றைப் பயன்படுத்த அவர் உங்களை கட்டாயப்படுத்த மாட்டார். உங்கள் திருமணத்தில், தேவனின் வழியை, அவருடைய கவசத்துடன், அதை அழிக்க முயலும் எதிரிக்கு எதிராக நீங்கள் போரிட பயன்படுத்த வேண்டும்.


உங்கள் திருமணத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதற்குப் பதிலாக நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து சாத்தானுடன் எப்படி சண்டையிடலாம்?


நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Kingdom Marriage

திருமணம் என்பது மிகுந்த சந்தோஷங்களுடனும் பெரும் சவால்களுடனும் வருகிறது. இதற்கு பெரும்பான்மையான காரணம் நமது திருமணத்தின் தேவ சித்தத்தை மறந்ததே. நமது திருமணத்தில் நாம் தேவனை நீக்கிவிட்டு அதை மகிழ்ச்சியின் அடிப்படையில் வரைய...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காகத் தி அர்பன் ஆல்டர்நேட்டிவ் (டோனி எவன்ஸ்)க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து கீழே சொடுக்கவும்: https://go.tonyevans.org/portrait-of-a-christian-family

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்