திட்ட விவரம்

திருமணம் என்னும் இராஜ்ஜியம்மாதிரி

Kingdom Marriage

5 ல் 1 நாள்

ஒரு தம்பதி தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவிக்கும் போது, ​​பெரும்பாலான மக்கள் "அவர்களின் கதையை" கேட்க விரும்புகிறார்கள். எப்படி சந்தித்தார்கள்? முதல் பார்வையில் காதலா? அவர்கள் குழந்தை பருவத்தில் இருந்து தெரிந்தவர்களா? அல்லது பிற்காலத்தில் சந்தித்தார்களா? எது எப்படியிருந்தாலும், ஒரு ஜோடியின் மூலக் கதை நம்மைக் கவர்கிறது.



திருமணத்தின் மூலக் கதையை நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் ஆரோக்கியமான மணவாழ்க்கை வாழ விரும்பினால், முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது திருமணம் என்பது தேவனின் கருத்து. அவர் அதை உருவாக்கியதால், அதன் வரையறை மற்றும் புரிதலுக்காக நாம் அவரிடம் செல்ல வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், உங்கள் திருமணம், அதன் மூலக் கதை எதுவாக இருந்தாலும், அது தேவனின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்படும்போது, ​​உங்கள் உறவு செழித்து, தேவன் விரும்பிய அனைத்தையும் செய்யும் ஒரு தேவ சித்ததிற்குள்ளான உறவாக அமையும்.



மனித வரலாற்றில் தம்முடைய ராஜ்யத்தை விரிவுபடுத்துவதற்காகவே தேவன் திருமணத்தை உருவாக்கினார் என்பதை வேதத்திலிருந்து நாம் காண்கிறோம். ஒரு ராஜ்ய திருமணம் என்பது " மணமக்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு முயற்சியின் மூலம் தேவனின் சாயலைப் பிரதிபலிப்பதற்காகவும், உலகில் அவருடைய ஆட்சியை விரிவுபடுத்துவதற்காகவும் தெய்வீக அதிகாரத்தின் கீழ் ஒற்றுமையாக செயல்பட தங்களை ஒப்புக்கொடுக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஒரு ஒன்றிய உடன்படிக்கை." இது ஒரு வாய்மொழி, எனவே நீங்கள் திரும்பிச் சென்று மீண்டும் படிக்க விரும்பலாம். ஆனால் எளிமையாகச் சொன்னால், வரலாற்றில் தேவனின் உருவத்தைப் பிரதிபலிப்பதும், மனிதகுலத்தை ஆட்சி செய்ய அனுமதிக்கும் அவருடைய கட்டளையை நிறைவேற்றுவதும் திருமணத்தின் நோக்கம்.



எனவே, திருமணம் என்பது ஒரு சமூகக் கட்டமைப்பு மட்டுமல்ல. மகிழ்ச்சியும் அதன் குறிக்கோள் அல்ல. இன்று பல திருமணங்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. தம்பதிகள் சமூக மற்றும் உணர்ச்சிபூர்வமான விதிமுறைகள் மூலம் மட்டுமே திருமணத்துடன் தொடர்பு கொள்கிறார்கள். திருமணத்தைப் பற்றிய வேதாகம புரிதலுக்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டும். அவருடைய சாயலைப் பிரதிபலிக்கவும் அவருடைய ராஜ்யத்தை முன்னேற்றவும், தேவன் அதை ஒரு புனிதமான உடன்படிக்கையாகப் படைத்தார். மகிழ்ச்சி என்பது திருமணத்தின் பலன், ஆனால் அது திருமணத்தின் குறிக்கோள் அல்ல. பூமியில் அவருடைய ராஜ்யத்தை முன்னேற்றுவதன் மூலம் தேவனை பிரதிபலிப்பதே குறிக்கோள். வேதாகம குறிக்கோளைப் பின்தொடரும்போது மகிழ்ச்சியானது இயற்கையான வளர்ச்சியாக நிகழ்கிறது.



அடிப்படை என்னவென்றால், திருமணம் என்பது ஒரு ராஜ்ஜியத்தின் தத்துவம், சமூகம் தத்திவம் மட்டும் அல்ல.



சந்தோஷத்தை திருமணத்தின் குறிக்கோளாக ஆக்குவது எப்படி ஒருவரின் திருமணத்தில் பிரச்சனைகளை உருவாக்குகிறது?






ராஜ்ய திருமணத்தைப் பற்றி நீங்கள் படித்து மகிழ்ந்திருந்தால், "ஒரு கிறிஸ்தவ குடும்பத்தின் உருவப்படம்" என்ற தலைப்பில் டாக்டர் டோனி எவன்ஸின் பாராட்டுப் பிரசங்கத்தின் mp3ஐ பதிவிறக்கம் செய்ய மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.


நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Kingdom Marriage

திருமணம் என்பது மிகுந்த சந்தோஷங்களுடனும் பெரும் சவால்களுடனும் வருகிறது. இதற்கு பெரும்பான்மையான காரணம் நமது திருமணத்தின் தேவ சித்தத்தை மறந்ததே. நமது திருமணத்தில் நாம் தேவனை நீக்கிவிட்டு அதை மகிழ்ச்சியின் அடிப்படையில் வரைய...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காகத் தி அர்பன் ஆல்டர்நேட்டிவ் (டோனி எவன்ஸ்)க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து கீழே சொடுக்கவும்: https://go.tonyevans.org/portrait-of-a-christian-family

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்