திட்ட விவரம்

திருமணம் என்னும் இராஜ்ஜியம்மாதிரி

Kingdom Marriage

5 ல் 2 நாள்

திருமணம் என்னும் இராஜ்ஜியம் என்ற சொல் ஒரு ராஜ்ஜியம் இருப்பதைக் நமக்கு தெளிவுபடுத்துகின்றது. ஒரு ராஜ்யம் இருந்தால், ஒரு ராஜா இருக்கிறார் என்பது அனுமானம். ஒரு ராஜா இருந்தால், ராஜா ஆட்சி செய்யும் குடிமக்கள் இருக்கிறார்கள் என்பதும் அனுமானம். இறுதியாக, ராஜ்யத்தில் குடிமக்கள் இருந்தால், அவர்கள் வாழ வேண்டிய விதிகள் உள்ளன என்பது அனுமானம். எனவே, திருமணம் என்னும் இராஜ்ஜியம் என்று சொல்லும்போது, ​​ராஜ்யத்தின் விதிமுறைகள்படி செயல்படும் திருமணத்தைக் குறிப்பிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட ராஜ்யம். தேவனின் ராஜ்யம்.



வேதாகமம் முழுவதும், தேவனுடைய ராஜ்யம் என்பது அவருடைய ஆட்சி அல்லது அதிகாரத்தைக் குறிக்கிறது. அவருடைய ஆட்சியை விவரிக்க வேதம் பயன்படுத்தும் மற்றொரு வார்த்தை இறையாண்மை. தேவன் எல்லாவற்றுக்கும் முற்றிலும் அதிகாரியாக இருக்கிறார், மேலும் அவரது இராஜ்ஜியம் அனைத்தையும் உள்ளடக்கிய நோக்கத்தைக் கொண்டுள்ளது, அதாவது இவ்வுலகமும் அதில் உள்ள எல்லாமும் மற்றும் அனைவரும் அவரை மகிமைப்படுத்த வேண்டும் என்பதே அந்த நோக்கம். வேதாகமத்தில் ஒருங்கிணைந்த மற்றும் மையக் கருப்பொருளே தேவனுடைய ராஜ்யத்தை நாம் அவரை மகிமைப்படுத்துவதின் மூலம் பிரசித்திப்படுத்துவதே. திருமணமானது அவருடைய ராஜ்யத்தின் கீழ் வருவதால், அவரை மகிமைப்படுத்வே அதுவும் இருப்பதாக நாம் முடிவு செய்யலாம்.



இருப்பினும், தேவனுக்கு மகிமை கொடுப்பதை மனிதர்கள் தொடர்ந்து எதிர்க்கிறார்கள். சிருஷ்டியானது தேவனின் மகிமையை ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்துகிறது, அவர் அதைப் படைத்ததைப் போலவே. ஆனால் மனிதர்கள் தமக்கான பெருமையை விரும்புவதாகத் தெரிகிறது. நாம் காரியங்களை நம் வழியில் செய்ய விரும்புகிறோம், தேவனின் வழியில் அல்ல. பல விசுவாசிகள் தங்கள் திருமணத்தில் போராடுகிறார்கள், ஏனென்றால் தங்களது திருமணத்தின் மூலம் அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதை விட்டு விட்டு திருமணத்தின் மூலம் தங்கள் ஆசைகளை திருப்திப்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் மகிழ்ச்சி, தோழமை, நிதி, பாலியல் திருப்தி மற்றும் திருமணத்தால் வரும் வேறு பல நன்மைகளில் அதிக அக்கறை கொண்டுள்ளனர், அதே நேரத்தில் தேவனால் நியமிக்கப்பட்ட நோக்கத்தை மறந்துவிடுகிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனின் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவதை விட்டு விட்டு தேவன் அவர்களின் நிகழ்ச்சி நிரலை ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.



ஆனால் தேவனுக்குள்ளான திருமணம் அப்படி அல்ல. ஒரு கணவனும் மனைவியும் அவருடைய ஆட்சிக்கு கீழ்ப்படிந்து இருக்கும் போது, பார்க்கும் உலகத்திற்கு முன்மாதிரியாக, அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை முன்னேற்ற உதவுகிறார்கள், மேலும் அவர் மகிமைப்படுத்தப்படுகிறார்



நமது சமகால கலாச்சாரம் எந்த வழிகளில் உங்கள் திருமணத்தை சுயநிறைவுக்கான நிகழ்ச்சி நிரலாக வடிவமைத்துள்ளது?


நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Kingdom Marriage

திருமணம் என்பது மிகுந்த சந்தோஷங்களுடனும் பெரும் சவால்களுடனும் வருகிறது. இதற்கு பெரும்பான்மையான காரணம் நமது திருமணத்தின் தேவ சித்தத்தை மறந்ததே. நமது திருமணத்தில் நாம் தேவனை நீக்கிவிட்டு அதை மகிழ்ச்சியின் அடிப்படையில் வரைய...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காகத் தி அர்பன் ஆல்டர்நேட்டிவ் (டோனி எவன்ஸ்)க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து கீழே சொடுக்கவும்: https://go.tonyevans.org/portrait-of-a-christian-family

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்