திட்ட விவரம்

கிரேக் மற்றும் ஏமி கிரோஸ்செல் அவர்களின் இந்த நாள் முதல்மாதிரி

Craig & Amy Groeschel’s From This Day Forward

7 ல் 1 நாள்

“இந்த நாள் முதல்” இப்போது நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று எப்போதாவது கனவு கண்டிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கை துணைவர் எப்படிப் பட்டவராக இருப்பார்? நீங்கள் இருவரும் எப்படிப் பட்ட உறவில் இருக்கப் போகிறீர்கள்? பிள்ளைகள் பெற்றுக் கொள்ள போகிறீர்களா? எங்கே வாழப் போகிறீர்கள்? இப்போது உங்களுக்கு இருக்கும் வாழ்க்கையை யோசித்து பாருங்கள். நிஜ வாழ்க்கை நம் கனவுகளை போல இல்லாவிட்டால் நாம் அதை பற்றி என்ன செய்யலாம்? "வாழ்விலும் தாழ்விலும், இம்மையிலும் மறுமையிலும், சுகத்திலும் சுகவீனத்திலும்" போன்ற வாக்கியங்கள் அனேக திருமண வாக்குகளில் சொல்லப்படுகின்றன. உறவுகளில் அப்படிப்பட்ட காரியங்கள் தான் இருக்கின்றன. எப்படிப்பட்ட சூழ்நிலைகளாலோ, தேர்ந்தெடுப்புகளாலோ, குறைகளாலோ, வியப்புகளாலோ கனவு போல் இல்லாத நிஜ வாழ்க்கையில் இருந்தாலும், பின் நோக்கி பார்ப்பதால் அது மேம்பட போவதில்லை. இப்போதிலிருந்து ஒரு மேம்பட்ட எதிர்காலத்திற்கு தான் ஒப்புவிக்க முடியும் — “இந்த நாள் முதல்” கனவில் நினைத்தது போல திருமண வாழ்க்கை அமைவது எளிது என்றால், உங்கள் திருமண வாழ்க்கை அப்படி தானே இருக்கும்? அதற்கு உங்களுக்கு பெலன் இல்லை என்றால், எப்போதும் போதுமான கிறிஸ்துவின் பெலனை சார்ந்திருக்க கற்றுக்கொள்ளவேண்டும். என் அன்பு எல்லாம் வற்றி போய் விட்டது என்று எண்ணக்கூடிய சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் என்றுமே வற்றாத தேவனின் அன்பை நீங்கள் சார்ந்திருக்கலாம். நாம் சேர்ந்து ஜெபிப்போம்: நாங்கள் வாழும் ஒவ்வொரு நாளும் உம்மிடமிருந்து வரும் ஈவு என்பதால், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஆரம்பம் என்பதால் உமக்கு நன்றி. கடந்ததை மன்னித்து மறக்க உதவி செய்யும். எங்கள் பெலவீனங்களில் உம் பெலனை காண இன்று, நாளை, அதன் பின் வரும் ஒவ்வொரு நாளும் உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். அமென்.
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Craig & Amy Groeschel’s From This Day Forward

ஒரு மேன்மையான திருமண வாழ்க்கை உங்களுக்கு ஏற்பட முடியும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் தான் நாளை உங்களுக்கு அமையும் திருமண வாழ்வை நிர்ணயம் செய்யும். பாஸ்டரும் நியூ யார்க் டைம்ஸ் அதிக விற்பனையாகும் எழுத்தாளருமான கிரேக...

More

இந்த திட்டத்தை வழங்கும் ஜான்டர்வேன், ஹார்பர்காலின்ஸ், மற்றும் Life.Church  அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய http://www.zondervan.com/from-this-day-forward க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்