குணமாகுதல்
மனநலமும் உடல்நலமும் எப்படித் தொடர்புடையவை?
விஞ்ஞானபூர்வமாக மனநலத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருப்பது உண்மை என்பதை நாம் பலரும் அறிந்திருப்போம். இதைப்பற்றி நம் ஆண்டவர் வேதாகமத்தில் என்ன கூறியிருக்கிறார் என்பதை இந்த திட்டத்தில் ஆராய்ந்து பார்ப்போம். வாருங்கள்.
கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!
அகித்தோப்பேல் தாவீது ராஜாவின் ஒரு நம்பிக்கையான ஆலோசகராக இருந்தான். ஆனால், அவனுக்கு இருந்த கசப்புத் தன்மையால் அப்சலோமின் சதித்திட்டத்துடன் ஒருங்கிணைந்து தாவீதுக்கு துரோகம் செய்தான். இறுதியில் தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக் கொண்டான். மனக்கசப்பு உன்னைக்கொல்ல விடாதபடி, அதன் காரணங்களையும், குணப்படுத்தும் முறையையும் இந்த ஐந்து நாட்கள் தியானப்பகுதியில் படித்து பயன் பெறுங்கள்.
ஆவிக்குரிய யுத்தத்திற்கான திட்டம்
இந்த சக்திவாய்ந்த போதனைகள் மூலம், எதிரிகளை முந்திக்கொண்டு தோற்கடிப்பதற்கான ஒரு தந்திரத்தினை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய ஆழமான புரிதலை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள், மேலும் உங்கள் வாழ்க்கையை அழிப்பதற்கான அவனது திட்டத்தை முறியடிப்பீர்கள்.
இயேசுவைபோல நேசியுங்கள்
நாம் இயேசுவை முதலாவது நேசிக்காமல் அவரைப்போல வாழ எப்படி கற்றுக்கொள்ளமுடியும்? Life.Church ஊழியர்கள் மற்றும் அவர்கள் தம்பதிகளோடு சேர்ந்து வாசியுங்கள். இதன்மூலம் இயேசுவைபோல் வாழவும் நேசிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் வேதவசனங்களையும் அனுபவங்களையும் தெரிந்துகொள்வீர்கள்.
தவறான முறையில் பயன்பாடு
எந்த மனிதனும் எப்போதும் தவறாக பயன்படுத்தப்பட தகுதி உடையவர் அல்ல. தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் அன்பு செய்யப்படவேண்டும் என்றும் கவனிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார். எந்த தவறோ, குறையோ, மன வேற்றுமையோ ஒருவரின் சரீர, பாலியல், அல்லது உணர்ச்சிபூர்வமான ரீதியில் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு காரணமாக கூடாது. ஒவ்வொரு தனி நபரும் நீதி, அன்பு, மற்றும் ஆறுதல் பெற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை ஊர்ஜிதப்படுத்த இந்த 7-நாள் வாசிப்பு திட்டம் உதவுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர் - கிறிஸ்துவில் உள்ள பெண்ணின் மறைக்கப்பட்ட உண்மை
பெண்களாகிய நாங்கள் பல்வேறு பாத்திரங்களை வாழ்க்கையில் சமன்படுத்துவதில் எப்போதும் ஆழ்ந்திருக்கிறோம். ஆனால் இந்த பிஸியான நேரத்தில், நம்முடைய ஆழமான அடையாளத்தை நினைவில் கொள்ளுவது முக்கியம்: தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் அல்லது கிறிஸ்துவின் பெண்கள். இந்த அடையாளம் நமது வாழ்க்கையின் அடித்தளம் ஆகும், அது தேவனுடனும் மற்றவர்களுடனும் நமது உறவுகளை உருவாக்குகிறது. இந்த அடையாளத்தை மேலும் விரிவாக ஆராய நாம் வரும் மூன்று நாட்களில் எங்களுடன் சேரவும்!
நம்மை புண்படுத்தியவரை மன்னிப்பது
நாம் உணர்ச்சி அல்லது உடல் ரீதியான காயங்களால் அல்லல் பட்டாலும், மன்னிப்பதே கிறிஸ்தவ வாழ்க்கையின் மூலக்கல்லாகும். இயேசு கிறிஸ்து அனைத்து வகையான அநியாயங்கள் மற்றும் அநீதிகளை அனுபவித்தார், அதுவும் நேர்மைகேடான மரணம் வரையும். ஆயினும், அவரது இறுதி நேரத்தில் மற்ற சிலுவையில் கேலி செய்த திருடனையும், அவரது வதகன்களையும் மன்னித்தார்.
ஒற்றுமையின் வலிமை
மற்ற இன மக்களை ஏற்றுகொள்வது என்பது வேறு, அனைவரும் ஒரே இனமாக ஒற்றுமையாக வாழ்வது என்பது வேறு. இன்றைக்கு மக்கள் அநேகர் முந்தின வகையை சேர்ந்தவராகவே இருக்கின்றனர். நம்மை காட்டிலும் வேறுபட்ட இனமக்களையும் நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனாலும் அவர்கள் வேற்றினத்தை சேர்ந்தவர்கள் என்பது நமது சிந்தையில் நீங்காமல் இருக்கும். ஒருவேளை நீங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக சமுக உணர்வுகளில் நடத்தப்படும் பேரணிகள், போராட்டங்களில் கூட கலந்துகொள்பவராக இருக்கலாம். ஆனால், அந்த நிகழ்ச்சி நிறைவுறும்போது, அவரவர் தங்கள் தங்கள் வழிகளில் சென்று தங்கள் அலுவல்களை வழக்கம் போல தொடர ஆரம்பித்து விடுவார்கள். எனவே அனைத்து தரப்பு மக்களிடையே வேற்றுமை உணர்வுகள் முற்றிலும் களைந்த உண்மையான ஒற்றுமையை ஏற்படுத்த, 'ஒருவரை ஒருவர் புன்முறுவலோடு சந்திப்பது, வணக்கம் சொல்வது' ஆகிய எளிமையான செயல்களை தாண்டின ஏதோ ஒன்று அவசியப்படுகிறது. இந்த 4 நாட்கள் தியான திட்டத்தில் Dr. டோனி இவான்ஸ் அவர்கள் வேதாகமம் கற்றுக்கொடுக்கும் ஒற்றுமையை குறித்து நமக்கு போதிப்பார்கள்.
தூக்கமின்மை
தூக்கமில்லாத இரவுகளை நீ சந்தித்த அனுபவம் உனக்கு உண்டா? போதிய அளவு தூங்க வேண்டும் என்று நீ நினைக்கும்போது, அது நடக்கவில்லை என்றால் என்ன செய்வது? இப்படி எனக்கு பல முறை நடந்ததுண்டு. மனச்சோர்வுடன் போராடியபோதும் அதற்குப் பிறகும் எனக்கு அப்படித்தான் நடந்தது. இந்தத் தொடரில் எனது அனுபவங்களையும் எண்ணங்களையும் உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.