ஓசியா 6

6
மனம் மாறாத இஸ்ரயேல்
1வாருங்கள், நாம் கர்த்தரிடம் திரும்புவோம்.
அவர் நம்மைத் துண்டுகளாக்கினார்,
ஆயினும், அவரே நம்மை குணப்படுத்துவார்.
அவர் நம்மைக் காயப்படுத்தினார்,
ஆயினும், அவரே நம்முடைய காயங்களுக்குக் கட்டுப் போடுவார்
2நாம் அவருடைய பிரசன்னத்தில் பிழைத்திருக்கும்படி
இரண்டு நாட்களுக்குப் பின்பு அவர் நமக்குப் புத்துயிரூட்டுவார்;
மூன்றாம் நாளிலோ நம்மை எழுப்புவார்.
3நாம் கர்த்தரை அறிந்துகொள்வோமாக;
நாம் தொடர்ந்து அவரைப்பற்றி அறிய முயற்சிப்போமாக.
சூரியன் உதிப்பது நிச்சயம் போல,
அவர் தோன்றுவார் என்பதும் நிச்சயம்.
அவர் மழையைப் போல்,
பூமியை நனைக்கும் வசந்தகால மழையைப் போல் வருவார்.
4எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்?
யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்?
உங்களது அன்பு காலையில் தோன்றும் மேகம் போலவும்,
விடியும்போது மறைந்துபோகும் பனி போலவும் இருக்கின்றது.
5அதனால்தான் நான் இறைவாக்கினர் மூலமாய் உங்களை வெட்டிப் போட்டேன்;
என் வாயின் வார்த்தையினால் உங்களைக் கொன்றேன்;
என் நியாயத்தீர்ப்பு உங்கள்மீது ஒளி போல் வெளிப்படும்.
6நான் பலியை அல்ல, இரக்கத்தையே#6:6 இரக்கத்தையே நிலையான அன்பு விரும்புகின்றேன்;
தகனபலிகளை அல்ல, இறைவனை அறியும் அறிவையே விரும்புகின்றேன்.
7ஆனால், ஆதாமைப் போல்#6:7 ஆதாமைப் போல் – இது ஆதாமைக் குறிப்பதாகவோ அல்லது பொதுவாக மனிதர்களைக் குறிப்பதாகவோ இருக்கலாம். அவர்கள் என் உடன்படிக்கையை மீறி,
அங்கே எனக்கு துரோகம் செய்தார்கள்.
8கீலேயாத் கொடுமையானவர்களின் பட்டணம்;
அது இரத்தம்படிந்த காலடித் தடயங்களால் கறைப்பட்டிருக்கிறது.
9ஒருவனுக்காகக் கொள்ளையர் கூட்டம் பதுங்கிக் காத்திருப்பது போல,
மதகுருக்களின் கூட்டமும் இருக்கின்றது.
அவர்கள் சீகேம் பட்டணத்துக்குச் செல்லும் வீதியில் கொலைசெய்து,
வெட்கக்கேடான குற்றங்களை செய்கின்றார்கள்.
10இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் கொடூரமான செயலைக் கண்டேன்;
எப்பிராயீமோ தகாத உறவில் ஈடுபட்டிருக்கிறது,
இஸ்ரயேல் கறைப்பட்டிருக்கிறது.
11யூதாவே, உனக்கும்
ஒரு அறுவடை நியமிக்கப்பட்டிருக்கிறது.
“என் மக்களின் செல்வங்களை நான் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும்போது,#6:11 இந்த வசனத்தின் பிற்பகுதி அடுத்த அதிகாரத்தோடு இணைத்து வாசிக்கப்பட வேண்டும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஓசியா 6: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்