எபேசியர் 6:10-18

எபேசியர் 6:10-18 TAOVBSI

கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எபேசியர் 6:10-18

தேவனின் சர்வாயுத வர்க்கம் எபேசியர் 6:10-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

தேவனின் சர்வாயுத வர்க்கம்

6 நாட்களில்

"தேவனின் சர்வாயுத வர்க்கம் எபே 6:10-18 இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, ஆன்மீகத் தயார்நிலைக்கான ஒரு சக்திவாய்ந்த உருவகக் கட்டமைப்பாகும். ஆன்மீக சவால்களை எதிர்கொள்ள விசுவாசிகள் தினசரி செய்ய வேண்டிய அத்தியாவசிய கூறுகளை இது குறிக்கிறது. ஒவ்வொரு பகுதியும் - சத்தியம் என்னும் அரைக்கச்சை, நீதி என்னும் மார்க்கவசம், சமாதானத்தின் நற்செய்தியின் பாதரட்சை, விசுவாசம் என்னும் கேடகம், இரட்சிப்பு என்னும் தலைச்சீரா மற்றும் தேவ வசனம் என்னும் பட்டயம் - தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆயுதங்களாகச் செயல்படுகின்றன. சிக்கலான உலகில் நம்பிக்கை மற்றும் கண்ணுக்குத் தெரியாத யுத்தங்களுக்கு தனிநபர்களை ஆயத்தப்படுத்துகின்றன.