யோவான் 5:24-30

யோவான் 5:24-30 TCV

“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவர்கள் யாரோ, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுவதில்லை; அவர்கள் மரணத்தைக் கடந்துசென்று ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறார்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. இக்காலத்திலேயே மரித்தவர்கள் இறைவனுடைய மகனின் குரலைக் கேட்பார்கள்; அதைக் கேட்கிறவர்கள் ஜீவனைப் பெறுவார்கள். பிதா தம்மில்தாமே ஜீவனாய் இருப்பதுபோல, மகனும் தம்மில்தாமே நித்திய ஜீவனாய் இருக்கும்படி செய்கிறார். நான் மானிடமகனாய் இருப்பதால், நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் அதிகாரத்தையும் பிதா அவருக்கே கொடுத்திருக்கிறார். “இதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம். ஏனெனில் காலம் வருகிறது, கல்லறைகளில் இருக்கிறவர்கள் எல்லோரும் மானிடமகனுடைய குரலைக் கேட்டு, வெளியே வருவார்கள். நல்ல செயல்களைச் செய்தவர்கள் ஜீவன் பெறும்படி எழுந்திருப்பார்கள். தீய செயல்களைச் செய்தவர்கள் தண்டனைத் தீர்ப்பைப் பெறும்படி எழுந்திருப்பார்கள். சுயமாய் நான் எதையும் செய்ய முடியாதிருக்கிறேன்; பிதா சொல்கிறபடி மட்டுமே நான் நியாயத்தீர்ப்பு கொடுக்கிறேன். எனது நியாயத்தீர்ப்பு நீதியானது. ஏனெனில் நான் என் சித்தத்தை அல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தை நிறைவேற்றவே நாடுகிறேன்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 5:24-30

கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது - 7 நாள் வீடியோ திட்டம் யோவான் 5:24-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது - 7 நாள் வீடியோ திட்டம்

7 நாட்களில்

கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது" என்ற எங்கள் டிஜிட்டல் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் கிறிஸ்மஸின் உண்மையான உணர்வை அனுபவிக்க முடியும். இந்த சிறப்பு நிகழ்ச்சி லுமோ கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் எழுச்சியூட்டும் காட்சிகள் மூலம் இயேசுவின் கதையை ஆராய்கிறது. தனிப்பட்ட சிந்தனை, அர்த்தமுள்ள உரையாடல்கள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. பல மொழிகளில் வழங்கப்படும், இது கிறிஸ்துமஸ் சீசன் முழுவதும் இந்த மகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து கொள்ள அனைத்து பின்னணியிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கிறது.

கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது - 14 நாள் வீடியோ திட்டம் யோவான் 5:24-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது - 14 நாள் வீடியோ திட்டம்

14 நாட்களில்