மதகுருக்களே, துயரஆடை அணிந்து புலம்புவீர்களாக!
பலிபீடத்தின் முன்னால் பணி செய்வோரே,
கதறி அழுவீர்களாக!
என் இறைவனின் முன் ஊழியம் செய்வோரே,
இறைவனின் வீட்டுக்குச் சென்று, துயரஆடை அணிந்து, அங்கே இரவைக் கழிப்பீர்களாக!
ஏனெனில் உங்கள் இறைவனது இல்லத்திலிருந்து
தானியபலிகளும் பானபலிகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.