1
ஆபகூக் 1:5
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
“இனங்களைக் கவனித்துப் பாருங்கள், பார்த்து முழுவதுமாய் வியப்படையுங்கள். உங்களுக்குச் சொன்னாலும், உங்களால் நம்பமுடியாத ஒரு செயலை, உங்கள் நாட்களிலேயே நான் செய்யப் போகின்றேன்.
ஒப்பீடு
ஆபகூக் 1:5 ஆராயுங்கள்
2
ஆபகூக் 1:2
கர்த்தரே, நான் எவ்வளவு காலத்துக்கு உதவி கேட்டு உம்மை அழைக்க வேண்டும்? நீரோ இன்னும் செவிசாய்க்காமல் இருக்கின்றீரே. எவ்வளவு காலத்துக்கு உம்மிடம், “வன்முறை” எனக் கதறவேண்டும்? இன்னும் எம்மைக் காப்பாற்றாமல் இருக்கின்றீரே.
ஆபகூக் 1:2 ஆராயுங்கள்
3
ஆபகூக் 1:3
நீர் ஏன் என்னை அநீதியைப் பார்க்கும்படி செய்கின்றீர்? ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொண்டிருக்கின்றீர்? எங்கு பார்த்தாலும் அழிவும் வன்முறையுமாக இருக்கின்றன; சண்டையும் சச்சரவும் பெருகிக்கொண்டு செல்கின்றன.
ஆபகூக் 1:3 ஆராயுங்கள்
4
ஆபகூக் 1:4
ஆதலால் சட்டம் வலுவிழந்துள்ளது, நீதி ஒருபோதும் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. கொடுமையானவர்கள் நேர்மையானவர்களை ஒடுக்குகின்றார்கள். அதனால் நீதி புரட்டப்படுகிறதே.
ஆபகூக் 1:4 ஆராயுங்கள்