உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்Sample

வேரிலிருந்து சரிசெய்தல்
இன்று, "சமாதானம் மற்றும் மன்னிப்புக்கான பாதை" என்ற தலைப்பை அடிப்படையாகக் கொண்ட நமது தொடரை நாம் தியானிக்கப் போகிறோம்.
ஆண்டவரோடும், நம்மைச் சுற்றியுள்ளவர்களோடும், தேவன் நம்மிடம் விரும்பும் ஒப்புரவாகுதலை சரியான விதத்தில் அணுகும் திறவுகோல்களில் ஒன்றை நாம் பார்ப்போம்:
மூலப் பிரச்சனைகளை வேரறுப்பது. உறவு முறிவில் மூலவேர்தான் முக்கிய காரணம். இது மற்றவர்களிடம் உண்மையாக மனம் திறக்க இயலாத சூழலாக இருக்கலாம், எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் உன்னுள் நீ வைத்திருக்கும் கசப்பாக இருக்கலாம் அல்லது காயப்படுத்தப்பட்ட பிறகு முன்னோக்கிச் செல்ல இயலாமல் அல்லது விருப்பமில்லாமல் இருக்கலாம்.
ஆனால், உனக்கான ஒரு நல்ல செய்தி என்னிடம் உண்டு: உன் செயல்கள் மற்றும் எண்ணங்களுக்கான பொறுப்பை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்பதும், உன் சூழ்நிலையில் ஆண்டவரைக் கிரியை செய்ய அனுமதிப்பது எப்படி என்பதும் உனக்குத் தெரிந்திருந்தால், நீ ஏற்கனவே சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறாய் என்றுதான் அர்த்தம்!
கர்த்தர் இன்று உன்னை உற்சாகப்படுத்த விரும்புகிறார்: "எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்." (நீதிமொழிகள் 4:23)
சூழ்நிலைகள் எவ்வாறாயினும், ஆண்டவர் ஒருபோதும் தம்முடைய நிலையிலிருந்து மாறுவதில்லை: அவர் உன்னை நேசிக்கிறார், அவர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார். விசுவாசத்தோடு முதல் அடியை எடுத்து வைத்து, அவரை முழுமனதோடு தேடு, அப்போது உன் பிதா தம்மை உனக்கு வெளிப்படுத்துவார்!
இன்று உன் முழு மனதுடன் நீ அவரை நம்பும்படி நான் உனக்கு அழைப்பு விடுக்கிறேன்!
Scripture
About this Plan

சண்டை சச்சரவுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன; அதற்காக, கசப்பான மற்றும் முறிந்த உறவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அதன் அர்த்தமல்ல. ஆனாலும் மற்றவர்களுடனான நமது உறவை நாம் சரிசெய்து குணப்படுத்துவதற்கு முன்பு, ஆண்டவருடனான நமது உறவை அவர் குணப்படுத்த நாம் இடங்கொடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தில், ஒப்புரவு என்ற அற்புதத்தை இயேசு எவ்வாறு செய்கிறார் என்பதைப் பார்க்க உங்களை அழைக்கிறோம். மனந்திரும்புதல், பரிகாரம் மற்றும் மன்னிப்பு ஆகிய அடிப்படைக் காரியங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் சண்டை சச்சரவை சமாளிப்பதைத் தாண்டி விடுதலை மற்றும் குணமடைதலுக்குக் கடந்து செல்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இந்தத் திட்டத்தின் மூலம் உறவில் உள்ள சிக்கல்களை எவ்வாறு கண்டறிவது என்பதைப் புரிந்துகொண்டு, நல்ல தீர்வுகளைக் கண்டறிந்து, மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதல் ஆகிய செயல்முறைகளின் வாயிலாக உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுவீர்கள்.
More
Related Plans

Peter, James, and John – 3-Day Devotional

Messengers of the Gospel

Connecting With the Heart of Your Child

Built for Impact

Multivitamins - Fuel Your Faith in 5-Minutes (Pt. 3)

40 Rockets Tips - Workplace Evangelism (31-37)

Growing Your Faith: A Beginner's Journey

Moses: A Journey of Faith and Freedom

Sowing God's Word
