YouVersion Logo
Search Icon

அழைப்புSample

அழைப்பு

DAY 2 OF 3

ஆனால் அவர் ஏன் என்னை அழைக்கிறார்?

ஒரு “சரீரத்திற்கு” எல்லா அவயவமும் அவசியம் – சரீரம் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, அவயவங்கள் ஒன்றுக்கொன்று அவசியமாகின்றன.

கிறிஸ்துவின் சரீரமாகிய சபை பலதிறப்பட்ட வரங்களைக் கொண்ட பல்வேறு மனிதர்களைக் கொண்டுள்ளது. சபை “சபையாக” இருக்க அந்த வரங்கள் அனைத்துமே அவசியம்.

நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, பாதுகாக்க வேண்டும்.

சபையின் எந்தவொரு பகுதியும் தானாகவே சரிவர செயல்பட முடியாது. உங்கள் பங்கு மிகக் குறைவானது என்று நினைப்பீர்கள் என்றால், அது சத்துருவிடமிருந்து வரும் பொய்யே தவிர வேறொன்றுமில்லை. ஏனென்றால் ஒவ்வொரு அவயவமும் இன்றியமையாதது.

நீங்கள் மிக முக்கியமானவர்!

கால்விரல்கள், கைவிரல்கள் அல்லது கை இல்லாத ஒரு சரீரத்தை யோசித்துப் பாருங்கள்.

அல்லது அதிலும் மோசமாக, ஒரு சரீரத்தில் காதுகள் மட்டும் இருந்தால் எப்படி இருக்கும் ... பயங்கரமாக இருக்கும் அல்லவா?

ஒருவேளை, “ஒரு பல்லோ அல்லது சில கால்விரல்களோ இல்லாவிட்டாலும் சரீரம் இயங்குமே” என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால், முழுச் சரீரமும் இல்லாவிட்டால் அந்தப் பல்லும், கால்விரலும் இருந்து என்ன பயன்?

மற்றொரு அவயவத்தைப் பார்த்து, “உனக்கு ஒரு மதிப்பும் இல்லை, அதனால் நீ எங்களுக்குத் தேவையில்லை” என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் “நாம்” கனவீனமாக “நினைக்கும்” அவயவங்களுக்கு தேவன் மிகப்பெரிய கனம் கொடுக்கிறார் என்பதுதான் உண்மை. அந்த அவயவங்கள் தாங்கள் செய்வதை மிகத் தாழ்மையுடன் செய்வதால் கனம் பெற்றுக்கொள்கின்றன.

முழுச் சரீரமும் முழுமையாகச் செயல்பட வேண்டியது அவசியம்.

இதில் முக்கியமானது என்னவென்றால், சபையில் உள்ளவர்கள் அனைவரும் தேவனுடைய அன்பின் நற்செய்தியை பகிர்ந்துகொள்ளும் மேலான ஒரு நோக்கத்திற்காக ஒன்று சேர்ந்து பணியாற்றுகிறார்கள். நாம் அனைவரும் எப்போதும் ஒரேவிதமாக ஆயத்தமாக இருக்கமாட்டோம் என்றாலும், தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் வரங்களையும், தாலந்துகளையும் எந்த அளவுக்குப் பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்குப் பயன்படுத்தி, இந்த அழைப்புக்கு நாம் அனைவரும் சம அளவில் அர்ப்பணிப்பது அவசியம்.

ஒவ்வொரு அவயவமும் பூரணமாக வடிவமைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு அவயவமும் அவசியமே.

நீங்கள் முக்கியமானவர்.

பல அவயவங்களைக் கொண்ட ஒரே சரீரமாக இருக்கும் நமக்கு ஒரே இலக்கு உண்டு – அது அவருடைய ராஜ்யத்தைக் காண வேண்டும் என்பதே!

வாரும், ஆண்டவராகிய இயேசுவே, வாரும்!

About this Plan

அழைப்பு

அழைப்பு என்பது ‘ஸீரோ கான்’ மாநாட்டில் பிறந்த வேதாகமத் திட்டம். அது, ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் தேவனுடைய அன்பைப் பகிர்ந்துகொள்வதற்கான தேவனுடைய அழைப்புக்கு இணங்குவதில் கவனம் செலுத்தும் 3-நாள் பயணம்; நாம் இப்போதிருக்கும் நிலையில் தொடங்கி, கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கம்வகிக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் முக்கியத்துவத்தையும் அறிந்துணர்ந்து, நம்முடைய வரங்களையும், தாலந்துகளையும் கொண்டு பிறருக்கு சிறப்பாக சேவை செய்வதைப் பற்றியது.

More