YouVersion Logo
Search Icon

அழைப்புSample

அழைப்பு

DAY 1 OF 3

அழைப்பின் சத்தம் கேட்கிறதா?

நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு அழைப்பு உண்டு – அது புறப்பட்டுச் செல்வதற்கான அழைப்பு.

“நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.”

நம் வாழ்க்கையில் அநேகரைச் சந்திக்கிறோம், அவர்களிடம் இயேசுவைப் பிரதிபலிக்கிறோம். நாம் மட்டுமே அவர்கள் காணக்கூடிய ஒரே இயேசுவாக இருக்கலாம். வேதனைமிக்க ஆத்துமாக்கள் நிறைந்த இந்த உலகத்தில், அவருடைய கிருபைக்கான திறவுகோல் நம் கையில் இருக்கிறது. அவருடைய அன்பைப் பிரதிபலித்து, அவருடைய வெளிச்சத்தைப் பிரகாசித்து, அவருடைய திருமுகத்தை வெளிப்படுத்தும்படி நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

அதற்காக நமக்கு வரங்களும், தாலந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளன, அதற்கான உபகரணங்களைப் பயன்படுத்தும் திறமையும் நமக்குண்டு; பின்னர் ஏன் நாம் அவற்றைப் பயன்படுத்தி, யாரேனும் ஒருவருக்கு இயேசுவை அறிமுகப்படுத்தக்கூடாது?

இதுவே அதற்கான சிறந்த வழி...

சுவிசேஷம் கூறும் நற்செய்தியை இன்னும் கேட்டிராத ஏராளமானோர் உண்டு.

அவர்கள் இன்னும் அவருடைய அன்பை ருசிக்கவில்லை.

கிருபையையும், பாவமன்னிப்பையும் பெற்று அனுபவிக்கவில்லை. தேவனுடைய உணரக்கூடிய பிரசன்னத்தை உணர்வது எப்படி இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியாது.

அவர்கள் அதை இன்னும் பார்க்கவில்லை, ருசிக்கவில்லை, கேட்கவுமில்லை...

அவரைக் காண்பிக்கவும், அவர் வார்த்தையை விதைக்கவும் நமக்கு அழைப்பு உண்டு. அவருக்காகப் பேசவும், கவனிக்கவும் அழைப்பு உண்டு. அவருக்காக உருவாக்கவும் அழைப்பு உண்டு.

அழைக்கும் அவரது சத்தம் உங்களுக்குக் கேட்கிறதா?

அவரது அழைப்புக்கு உங்கள் பதில் என்ன?

“இதோ அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்” என்பதாக இருக்குமா?

அல்லது “வேறு யாரையாவது அனுப்பும்?” என்பதாக இருக்குமா?

இந்த அழைப்பு அவரது எல்லையற்ற அன்பை அறிந்த எல்லோருக்கும் உண்டு,. உங்களைப் போல அதை வேறு யாராலும் செய்ய முடியாது, நீங்கள் பரத்திலிருந்து வந்த தனிச்சிறப்புள்ள ஒரு ஈவு.

நீங்கள் மிகவும் அவசியமானவர். இந்த அழைப்புக்கான உங்கள் பதில் மிக முக்கியம்.

இந்த அழைப்புக்கு உங்கள் பதில் என்னவென்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

நன்றாகத் தீர்மானியுங்கள். ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள். அன்பைத் தெரிந்துகொள்ளுங்கள்.

புறப்பட்டுப் போகத் தீர்மானியுங்கள்...

About this Plan

அழைப்பு

அழைப்பு என்பது ‘ஸீரோ கான்’ மாநாட்டில் பிறந்த வேதாகமத் திட்டம். அது, ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் தேவனுடைய அன்பைப் பகிர்ந்துகொள்வதற்கான தேவனுடைய அழைப்புக்கு இணங்குவதில் கவனம் செலுத்தும் 3-நாள் பயணம்; நாம் இப்போதிருக்கும் நிலையில் தொடங்கி, கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கம்வகிக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் முக்கியத்துவத்தையும் அறிந்துணர்ந்து, நம்முடைய வரங்களையும், தாலந்துகளையும் கொண்டு பிறருக்கு சிறப்பாக சேவை செய்வதைப் பற்றியது.

More