இயேசுவைப் போலவே மன்னிப்பதுSample

இயேசுவைப் போலவே மன்னிப்பது - மன்னிப்பு இயேசு மற்றும் யோசேப்பு பற்றிய ஒப்பீட்டு ஆய்வு
மன்னிப்பு, குணத்தை செம்மைப்படுத்துவதற்கான ஒரு ஆயுதமாக, இயேசுவின் வாழ்க்கை மற்றும் யோசேப்பின் வாழ்க்கை இரண்டிலும் வேதாகம குறிப்புகளில் அறிவித் துள்ள ஒரு கருத்தாகும். அவர்களின் வாழ்வு துன்பம் மற்றும் துரோகத்தை எதிர்கொள்ளும் மன்னிப்பின் மறுரூபமாக்கும் வல்லமையை வெளிப்படுத்துகின்றன.
யாக்கோபின் விருப்பமான மகனான யோசேப்பு , தனது சொந்த சகோதரர்களால் மிகக் கொடூரமாக நடத்தப்பட்ட ஒரு கசப்பான சூழலை அனுபவித்தார். அவர் மீது அவர்களுக்கு பொறாமை மற்றும் வெறுப்பு அதிகரித்தது, அவை அவர்களின் தந்தையின் வெளிப்படையான விருப்பத்தால் தூண்டப்பட்டது. முதலாவதாக யோசேப்பின் விசேஷமான சொப்பனங்கள் அது அதைப் பற்றிய வரும் கால வெளிப்படுத்தல்கள் பகைமையின் தன்மைகளை மேலும் தூண்டின. சகோதரர்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர், ஆனால் தேவ சித்தம் நிறைவேறுவதற்காக, யோசேப்புஅடிமைத்தனத்திற்கு விற்கப்பட்டார், இறுதியில் எகிப்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இக்கட்டான சூழ்நிலையில், யோசேப்பிற்கு தன்னையே சோதித்து பார்க்க போதுமானநேரம் இருந்தது. அவர் ஒரு முக்கிய தீர்மானத்தை செய்தார் அதாவது தன்னுடைய சகோதரர்களின் துரோக செயல்களுக்காக அவர்களை தாமாக முன்வந்து மன்னிக்க முடிவெடுத்தது. இது ஒரு முக்கியமான தீர்மானமாக அமைந்தது. மன்னிப்பு யோசேப்பை ஒரு கோபமான நிலை யிலிருந்து இரக்கமுள்ள, மன்னிக்கும் தன்மையுடையவனாக மாற்றியது. மன்னிப்பு ஒருவரின் தன்மையை வடிவமைக்கும் மற்றும் கசப்பிலிருந்து இரக்கத்திற்கு மாற்றும் வல்லமை என்பதை அவரது வாழ்க்கை விளக்குகிறது.
இப்போது, நம் சிந்தைகளை இயேசுவின் பக்கம் திருப்புவோம், அவருடைய வாழ்க்கை தெய்வீக அளவில் மன்னிப்பை எடுத்துக்காட்டுகிறது. யோசேப்பைப் போல் இல்லாமல், இயேசு துரோகம், அவமானம் மற்றும் கொடுமையை அவர் தன் சொந்த ஜனங்களின் இரட்சிப்புக்காக வந்த மக்களின் மூலம் சந்தித்தார். அவர் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டார், சவுக்கால் அடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையில் அறையப்பட்ட வேதனையிலும் கூட, இயேசு, "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே"(லூக் 23:34)என்ற வார்த்தைகளை உச்சரித்தார். அவருடைய மன்னிப்பு உடனே, அவரைத் துன்புறுத்தியவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இயேசுவுக்கும் யோசேப்புக்கும் இடையே நாம் அறியும் குணாதிசயம், பெரும் துன்பங்களுக்கு மத்தியில் மன்னிக்கும் திறனில் வெளிப்படுகிறது. யோசேப்பின் மன்னிப்பு அவரது குணத்தை மாற்றியது போல, இயேசுவின் மன்னிப்பு மனிதருடைய புரிந்து கொள்ளுதலை மீறியது. இது வெறுமனே மன்னிப்புச் செயல் அல்ல, ஆனால் தெய்வீக அன்பு மற்றும் இரக்கத்தின் சாட்சி. இந்த செயலில், மீட்பு மற்றும் ஒப்புரவிற்கான பாதையை இயேசு நமக்குக் காட்டினார்.
யோசேப்பின் மன்னிப்பு அவரது சகோதரர்களுடன் ஒப்புரவிற்கு வழிவகுத்தது, இயேசுவின் மன்னிப்பு தேவனுக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான ஒப்புரவிற்கான வழியைத் திறந்தது. அவருடைய மன்னிப்பு, தவறு செய்தவர்களின் வருத்தத்தை பொறுத்தது அல்ல அது அவருடைய தெய்வீக இயல்பின் வெளிப்பாடாக இருந்தது.
முடிவில், யோசேப்பும் இயேசுவும் இயல்பான குணத்தை வடிவமைப்பதிலும் மனித எல்லைகளை மீறுவதிலும் மன்னிப்பின் ஆற்றலை விளக்குகிறார்கள். மன்னிப்பு கசப்பை, இரக்கமாக மாற்றும் என்பதை யோசேசப்பின் வாழ்க்கை நமக்குக் கற்பிக்கிறது, அதே நேரத்தில் மன்னிப்பு மனிதநேயத்திற்கும் தெய்வீகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என்பதை இயேசுவின் உதாரணம் வெளிப்படுத்துகிறது. தனிப்பட்ட துரோகத்தை கிருபையால் மன்னிப்பதாலும் அல்லது அனைத்து மனிதகுலத்தை மீட்பதாலும் மன்னிப்பின் உருமாறும் ஆற்றலின் முக்கியமான நினைவூட்டல்களாக அவர்களின் வாழ்க்கை விளங்குகிறது.
பிரதிபலிப்பு கேள்விகள்:
1. யோசேப்பு மற்றும் இயேசு இருவரிடமிருந்தும் மன்னிப்பின் வழிமுறைகளை நம் சொந்த வாழ்க்கையில் எவ்வாறு நடைமுறையில் பயன்படுத்தலாம்?
2. மன்னிப்பு சவாலாக இருக்கும் ஒரு சூழ்நிலையை உங்களால் யோசிக்க முடிகிறதா, அப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கு யோசேப்பு மற்றும் இயேசுவின் உதாரணங்கள் எவ்வாறு நம் பதிலை வழிநடத்தக்கூடும்?
3. மன்னிப்பு செயல்முறையின் மூலம் யோசேப்பின் குணம் எந்தெந்த வழிகளில் செம்மைப்படுத்தப்பட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
Scripture
About this Plan

மன்னிப்பு என்பது இயேசுவின் போதனைகளில் ஒரு முக்கிய கருத்தாகும், மன்னிப்பு அவருடைய சாயலைப் பிரதிபலிக்கிறது, மற்றும் கிருபை மற்றும் அன்பின் பாதையில் நம்மை வழிநடத்துகிறது.மத் 6:14-ல், இயேசு மன்னிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” I இந்த எளிய மற்றும் முக்கியமான செய்தி, வேதவாக்கியங்களின்படி மன்னிப்பு ஏன் முக்கியமானது என்பதை வெளிப்படுத்துகிறது,ஏனெனில் அது தேவனுடனான நமது உறவை பிரதிபலிக்கிறது. நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது, நம்முடைய பரலோக பிதாவினிடமிருந்து நாம் பெறும் மன்னிப்பை பிரதிபலிக்கிறோம்.
More
Related Plans

Spirit-Led Emotions: Mastering Emotions With Holy Spirit

5 Days of 5-Minute Devotions for Teachers

The Power of Community - Vol. 1: In Times of Grief

What a Man Looks Like

Engaging in God’s Heart for the Nations: 30-Day Devotional

7 Devotions to Help You Discover God’s Restorative Power

Don't Quit

When Your Child’s LifeStyle Choices Hurt – Guidance for Hurting Parents

I'm Just a Guy: Who Feels Alone
