அவரே உன் தஞ்சம்!Sample

உனக்கு எங்கே அடைக்கலம் கிடைக்கும்?
"எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.” (சங்கீதம் 57:1) கடினமான காலங்களை கடந்துச் செல்கையில் நாம் தியானித்து அறிக்கையிடக் கூடிய வல்லமையான வசனம் இது.
நம் கஷ்டங்களின் நடுவில் தேவன் தேவனாய் இருக்கிறார். அவர் உன் இருதயத்தையும் ஆத்துமாவையும் பாதுகாக்கின்றார்.
அவருடைய அன்பும் பிரசன்னமும் நிறைந்த சிறகுகளால் உன்னை மூடுகிறார். அவருடைய இதய துடிப்பினால் சூழப்பட்டு, நீ அவருக்கு அருகில் இருக்கும் போது உன் ஆத்துமா வாழ்கிறது. (சங்கீதம் 17:7ஐ பார்க்கவும்)
எச்சரிக்கை எதுவும் இன்றி வெகு விரைவாக எல்லாமே மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகில், நம் ஆண்டவர் மாறாதவராய் இருக்கிறார். அவர் இன்னுமே ஆண்டவராக இருக்கிறார். அவரே நம் அடைக்கலமும், நம் கோட்டையும், நம் மறைவிடமுமாய் இருக்கிறார். (சங்கீதம் 91:2ஐ பார்க்கவும்)
இன்று என் இதயத்தைத் தொட்டு நான் இருக்கும் சூழ்நிலைகளுக்கு நடுவில் ஆண்டவரின் பிரசன்னத்தை உணரச்செய்த ஒரு புதிய வழிபாட்டு பாடலை கண்டுபிடித்தேன். இது உன்னையும் ஆசீர்வதித்துத் தேற்றும் என்று நான் நம்புகிறேன் : "என் பெலனெல்லாம் நீர்தானய்யா" சகோதரர் பென் சாமுவேல் பாடியது: Youtubeல் நீங்கள் காணலாம்.
என்னுடன் ஜெபிக்க உன்னை அழைக்கிறேன்: "என் ஆண்டவரே, நீரே என் நித்திய அடைக்கலம். உம் செட்டைகளின் நிழலுக்கடியில் எனக்கு எந்த பயமும் இல்லை. உம்முடைய பிரசன்னத்தால் என்னை மூடுவது போல, வேதனையில் அவதிப்படும் இந்த உலகையும் உம்முடைய சிறகுகளை விரித்து மூடும்படியும் உம்முடைய சமாதானத்தை இந்த உலகம் தொடர்ந்து பெரும்படியும் நான் ஜெபிக்கிறேன். நீர், நீராகவே இருப்பதற்காகவும், நீர் செய்த, செய்கின்ற, செய்யப்போகும் அனைத்திற்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்."
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/
Scripture
About this Plan

உலகம் உருவான காலத்திலிருந்து தொற்றுப்பரவல், இயற்கை சீற்றங்கள், போர்கள் அல்லது போரின் வதந்திகள் எங்கும் எப்போதும் இருந்து வருகின்றன... ஆனால் உனக்கு, நித்திய தெய்வீக அடைக்கலம் உண்டு. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டவருக்குள் அடைக்கலம் புகுவதை பற்றியும் அவரை நம் வாசஸ்தலமாக மாற்றிக்கொள்வதை பற்றியும் கற்றுக்கொள்ள போகிறோம். ஆண்டவரின் வார்த்தையிலிருந்து உனக்கு ஆழமான வெளிப்பாடுகள் கிடைத்து உன் ஆத்துமா ஊக்குவிக்கப்பட்டு திருப்தியடைய வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.
More
Related Plans

God's Great Story

Holy Spirit

The Effective Mom 5-Day Devotional for the Busy Mom

Road to Pentecost: Five Days of Spiritual Renewal

Name Above All

The Wonder of the Wilderness

Being Courageous for the Lord: Devotions for Girls (I Am Fearless)

To You, Oh Lord

The Joy
