YouVersion Logo
Search Icon

கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்Sample

கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்

DAY 2 OF 10

இருண்ட பள்ளத்தாக்குகளில்

ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை தாழ்வான நிலங்களுக்கு நல்லமேய்ச்சலுக்காக நடத்திச் செல்வார்கள். மலைகளில் காலநிலை மாறி பசுமையான விளைச்சல் ஏற்படும் போது, மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை சிறு ஓடைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் வழியாக மேடான நிலத்திற்கு நடத்திச்செல்வார்கள். சேருமிடம் அற்புதமானது என்பது மேய்ப்பனுக்குத் தெரியும். 

 ஆனால் அந்தப் பயணமானது சிறிது அபாயகரமானது. அந்த நிழலான பள்ளத்தாக்குகளில் வேட்டை விலங்குகள்பதுங்கி இருக்கும். மந்தையால் ஆபத்தை உணர முடியும், அவை தங்கள் மேய்ப்பனின் விழிப்பான கவனிப்பையேமுற்றிலும் சார்ந்திருக்கும். ஓநாய்களும் சிங்கங்களும் இரைக்காக ஒளிந்து இருக்கும் மூலைகள் மற்றும் மறைவிடங்களைஅவர் அறிந்திருக்க வேண்டும்.  அவர் இல்லாமல் பள்ளத்தாக்கு ஒரு மரணத்தின் இடமாகவே இருக்கும். அவர் இருக்கும்போது, அது ஒரு வாழ்வுக்கான இன்னொரு பயணமாக இருக்கும்.

 இந்த பழக்கமில்லாத, ஆபத்தான இடத்தை, “மரண இருளின் பள்ளத்தாக்கு” (வச. 4) என்கிறார். நம்மைச் சுற்றிஎன்ன நடக்கிறது என்பதையே புரிந்து கொள்ள முடியாமல் நாம் நடந்து சென்று கொண்டிருக்கும் இருளான நேரங்களைஅவருக்கு நன்றாகவே தெரியும். இந்த உருவகத்தில் மறைந்திருக்கும் வாக்குத்தத்தமானது நாம் எப்படிப்பட்டபிரச்சனையை எதிர்கொண்டாலும் அவர் நம்மை அதன் ஊடாக நடத்திச் செல்வார் என்கிறது. அது எத்தனைஆபத்தானதாகவும் பயமுறுத்துவதாக இருந்தாலும் பரவாயில்லை. நம் மேய்ப்பர் நமது வழியின் ஒவ்வொரு அடியிலும்நம்முடன் வந்து கொண்டிருக்கிறார் ஆகவே நாம் பயப்பட வேண்டிய தேவையில்லை.

 நான் பயப்பட மாட்டேன் என்று நம்பிக்கையுடன் சொல்லும் தாவீதின் அறிக்கை ஒரு புரட்சிகரமானது ஆகும். இந்த வீழ்ந்து போன உலகம் எத்தனை அபாயகரமானது என்பதை அவர் அறிவார். ஆனாலும் அவர் பயத்துக்குத்தன்னை விட்டுக் கொடுப்பதாக இல்லை. அவர் அப்படியே, தைரியமாகக் கர்த்தரை நம்பியிருக்கிறார். கர்த்தர் அனைத்துவேட்டை மிருகங்களையும், இயற்கை அழிவுகளையும், ஆபத்தையும் அறிந்து அவற்றிலிருந்து நம்மைக் காக்கிறவர். மேய்ப்பரின் வல்லமையான கோலும், திருத்தும் அவரது தடியும் எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையிலும் அவரைஆறுதல்படுத்தும்.

 வாழ்க்கையானது உறுதியற்றதாக இருக்கும் போது, ஆபத்துகள் மிரட்டும் போது, ஒரு சூழலில் இருந்துஇன்னொரு சூழலுக்கு மாறிக் கொண்டிருக்கும் போது, பயத்துக்கு உங்களை விட்டுக் கொடுத்துவிடாதீர்கள். தாவீதின்அறிக்கையிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். இருண்ட பள்ளத்தாக்குகளின் வழியாகக் கூட நம் மேய்ப்பர் நம்மை நடத்திச்செல்கிறார், ஆகவே பயமில்லாத வாழ்க்கை என்பது நமக்கு இருக்கக் கூடிய அதிகாரப்பூர்வமான தெரிந்தெடுப்பாகஇருக்கிறது. ஆனால் நாம் இந்தத் தெரிந்தெடுப்பைச் செய்ய வேண்டும். நாம் வாழ்வின்  இருண்ட பள்ளத்தாக்குகளில்  நம்மேய்ப்பருடன் இணைந்து நடக்கும் போது, அவர் நம்மை நடத்திச் செல்வதாகக் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்தைமதித்து நிறைவேற்றுவார்.

Scripture

About this Plan

கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்

நீங்கள் வேதனைப்படும் போது கர்த்தர் எங்கே இருக்கிறார்? நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அவரை அனுபவிப்பது எப்படி? குழப்பத்தையும் பயத்தையும் அவர் தெளிவாகவும் சமாதானமாகவும் அவர் எப்படி மாற்றுகிறார்? சங்கீதங்களில் பல பிரச்சனைகளில் துவங்கி கர்த்தரின் பிரசன்னம், வல்லமை மற்றும் வழங்கலில் முடிகின்றன. அவற்றின் சத்தியங்களைக் கற்று, அவற்றின் உதாரணங்களைப் பின்பற்றுவதன் மூலம், நமக்கும் அதைப் போன்ற சாட்சிகள் கிடைக்கின்றன. எப்போது அதிகம் தேவையாக இருக்கிறதோ அப்போது கர்த்தரைக் கண்டு கொள்வோம்.

More