கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்Sample

பிரச்சனைகளின் காலங்களில்
என் குடும்பத்தில் இருப்பதிலேயே சிறுவர்கள் தான் குப்பையை எடுத்துப் போடும் வேலையில் மாட்டுவார்கள். அது தான்இருப்பதிலேயே தாழ்வான வேலை. ஆனால் ஆதிகாலத்து எபிரெயக் குடும்பத்தில், ஆடுகளை மேய்ப்பது தான்இருப்பதிலேயே தாழ்மையான வேலை. மேய்ப்பன் ஆடுகளுடன் இருக்க வேண்டும். அவற்றுக்கான தேவைகளைசந்திக்க வேண்டும். அவைகளைப் பாதுகாக்க வேண்டும். வழிநடத்த வேண்டும். 23 ஆம் சங்கீதத்தை எழுதிய, இஸ்ரவேலின் அரசனான, ஈசாயின் கடைசி மகன் தாவீதுக்கு, ஆடு மேய்ப்பதைப் பற்றி அனுபவ பூர்வமாக நன்றாகவேதெரியும்.
கர்த்தர் படைத்தவற்றிலேயே அதிக நெருக்கமாக இருக்கும் விலங்குகளில் ஆடுகளும் ஒன்று என்பது தாவீதுக்குத்தெரியும். அவைகள் மெதுவாகச் செல்பவை, எளிதில் பயப்படுபவைகள், பாதுகாப்பற்றவை, எளிதில் தாமாகவேஉணவோ தண்ணீரோ கண்டுபிடிக்க முடியாதவை. ஓடும் தண்ணீரின் சத்தமே அவற்றுக்கு பயத்தை உருவாக்கும்என்பதால், மேய்ப்பன் அவைகளுக்காக ஓடையின் குறுக்காக சிறு அணை கட்ட வேண்டும். அவை புல்லை வேர் வரைமேய்ந்து தீர்த்த பின் புதிய மேய்ச்சல் நிலத்துக்கு அவற்றை மேய்ப்பன் நடத்திச் செல்ல வேண்டும். அவற்றைவேட்டையாடும் விலங்குகளிடம் இருந்தும், தம்மைத் தாமே காத்துக் கொள்ளத் தெரியாத தன்மையிலிருந்தும் மேய்ப்பன்அவற்றைப் பாதுக்காக்க வேண்டும். மேய்ப்பன் இல்லாமல், ஆடுகளுக்கு ஆபத்து வந்ததென்றால் அதற்கு மரணம் என்றுதான் அர்த்தம். மேய்ப்பன் இருந்தால் அவற்றால் பசுமையான புல்வெளிகளையும் அமைதியான தண்ணீரையும்அனுபவித்து, பாதுகாப்பாக வாழ முடியும்.
இந்த சித்திரத்தைத் தான் தாவீது, கர்த்தருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் இருக்கும் உறவாக, சங்கீதம் 23இல்நமக்குக் கொடுக்கிறார். இதை முதன்முதலாக வாசிப்பவர்களுக்கு இந்த உருவகம் சிறிது ஆச்சரியம் தருவதாகஇருக்கலாம். படைப்புகளில் எல்லாம் தாழ்மையான மிருகங்களைப் பாதுகாக்கும் ஒரு தாழ்மையான வேலையில் கர்த்தர்இருப்பது என்பது ஆச்சரியமானது தான். ஆனால் உதவியற்ற ஆடுகளைப் பார்த்துக் கொள்ளும் மேய்ப்பன் என்பவர்மென்மையான, நெருக்கமான, கருணையுள்ள, அக்கறையுள்ள ஒருவருக்கான வடிவமாக இருக்கிறார். இப்படிப்பட்டஉறவைத் தான் கர்த்தர் நம்முடன் வைத்துக்கொள்ள விரும்புகிறார். இப்படிப்பட்ட உறவு தான் நமக்கும் தேவையானதாகஇருக்கிறது. அதுவும் பிரச்சனையின் நேரங்களில்.
கர்த்தர் மேய்ப்பராக இருக்கிறார் என்று அல்ல, கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார் என்று தாவீது சொல்வதைக்கவனியுங்கள். இந்தக் கர்த்தர் தனிப்பட்ட ஆள்த்தன்மையுள்ளவராக - உன்னதமானவராக, மகத்துவமுள்ள பரிசுத்ததேவனாக மட்டுமல்ல, நம் வாழ்வின் ஒவ்வொரு நுணுக்கமான அம்சங்களிலும் உடன் இருப்பவராக, பாதுகாக்கும்கர்த்தராக இருக்கிறார். அவர் தன் ஆடுகள் மேல் அக்கறை உள்ளவராக, புரிந்து கொள்பவராக, போஷிக்கிறவராகஇருக்கிறார். எல்லாவற்றுக்காகவும் அவரையே நாம் சார்ந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
இயேசு தன்னை ஒரு “நல்ல மேய்ப்பன்” என்று காட்டுகிறார் (யோவான் 10:11) நமது உடல், உணர்வு, ஆன்மீகத்தேவைகளை சந்திப்பதற்கு அவர் அர்ப்பணிப்புடன் இருப்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும் என்று விரும்புகிறார். நாம் கற்பனை செய்வதற்கும் மேலாக அவர் நம் மீது அக்கறையுடன் இருக்கிறார். அவருக்கு அனைத்து வேதனைகளும், பிரச்சனைகளும், பயங்களும் தெரியும். நம்மை பாதுகாப்பான மேய்ச்சல் வெளிக்கு அழைத்துச் செல்ல அவர்விரும்புகிறார். நமது மிக மோசமான பிரச்சனைகளிலும் கூட, நாம் நம் வாழ்க்கையையே அவரை நம்பி ஒப்படைக்கலாம்.
Scripture
About this Plan

நீங்கள் வேதனைப்படும் போது கர்த்தர் எங்கே இருக்கிறார்? நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அவரை அனுபவிப்பது எப்படி? குழப்பத்தையும் பயத்தையும் அவர் தெளிவாகவும் சமாதானமாகவும் அவர் எப்படி மாற்றுகிறார்? சங்கீதங்களில் பல பிரச்சனைகளில் துவங்கி கர்த்தரின் பிரசன்னம், வல்லமை மற்றும் வழங்கலில் முடிகின்றன. அவற்றின் சத்தியங்களைக் கற்று, அவற்றின் உதாரணங்களைப் பின்பற்றுவதன் மூலம், நமக்கும் அதைப் போன்ற சாட்சிகள் கிடைக்கின்றன. எப்போது அதிகம் தேவையாக இருக்கிறதோ அப்போது கர்த்தரைக் கண்டு கொள்வோம்.
More
Related Plans

Christ Over Everything - Colossians

Renewing Your Heart for Ministry

Change My Mind - Standing With Jesus in a Confusing World

I'm Just a Guy: Who's Angry

Multivitamins - Fuel Your Faith in 5-Minutes (Pt. 2)

Finding Strength in Stillness

5-Day Devotional for Moms: Grace in Your Gaps

No More Mr. Nice Guy: Saying Goodbye to Doormat Christianity

Testimonies of Christian Professionals
