சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சிSample

பசியாய் இருப்பவர்கள் பாக்கியவான்கள்
நீதியின் மேல் பசி தாகம் உள்ளவர்கள் நல்ல வாழ்வு வாழ ஆசைப்படுகிறவர்கள் ஆவார்கள். இந்த நல்ல வாழ்க்கை என்பது இயேசு மையத்தில் இருந்தால் மட்டுமே நல்ல வாழ்க்கையாக இருக்கும். அது நம்மைச் சுற்றியிருப்பவர்கள் மீது நேர்மறையான பாதிப்பை ஏற்படுத்தினால் தான் அது நல்லதாக இருக்கும். கர்த்தரின் காரியங்களில் பசியாக இருப்பது என்பது நமது முழு இருதயத்துடன் கர்த்தரைத் தேடி, நம்மிடம் இருக்கும் எல்லாவற்றின் மூலமாகவும், நாம் யாராக இருக்கிறோம் என்பதன் மூலமாகவும் அவரை மகிமைப்படுத்துவதே ஆகும். இதை சொல்வதை விட செய்வது மிகவும் கடினமானது ஆகும். ஏனென்றால் நாம் இருக்கும் இந்தக் காலமானது வேலை, குடும்பம், ஊழியம் போன்றவற்றைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒன்றாக இருக்கிறது. இவை அனைத்துமே மிகவும் அவசியமானவைகள் என்றாலும் கூட பாக்கியவான்களை மற்றவர்களிடம் இருந்து பிரிக்கக் கூடிய அம்சமானது அவர்கள் கர்த்தரை மகிமைப்படுத்த காலம் எடுத்துக் கொள்வதே ஆகும். அவர்கள் கர்த்தருடன் குறிப்பிட்ட நேரத்தில் தனியாக நேரம் செலவு செய்யலாம். ஆனால் அவர்கள் நாள் முழுவதும் தொடர்ச்சியாகக் கர்த்தருடன் தொடர்பில் இருக்கின்ற ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள்.
‘கர்த்தர் மீதான பசி’ என்ற தனது புத்தகத்தில் ஜான் பைப்பர் அவர்கள் இவ்வாறாகச் சொல்கிறார், “கர்த்தரின் மகிமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற ஆழமான ஆசை உங்களிடம் இல்லை என்றால், நீங்கள் அவரை அதிகமாகப் பருகி திருப்தி அடையவில்லை என்று அல்ல; இந்த உலகத்தின் சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்திருந்து அதிக நேரம் கொறித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். உங்களது ஆத்துமாவானது சின்னச் சின்ன பொருட்களால் நிறைக்கப்பட்டிருக்கிறது. பெரியவற்றுக்கு அங்கே இடம் இல்லை.”
நம் அலைபேசிகளை விட்டு, ‘ஹாட்ஸ்டார்’, ‘நெட்ஃப்ளிக்ஸ்’ போன்ற இணையத்தின் சினிமாத் தளங்களை விட்டு, முடிவே இல்லாத நமது வேலைப் பட்டியல்களை விட்டு விலகி கர்த்தருக்கென்று நேரத்தை ஒதுக்குவது உங்களால் முடியுமா? இன்று நடக்குமா?
ஜான் பைப்பர் அவர்கள் இவ்வாறாகத் தொடருகிறார், “நான் சந்தித்த உறுதியான, முதிர்ச்சியான கிறிஸ்தவர்கள் கர்த்தர் மேல் அதிகப் பசியாக இருந்தவர்கள் ஆவார்கள். அதிகம் சாப்பிட்டவர்கள் குறைவான பசியுடன் இருப்பார்கள் என்று தான் நமக்குத் தோன்றும். ஆனால் மகிமையான கர்த்தர், நித்தியமான விருந்து, தீர்ந்து போகாத ஊற்று போன்றவற்றில் இது பொருந்தாது.”
இது இதுவரை இல்லாத அளவுக்கு நம்மை அதிகமாகக் கர்த்தர் மீதான பசியுடன் இருக்கச் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு அதிகமாக அவரது வார்த்தையையும் அவரையும் நாம் கொண்டிருக்கிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக நமக்குத் தேவையும் இருக்கும். நமது அந்தஸ்தானது பசியுடனும் தாகத்துடனும் இருப்பது என்றால் நாம் பொங்கி வழியும் அளவுக்கு நிரப்பப்படுவோம் என்று இயேசு சொல்கிறார். இதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் ஆனால் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் இந்த வித்தியாசத்தைக் கவனிப்பார்கள். இயேசு வாக்குப்பண்ணின ஜீவ நதியில் நாம் ஆழமாக அருந்த வேண்டும். கர்த்தரின் வார்த்தையை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இது மட்டுமே நம்மை திருப்திப் படுத்த முடியும்.
About this Plan

நாம் இப்போது இருக்கும் வாழ்வின் காலம் எதுவாக இருந்தாலும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்வில் நாம் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த பாதிப்பானது இயேசுவை அனுபவிக்கச் செய்யும் அல்லது, குறைந்தபட்சம் நம்மில் இருக்கும் வித்தியாசம் என்ன என்ற ஆர்வத்தையாவது அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடும். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் இயற்கையாகவே கர்த்தரின் நறுமணத்தையும் வண்ணங்களையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதுவே எங்கள் ஜெபம் ஆகும்.
More
Related Plans

The Creator's Timing: How to Get in Sync With God's Schedule

Open Your Eyes

Solo Parenting as a Widow

Don't Take the Bait

Journey Through Leviticus Part 2 & Numbers Part 1

What Does Living Like Jesus Even Mean?

Nearness

Father Cry: Healing the Heart of a Generation

The Way of St James (Camino De Santiago)
