சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சிSample

ஒரு முரணுள்ள அரசு
இன்றைய உலகத்தில், பெலம், அதிகாரம், செல்வம் மற்றும் வல்லமை போன்றவையே கொண்டாடப்படுகின்றன. அவற்றையே மக்கள் அதிகம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகம் ஆசீர்வாதம் என்றும் பாக்கியம் என்றும் சொல்கின்றவற்றைத் தலைகீழாக்கி ஒரு புதிய தரத்தைக் கொடுக்கிறார் இயேசு. இயேசுவின் வார்த்தைகளின்படி, ஆன்மாவில் ஏழைகளாக இருப்பவர்களும், சாந்த குணம் உள்ளவர்களும், துயரப்படுகிறவர்களும், கர்த்தர் மீது தாகமுள்ளவர்களும், பரிசுத்தமுள்ளவர்களும், சமாதானம் பண்ணுகிறவர்களும், துன்பப்படுத்தப்படுகிறவர்களுமே தான் உண்மையில் பாக்கியவான்கள். ஆகவே தான் இந்த அரசானது முரணுள்ள ஒரு அரசாகக் காணப்படுகிறது. சிறியவர்கள், உடைபட்டவர்கள், தாழ்மையானவர்கள் மற்றும் கர்த்தரைத் தேடுகிறவர்கள் இந்த அரசில் இடம்பெறுகிறார்கள். ஆனால் சாதனை, பாதிப்பு அல்லது எல்லாவற்றையும் பெற்றிருப்பது என்பவை இங்கே எந்த மதிப்பையும் பெற்றிருப்பதில்லை.
பாக்கிய வசனங்கள் என்னும் வார்த்தையானது, உச்சமான ஆசீர்வாதம் என்ற பொருள் தருகிறது. அதாவது, இயேசுவை இரட்சகராக அறிந்திருப்பது நமக்கு அவரது அரசுக்குள் நுழையும் வாய்ப்பைக் கொடுக்கின்றது. அதன் காரணமாக ஒரு உன்னதமான ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வுக்கான வாசலைத் திறந்துவிடுகிறது.
ஆனால் .... இந்த ஆசீர்வாதமான வாழ்வானது பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கு உரியது அல்ல.
ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் மேடுகளும் பள்ளங்களும், உயர்வுகளும் தாழ்வுகளும், திருப்பங்களும் திருக்கங்களும் நிறைந்ததாக இருக்கின்றது. வாழ்க்கையை நாம் முன்கூட்டியே நிதானிக்க முடியாது. குழப்பங்கள் நிறைந்ததும் கடினமானதுமானது நம் வாழ்க்கை. கர்த்தரின் அரசில் தாங்கள் யாருக்குரியவர்கள் என்பதை அறிந்து, முடிவே இல்லாத நித்திய வாழ்வு என்னும் அவர்களுக்கான பரிசை நோக்கி முன்னேறிச் செல்பவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். எதுவும் யாரும் கர்த்தரைத் தேடும் அவர்களது தேடலிலும், பிற மனிதர்களுக்கு தயவு செய்வதிலும் இருந்து அவர்களைத் தடுக்கவே முடியாது. இந்த அரசைப் பற்றியும் அதன் குடிமக்களைப் பற்றியும் இன்னும் அதிகம் அறிந்து கொள்ள நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா?
Scripture
About this Plan

நாம் இப்போது இருக்கும் வாழ்வின் காலம் எதுவாக இருந்தாலும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்வில் நாம் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த பாதிப்பானது இயேசுவை அனுபவிக்கச் செய்யும் அல்லது, குறைந்தபட்சம் நம்மில் இருக்கும் வித்தியாசம் என்ன என்ற ஆர்வத்தையாவது அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடும். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் இயற்கையாகவே கர்த்தரின் நறுமணத்தையும் வண்ணங்களையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதுவே எங்கள் ஜெபம் ஆகும்.
More
Related Plans

Called to Coach: Start Your Journey in Faith, Purpose & Influence

A Letter to God's Elect - Part 2: Trained for Troubled Times

30 Days of Surrender

Fully Known: A 5-Day Journey Through Psalm 139

Acts 14 | Facing Hardship

Lights in the City

If the Ocean Has a Soul: Diving Into God’s Word

The Lion and the Lamb

Financial Discipleship – the Bible on Restitution
