கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!Sample

அகித்தோப்பேல் தன் வாழ்வை முடித்துக் கொண்டதன் காரணம் என்ன?
தன்னுடைய ஆலோசனை நிராகரிக்கப்பட்டது என்று கண்டவுடன் அகித்தோப்பேல் தன் வீட்டுக்குச் சென்று தூக்குப்போட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.
தாவீதைத் தாக்குவதில் தாமதம் செய்தால், தாவீது தன் படைகளை வேறுவிதமாய் திரட்டி, தன் சிம்மாசனத்தைக் கைப்பற்றி விடுவான் என்று அகித்தோப்பேல் உணர்ந்தான். இவ்வாறு நடந்தால் அகித்தோப்பேல் ஒரு துரோகியாக வெளிப்படுத்தப் படுவான். அதனால் அவனுக்கு வரக் கூடிய தண்டனையையும், அவனுடைய குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய அவமானத்தையும், இழிவையும், அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட மனச்சோர்வான ப்நிலையில் அவன் யூதாஸ்காரியோத்தைப் போல தற்கொலை செய்து கொண்டான்.
தாவீதுடைய துரோகத்தையும் தன் குடும்பத்துக்கு இழைத்த பாவங்களையும் குறித்து அகித்தோப்பேல் மிகுந்த மனக்கசப்போடு இருந்தான். ராஜா, தான் செய்த தீங்குக்கு யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல், அதின் விளைவுகளையும் அனுபவிக்காமல் வாழ்ந்து கொண்டிருந்தான் என்று அகித்தோப்பேல் எண்ணினான்.
அவன் தன் பொருட்களுடன் கீலோவுக்கு திரும்பி விட்ட படியால், ஆண்டவர் தாவீதின் மேல் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது குறித்து ஒரு எண்ணமும் இல்லாமல் இருந்தான். அது மாத்திரமன்றி, நாத்தான் தாவீதை எதிர்கொண்டபோது, தாவீது எவ்வாறு ஆண்டவருக்கு முன்பாக முற்றிலுமாக மனமுடைந்து போனான் என்பதையும் அகித்தோப்பேல் அறியாமல் இருந்தான்.
தங்களிடையே இருந்த நட்பு முறிபட்டு போனபடியால் அகித்தோப்பேல் தாவீதுடைய ஆவிக்குரிய வேதனையையும், வருத்தத்தையும் காணவே இல்லை. ஆண்டவரிடமிருந்து தாவீது பெற்றுக்கொண்ட மன்னிப்பைப் பற்றியும் அவன் அறியாமல் இருந்தான். தன் பிள்ளையின் உயிருக்காக தேவனிடம் தாவீது மன்றாடி, ஒரு வாரமாக உபவாசித்து, முகங்குப்புற தேவ சமூகத்தில் தாவீது இருந்ததையும் பற்றி அகித்தோப்பேலுக்கு ஒன்றும் தெரியாது. தாவீது பட்ட சஞ்சலத்தில் தன் உயிரைக் கூட அழித்துவிடுவான் என்று அரண்மனையின் ஊழியர்கள் பயந்து இருந்த வேளை அது.
இப்படிப்பட்ட தாவீதின் வேதனைகளில் எதையேனும் அகித்தோப்பேல் கண்டிருந்தால், அவனுடைய கசப்புத்தீ சற்றாவது மாறி இருக்கக்கூடும் என்று தாவீது நினைத்தான். ஆனால், அகித்தோப்பேலோ தாவீது தன் பாவத்தை உணர்ந்ததையும், கடவுளோடு ஐக்கியப் பட்டதையும் பற்றி சற்று கூட அறியாமல் கீலோவிலேயே தங்கிவிட்டான். அவனுக்குள் இருந்த கோபத்தின் தீப்பிழம்புகள் மெதுவாக எரிந்து கசப்பின் தணல்கள் ஆயிற்று. அது, ஒரு காலத்தில் பெரிய ஞானியாக இருந்த மனிதனை, ‘ தாவீது தனக்கு ஈடு செய்ய வேண்டும்’ என்கிற ஒரே நோக்கம் கொண்ட நீசனாக்கி விட்டது!
அகித்தோப்பேலின் திட்டங்கள் நழுவிச் செல்ல ஆரம்பித்ததால், வாழ்வதற்கு ஒரு நோக்கம் இல்லாமல் அவன் தன்னையே கொலை செய்து கொண்டான்.
அகித்தோப்பேல் ஒரு பெரிய எதிர்காலத்தை நோக்கி இருந்தான். ஆனால் அவனுக்குள் காணப்பட்ட மன்னிக்க இயலாத சுபாவம் அவனுடைய அழைப்பையே பாழாக்கிவிட்டது. தாவீதை மட்டும் மன்னித்து இருந்தால், அகித்தோப்பேலின் முடிவு இவ்வளவு பரிதாபமாக இருந்திருக்க வேண்டியதில்லை.
கடவுளுடைய காரியத்துக்காக நிற்கும் மனிதனைக் காட்டிலும் கடவுளுடைய நோக்கமே பெரியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பெரிய பொறுப்பான இடங்களில் பாவத்தைக் கண்டுபிடித்ததால், தான் வேலை செய்யும் இடத்தை விட்டு நீங்கிவிடுவது நியாயமாகாது. அவனுடைய காலத்திலே அகித்தோப்பேல் மிகப்பெரிய மனிதர்களின் ஒருவனாக இருந்தான். ஆனால் அவன் முற்றிலும் கறை பட்டு போகத் தக்க அளவில், அநீதியான கடந்தகால சம்பவங்களின் நினைவுகள் அவனுடைய மனதை முற்றிலுமாக ஆட்கொண்டன.
ஆண்டவர் தாவீதை மன்னித்த போதிலும், அகித்தோப்பேல் தாவீதை மன்னிக்க முடியவில்லை. தாவீதுக்கு ஏற்பட்ட விளைவுகள் கொடியவை, ஆனால் அகித்தோப்பேலின் முடிவோ அதைக்காட்டிலும் பயங்கரமானது. ஒருவரை விரைவில் மன்னிப்பது கடினமானது. ஆனால் சீக்கிரத்தில் நம்முடைய மன்னிக்க முடியாத தன்மையை விட்டு விடும் போது, அது நமக்கு நல்லது.
உன்னுடைய எதிர்காலம் அழிந்து போகாதபடிக்கு, நீ யாரை மன்னிக்க வேண்டும்?
மேற்கோள்: பெர்னாட் மெல்ட்சர் இவ்விதமாகக் கூறியிருக்கிறார். “நீ மன்னிக்கும்போது கடந்த காலத்தை எந்தவிதத்திலும் மாற்றுவதில்லை. ஆனால் நிச்சயமாக எதிர்காலத்தை மாற்றுகிறாய்.”
ஜெபம்: கர்த்தாவே, ஒரு மன்னிக்க முடியாத ஆவி என்னுடைய எதிர்காலத்தையே அழித்துவிடும் என்பதை நான் உணருகிறேன். நான் மன்னிக்க எனக்கு உதவி புரியும். ஆமென்
Scripture
About this Plan

அகித்தோப்பேல் தாவீது ராஜாவின் ஒரு நம்பிக்கையான ஆலோசகராக இருந்தான். ஆனால், அவனுக்கு இருந்த கசப்புத் தன்மையால் அப்சலோமின் சதித்திட்டத்துடன் ஒருங்கிணைந்து தாவீதுக்கு துரோகம் செய்தான். இறுதியில் தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக் கொண்டான். மனக்கசப்பு உன்னைக்கொல்ல விடாதபடி, அதன் காரணங்களையும், குணப்படுத்தும் முறையையும் இந்த ஐந்து நாட்கள் தியானப்பகுதியில் படித்து பயன் பெறுங்கள்.
More
Related Plans

Be Good to Your Body

Christian Forgiveness

Biblical Marriage

A Spirit Filled Moment

LIVING LETTERS: Showing JESUS Through Your Life

A Spirit-Filled Moment: Encountering the Presence of God

Refresh Your Soul - Whole Bible in 2 Years (5 of 8)

Refresh Your Soul - Whole Bible in 2 Years (6 of 8)

Unwrapping Christmas
