கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!Sample

கசப்பு ஆவியினாலே ஏற்படும் ஆபத்து என்ன?
அகித்தோப்பேல், தன் பேத்தியுடன் தாவீது விபச்சாரம் செய்ததையும், அவளுடைய கணவனைக் கொல்ல சதித்திட்டமிட்டதையும் கேள்விப்பட்ட வேளையிலேயே, தாவீதைத்தன் பிராண எதிரியாய் கருதினான். உடனே தன் சாமான்களைக்கட்டிக்கொண்டு தனது சொந்த ஊரான கீலோவுக்குத்
திரும்பினான்.
இது நமக்கு எப்படித்தெரிய வருகிறது என்றால், அகித்தோப்பேலை அப்சலோம் முதலாவதாக தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அகித்தோப்பேல் தாவீதுக்கு ஆலோசனை கொடுப்பவனாக, ராஜாவின் நீதிமன்றத்தில் இல்லாமல், அநேக மைல்களுக்கு அப்பால் கீலோவிலே தன் இல்லத்தில் இருந்தான்.
அகித்தோப்பேலின் இந்த கசப்பு வேர் பத்து ஆண்டுகள் வெளிக்கு வராமல் இருந்தது. பத்து ஆண்டுகளாக அவன் தன்னுடைய மனஸ்தாபத்தையும், வெறுப்பையும், கசப்பையும் தன் உள்ளில் பேணிக் கொண்டே இருந்தான். தாவீதைப்பழிக்குப்பழி வாங்க ஏதாவது வழிபிறக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தான்.
ஆனால் இந்த பழிக்குப் பழி வாங்கும் கசப்புக் கனவுகளை அவன் தினமும் நீர்ப் பாய்ச்சி வந்தமையாலே, அது இன்னமும் வளர்ந்து கொண்டே தான் போயிற்று. பின்னர் ஒரு நாள் அது முளைவிட்டு ஒரு பெரிய மரமாகி, அழுகிய பழங்களைக்கொட்டி, ஆயிரக்கணக்கான உயிர்களை விஷப் படுத்தியது.
அகித்தோப்பேல் தற்கொலை செய்துகொள்வதற்கு வெகுநாட்களுக்கு முன்னர், அவன் தாவீதை மன்னிக்க மறுத்ததினால் அவனுடைய ஆவி அவனுக்குள் சுருங்கி செத்துப் போனது.
2 சாமுவேல் 17:2 - ஆம் வசனத்தில், அகித்தோப்பேல் அப்சலோமுக்குக் கொடுத்த இரண்டாவது ஆலோசனையைப் பார்த்தால், அவன் இவ்விதமாய் கூறுகிறான். - “ நான் ராஜா ஒருவனை மாத்திரம் வெட்டி,”
அகித்தோப்பேல் தாவீது ஒருவனை மட்டும் கொலை செய்ய ஆசித்தான். இதில் அசாதாரணமானது என்னவென்றால் அகித்தோப்பேல் ஒரு போர் வீரன் அல்ல. அவன் ஒரு ஆலோசகன், ஞானவான், ஆனால் போர்ச் சேவகன் அல்ல. இருந்தபோதிலும், அவன் தாவீதைத்தாக்க தானே தலைநின்று தானே அக்காரியத்தை செய்துவிட விரும்பினான்.
ஆனால் அவனுடைய ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படாத போதும், அவனால் தாவீதைக்கொலை செய்ய முடியாத வேளையிலும், அப்சலோமோடு சேர்ந்து, அவன் வளர்த்து வந்த கிளர்ச்சி எண்ணம், தாவீதுக்கும் அப்சலோமுக்குமிடையே நடந்த யுத்தத்தில் 20000 பேரின் மரணத்தை விளைவித்தது.
எபிரேயர் 12:15 - இல் நாம் இவ்வாறாக வாசிக்கிறோம். “ ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்து போகாத படிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பி கலகம் உண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாத படிக்கும்,”
வேரானது தரையில் அடியில் மறைந்திருந்தாலும் அது செடி முழுவதையும் போஷிக்கிறது. வேர் என்பது காண முடியாதது, ஒடுக்கப்பட்டது, தனிப்பட்டது, மறைந்திருக்கும். இருந்தபோதிலும் அது நம்முடைய ஆத்துமாவுக்கு உணவளிக்கிறது, நம் மனதுக்கு காரியங்களைத் தெரிவிக்கிறது, நம்முடைய நோக்கங்களை எரிபொருள் போன்று தூண்டிவிடுகிறது.
ஆனால் அது ஒரு கசப்பான வேர். ஆகையால் நம்மையும், நாம் தொடர்பு கொள்கிற எவரையும் விஷமாக்கி விடுகிறது. எந்த கசப்பான வேரும் என்னில் காணப்படுகிறதா என்பது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் அதைத் தடுக்காமல் இருந்துவிட்டால் அது மரணத்தையும் அழிவையும் பரப்புகிற ஒரு விஷமுள்ள களையாக வளர்ந்தோங்கும்.
தாவீது சங்கீதம் 51- இல் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு பெற்றுக்கொண்டு தன் வாழ்வைத் தொடர்ந்து நடத்தினான். அகித்தோப்பேலோ கசப்பால் நிறைந்தான். அந்த கசப்பின் வேர் தன் வாழ்க்கையை, தானே முடித்துக்கொள்ள அவனை வழி நடத்தியது.
மேற்கோள்: “மனஸ்தாபம் கசப்புக்கும், கசப்பு கோபத்துக்கும் வழி நடத்தும். அந்த நீண்ட பாதையில் திசையும் தப்பி விடும்.”
ஜெபம்: கர்த்தாவே, கசப்புணர்ச்சியின் பாதையில் நடப்பது ஆபத்தானது என்பதை நான் உணர எனக்கு உதவும். நான் மனந்திரும்பி உம்மிடத்தில் மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளவும் எனக்குத் தீங்கு செய்தவருக்கு நான் மன்னிப்பு அழைக்கவும் உதவி புரியும். ஆமென்
Scripture
About this Plan

அகித்தோப்பேல் தாவீது ராஜாவின் ஒரு நம்பிக்கையான ஆலோசகராக இருந்தான். ஆனால், அவனுக்கு இருந்த கசப்புத் தன்மையால் அப்சலோமின் சதித்திட்டத்துடன் ஒருங்கிணைந்து தாவீதுக்கு துரோகம் செய்தான். இறுதியில் தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக் கொண்டான். மனக்கசப்பு உன்னைக்கொல்ல விடாதபடி, அதன் காரணங்களையும், குணப்படுத்தும் முறையையும் இந்த ஐந்து நாட்கள் தியானப்பகுதியில் படித்து பயன் பெறுங்கள்.
More
Related Plans

5 Marriage Resolutions You Can Actually Keep This Year

How to Make Home for the Holidays Happier

New Year, New Me, Same God: Walking With God Into the New Year

INVITING JESUS INTO the MESS

The Christmas Story: God's Greatest Gift

Choosing Wisdom

What's the Point, Anyway?

Revelation Through Song in 7 Days

Breaking Free From Labels & Finding Identity in Christ
