YouVersion Logo
Search Icon

பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்) Sample

பொறுப்பு (கணக்கு  ஒப்புவித்தல்)

DAY 2 OF 7

கடவுளுக்கு  கணக்கு  ஒப்புவித்தல் - நேரம் , தாலந்து , பொக்கிஷம்  - நான்  பெற்றுக்கொண்டதை  வைத்து  என்ன  செய்கிறேன் ? 

ஒரு மரத்தடியில் உட்கார்ந்து, பகற்கனவு கண்டு கொண்டிருந்த இளைஞனைப் பற்றிய கதை இது. அந்த இளைஞனை நிர்வாகத்திறமை படைத்த மற்றொரு வாலிபன் கண்டு இளைஞனே நீ ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை? படிக்கவில்லை? என்று வினவினான். “அதற்கப்புறம்” ?  என்று இளைஞன் கேட்க வாலிபனும் “நீ பள்ளியில் சென்று நன்கு படித்தால் கல்லூரிக்குச் சென்று பட்டம் பெற முடியும்” என்று பதிலளித்தான். மீண்டும் இளைஞன் “அதற்கப்புறம்” ?  என்று கேட்டான். 

நிர்வாகியான வாலிபன் ‘உனக்கு ஒரு வேலை கிடைக்கும் அதில் நீ முன்னேறி, உயர் பதவியிலிருந்து, செல்வமிக்கவனாக ஓய்வு பெறலாம்” என்று கூறினான். இளைஞன் மீண்டும் “அதற்கப்புறம்” ?  என்ற கேள்வியையே கேட்க “கடற்கரை அருகில் ஒரு வீடு வாங்கி, விடுமுறையில் அங்கு மரத்தடியில் உட்கார்ந்து  கனவு காணலாம்” என்று கூறினான். அதற்கு அந்த இளைஞன் “அதைத்தான் நான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறேன்” என்று சொன்னான். நிர்வாகியான வாலிபன், இளைஞனின் அறியாமையைக் கண்டு அதிர்ந்து போனான்.

கிறிஸ்தவர்களாகிய நாமும் கூட அந்த நிலைமையில்தான் இருக்கிறோம். நம்மில் ஒவ்வொருவரும், இயேசுவை நமது இரட்சகராக அறிந்திருக்கிறோம். அவரிடம் வந்திருக்கிறோம். ஆனால் ஒருமுறை அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்ட பிறகு, கடற்கரையில் இருப்பவர்களோடு சேர்ந்து, பின்னால் உட்கார விரும்புகிறோம். இத்தகையை அணுகுமுறையைத் தவறு என்று மத்தேயு 25ம் அதிகாரத்தில் இயேசு சொல்கிறார். தங்களுக்கு கொடுக்கப்பட்ட தாலந்துகளை, இருமடங்காக உயர்த்தியமைக்கு எஜமான் பாராட்டப்படுவதை பார்க்கிறோம். 

நமக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரம், திறமை, செல்வம்; ஆகியவற்றுக்காக நாம் கடவுளுக்கு கணக்குக் கொடுக்க வேண்டும். நமது அன்றாட வாழ்வில்  அதிக சுறுசுறுப்பாக காட்டிக்கொண்டு, கடவுளுக்கு நேரம் கொடுக்க தவறுகிறோம். நாம் செலவழிக்கிற நேரங்களை ஆராய்ந்து பார்த்தால் நித்தியத்திற்காக மிகக் குறைவாகவே செலவிடுகிறோம். நமது தாலந்துகளை, கடவுளின் மகிமைக்காக எவ்வாறு செலவழித்து, இறையரசில் ஈடுபட்டு வருகிறோம். கடவுள் நமது கரத்தில் தந்த பொறுப்புகளை வீண் அடிக்கிறோமா? 

இன்றைய  சிந்தனை :   

நேரத்தையும் தாலந்துகளையும் கடவுளின் பணிகளுக்காக உபயோகிப்பதே புத்தியுள்ள மூலதனம். 

ஜெபம:

கடவுளே, என்னுடனே நேரத்தைப் பொறுப்போடு செலவிடவும், என்னுடைய நாட்களை எண்ணும் அறிவையும் தந்து உதவி செய்யும், நீர்  தந்த அன்பளிப்புகளையும், திறமைகளையும் உணர்ந்து கொள்ள கிருபை செய்யும். உம்முடைய விண்ணரசு, இந்த பூமியிலே செயல்பட என்னை ஒரு கருவியாக உபயோகியும் ஆமென்.
 

Day 1Day 3

About this Plan

பொறுப்பு (கணக்கு  ஒப்புவித்தல்)

பொதுவாக  மனிதர்கள் என்ற  முறையில், அதிலும்  குறிப்பாக  கிறிஸ்தவர்கள்  என்ற கண்ணோட்டத்தில் ,  நாம்  அனைவருமே , பல்வேறு மட்டங்களில் , தேவனுக்கும் , நமது  குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் , பணி  செய்யும்  இடங்களில் நமது  முதலாளிக்கும் , நம்முடன்  இணைந்து  பணியாற்றும்  குழுவினருக்கும் கணக்கு  ஒப்புவிக்கும்  பொறுப்புடையவர்களாய்  இருக்கின்றோம். ஆனால் , மனித  இயல்பானது ,யாருக்கும்  கணக்கு ஒப்புவிக்க  விரும்புவதில்லை.  கடவுளுக்கு  கணக்கு  ஒப்புவித்தல்  என்பது  மற்ற  எல்லா  பொறுப்புடைமைக்கும்  பொருந்தக்கூடிய  அடிப்படை  அம்சமாகும் . 

More