மனதின் போர்களம்Sample

ஈவுகளையல்ல, தேவனையே தேடுங்கள்!
“கர்த்தருடைய முகத்தைத் தேடுவதற்கு பதிலாக, அவருடைய வரங்களைத்தான் நான் தேடினேன்,” என்று குற்ற உணர்வுடன் கூறினாள் என்னுடைய சிநேகிதி ஒருவள். கர்த்தருடைய முகத்தை தேடுவதிலும், அவர் யாராக இருக்கிறார் என்பதில் அகமகிழ்வதை விட; எத்தனையோ தடவைகளில், கர்த்தர் எனக்கு செய்தவைகளைக் குறித்துதான் நான் பரவசமடைந்திருக்கிறேன், என்றாள் அவள். கர்த்தருடைய ஆசீர்வாதங் களுக்காகவும், அவருடைய அற்புதங்களுக்காகவும், அவள் மிகவும் வாஞ்சித்தாள். வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க, கர்த்தர் அவளை பயன்படுத்தினார். இதன் மூலம், மக்களுக்கு ஊழியம் செய்ய கர்த்தர் வாசல்களை திறந்தார்.
உண்மையாகவே தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்று, தேவனால் பயன்படுத்தப்படும் தேவ ஊழியர்களை நாம் அனைவரும் அறிவோம். பெரிய அளவில் விழுந்துபோன ஒரு சிலரையும் கூட நாம் அறிந்திருக்கிறோம். எதினால் அப்படி நடந்தது? எனக்கு அதைக் குறித்த விளக்கங்கள் எதுவும் தெரியாது. ஆனால், சாத்தானுடைய தந்திரத்தின் விதங்களைக் குறித்து எனக்கு நன்கு தெரியும்.
தேவன், ஊழியர்களை எழுப்புகிறார். தேவனுடைய பிள்ளைகள், உண்மையாகவே அவருக்கு ஊழியம் செய்யவேண்டும் என்ற வாஞ்சை யுள்ளவர்கள். அவர்கள் வெற்றிகரமாக ஊழியத்தைத் தொடரும்போது, சாத்தான் அவர்களைத் தாக்க ஆரம்பிக்கிறான். அவர்களை எப்படி வல்லமையாய் தேவன் உபயோகிக்கிறார் என்று அவர்களுக்கு ஞாபகப் படுத்துகிறான் (சில நேரங்களில் பிசாசு உண்மையைக் கூறி, தன்னுடைய பொய்க்குள் நம்மை நடத்துவான்). அவர்களை இன்னும் முன்னணியில் செல்ல, இன்னும் வெற்றிகளை பெற, அவர்களுடைய பெலவீனத்தைப் பயன்படுத்தி, உற்சாகப்படுத்துவான்.
அவர்கள், அவனைப் பகுத்தறிந்து, பிசாசின் குரலை அதட்டாவிட்டால், அவர்களை இன்னும் முன்னேற்றி, அதிகமாக ஆவியின் வரங்களை செயல்படுத்த விரும்பவைப்பான். தாங்கள்தான் சுகமளிக்கும் ஊழியத்தில் சிறந்தவராக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அல்லது, தாங்கள்தான் உலகத்தில் பிரசித்திப்பெற்ற சுவிசேஷகராக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் தேவனுடைய மெல்லிய சத்தத்தை கேட்க, அவ்வப்போது தவறிவிடுவார்கள். கர்த்தருடைய இதய துடிப்பையும், மன பாரத்தையும் கவனிக்காமல், முன்னேறிச் செல்ல முனைந்துகொண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு எது வேண்டுமோ, அதையெல்லாம் கர்த்தர் கொடுத் திருப்பார். ஆனால், உண்மையாக பார்த்தால், அவர்களுக்கு கர்த்தர் வேண்டியதில்லை. பிசாசுடைய பழைய தந்திரங்களில் இதுவும் ஒன்று. தேவன் தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு, ஏதோ பரிதானம் கொடுப்பதுபோல பிசாசு குற்றஞ்சாட்டுகிறான். யோபின் புத்தகத்தில் முதலாம் அதிகாரத்தில், தேவன் யோபைக் குறித்து சொல்லும்போது, “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனும்...” (யோபு 1:8), என்று சாட்சியிடுகிறார்.
“அதற்கு சாத்தான் கர்த்தருக்கு பிரதியுத்தரமாக; யோபு விருதாவாகவா தேவனுக்கு பயந்து நடக்கிறான்? நீர்அவனையும், அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியைகளை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.
ஆனாலும், உம்முடைய கையை நீட்டி, அவனுக்கு உண்டானவை யெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்,” என்றான் (யோபு 1:9-11).
யோபு, பிசாசுக்கு இடங்கொடுக்கவில்லை என்பது நம்மெல்லாருக்கும் தெரியும். அவன் உண்மையாகவே தேவனை மட்டும் தேடினான். அவருடைய ஈவுகளையல்ல. யோபின் புத்தகம், சோதனைகளையும் துன்பங்களையும், ஒன்றன் பின் ஒன்றாக நமக்கு விளக்குகிறது. சாத்தான் அவன் நண்பர்களையும் விட்டுவைக்காமல், அவர்களையும் பயன்படுத்தி, யோபை விட்டுகொடுக்க வற்புறுத்துகிறான். யோபுவோ விடுவதாக இல்லை. ஏனென்றால், அவன் “கர்த்தரையே தேடினான்;” அவர் தரும் ஈவுகளையல்ல.
இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல், இதற்கு எதிரிடையாக செயல் பட்டான். அவன் உயரமான, அழகான, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மனுஷன். அவன் ஒரு பெரிய தலைவனாக இருந்திருக்கலாம்; ஆனாலும் அவன் மனதில் நடத்திய போராட்டத்தில், சாத்தான், ஜெயித்துவிடுகிறான் சவுலை அசுத்த ஆவிகள் அலைக்கழித்தன. அவனை அமைதிப்படுத்த சிறுவனாகிய தாவீது, குழலை ஊதவேண்டியதாயிருந்தது. அவனுடைய வாழ்க்கையின் முடிவில், ஒரு பதில் கிடைக்க, சூனியக்காரியைத் தேடி போகிறான். ஏனென்hறல், கர்த்தர் தன்னை விட்டுப்போய்விட்டார் என்பதை அறிந்துகொண்டான். பிசாசுக்கு செவிக்கொடுத்த மனிதன் இவன். “தேவனை” அதிகமாய் தேடுவதைவிட, தேவனுடைய ஈவுகளையும், வல்லமையையும் நாடினவன்.
நம்முடைய பரமபிதா, தம்முடைய பிள்ளைகளுக்கு நம்மையான ஈவுகளைக் கொடுப்பதில் அதிக விருப்பமுள்ளவர். ஆனால், முதலில் நீங்கள் அவரைத் தேடவேண்டும். ஆரம்ப வசனத்திலே, சாலமோன் தேவனிடத்தில் ஞானத்தைக் கேட்டபோது, அவர் அவனுக்கு ஞானத்தை மட்டும் கொடுக்கவில்லை. தேவன் அவனை மெச்சிக்கொண்டதுமல்லாமல், ஐசுவரியத்தையும், மகிமையையும், அவனுக்குத் தந்தார்.
தேவன் கிரியைச் செய்கிற தாராளமான விதம் இதுதான். அவரை நீங்கள் தேடும்போது, அவர் தாராளமாக மற்ற எல்லாவற்றையும் உங்களுக்குத் தருகிறார். அவருடைய ஈவுகளை மட்டும் நீங்கள் தேடினால், நீங்கள் அவைகளை பெற்றுக்கொள்வீர்கள், கூடவே ஒரு வெறுமையான வாழ்க்கையையும் பெற்றுக்கொள்வீர்கள். அல்லது, இன்னும் மோசமாக, சாத்தான் உங்கள் வாழ்க்கையில் முன்னே செல்ல இடங்கொடுக்கிறவர்களாயிருப்பீர்கள்.
மிகவும் பெரியவரும், ஞானமும் நிறைந்த தேவனே, தவறான காரியங்களை நான் நோக்கியதற்காக என்னை மன்னியும். நான் உம்மைத் தேடவும், உம்மைப் பிரியப்படுத்தவும், உம்மை மட்டும் வாஞ்சிக்கவும், எனக்கு உதவி செய்யும். நான் உமக்கு ஊழியம் செய்யவும், அதற்கு மேலாக, என்னுடைய வாழ்க்கை எப்பொழுதும் உமக்குப் பிரிய மானதாக இருக்கவேண்டும், உம்முடைய ஒத்தாசையை நான் நாடுகிறேன். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.
Scripture
About this Plan

ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
Related Plans

1 Samuel | Chapter Summaries + Study Questions

After Your Heart

POWER UP: 5 Days of Inspiration for Connecting to God's Power

Journey Through Jeremiah & Lamentations

GRACE Abounds for the Spouse

Battling Addiction

Forever Open: A Pilgrimage of the Heart

Overcoming Offense

Journey Through Minor Prophets, Part 2
