மனதின் போர்களம்Sample

உங்களைக் குறித்த தேவதரிசனம்
இஸ்ரவேல் மக்களைக் குறித்ததான தேவனுடைய திட்டம், அவர்கள் நன்மைக்காகவே இருந்தது. பதினோரு நாட்களில் முடிக்க வேண்டிய அவர்கள் பிரயாணத்தை, ஏன் நாற்பது ஆண்டுகள் செய்தார்கள்? அவர்களுடைய சத்துருக்கள் நிமித்தமா? சூழ்நிலைககளினாலேயா? வழியில் ஏற்பட்ட சோதனைகளினாலா? சரியான நேரத்தில் அவர்கள் சேர வேண்டிய இடத்திற்கு வராதபடி, வித்தியாசமான ஏதோ ஒன்று அவர்களை தடுத்துவிட்டதா?
அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து, இஸ்ரவேல் மக்களை அழைத்து தேவன் அவர்களுக்கு நித்திய சுதந்திரமாக - பாலும் தேனும் ஒடுகிற, அவர்கள் கற்பனை கூட பண்ணியிராத எல்லா நன்மைகளும் நிறைந்த, எந்த தாழ்ச்சியும் இல்லாத, செழுமை நிறைந்த தேசத்திற்கு அவர்களை போகச் சொன்னார்.
ஆனால், இஸ்ரவேல் மக்களுக்கோ, அவர்கள் வாழ்க்கைக்கென்று எந்த விதமான முற்போக்கான தரிசனமும் இல்லை. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும், ஆனால், எங்கே போகிறோம் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் பார்த்ததும், தற்போது கண்டுக்கொண்டிருந்தவைகளை எல்லாம் வைத்து தான் அவர்கள் வாழ்ந்தார்களே தவிர, அவர்களுக்கு “விசுவாசக் கண்களால்” பார்க்கத் தெரியவில்லை.
இஸ்ரவேல் மக்களைக் குறித்து நாம் அதிர்ச்சியுற்றவர்களாக பார்க்கக்கூடாது. ஏனென்றால் நம்மில் பலர் இப்படித்தான் இருக்கிறோம். நாம் சந்தித்த அதே பிரச்சனைகளையே, திரும்பத் திரும்பப் போராடி வருகிறோம். இதில் ஏமாற்றமான ஒரு முடிவு என்னவென்றால், விரைவில், உடனே சரி செய்ய வேண்டியவைகளை,பல ஆண்டுகளாகியும், நாம் சரி செய்யாததால், வெற்றி பெறாமலே இருக்கிறோம்.
தவறான முறையில் நடத்தப்பட்ட பின்னனியிலிருந்து, நான் வருகிறேன். என்னுடைய குழந்தை பருவம் பயமும், திகில் நிறைந்ததாக இருந்தது. என் ஆள்தத்துவம் என்று பார்த்தால், குழப்பம் நிறைந்ததாக இருந்தது. என்னைச் சுற்றிலும் யாரும் என்னை புண்படுத்திவிடாதபடிக்கு, என்னை நானே பாதுகாக்க, மதில்களை எழுப்பியிருந்தேன். மற்றவர்களை வெளியே தள்ளி பூட்டுவதாக நினைத்து, என்னை நானே உள்ளே தள்ளி பூட்டிக்கொண்டேன். எப்பொழுதும் பயத்தினால் நிறைந்தவளாக, வாழ்க்கையை எதிர்நோக்க ஒரே வழி, நானே எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும் என்று நம்பினேன்.
நான் இளம் வாலிபப் பெண்ணாக இருந்தபோது, கிறிஸ்துவுக்காக வாழவேண்டும், ஒரு விசுவாசியின் வாழ்க்கை முறையை பின்பற்றவேண்டும் என்று நினைத்தேன். எங்கிருந்து வந்தேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் எங்கு போகப்போகிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. என்னுடைய கடந்த காலத்தால், என் எதிர்காலமும் பாழாகிவிடும் என்று உணர்ந்தேன். என்னைப் போன்ற கடந்த காலத்தை உடையவள் எப்படி நன்றாக இருக்க முடியும்? இது முடியாத ஒன்று என்று தீர்மானித்தேன்.
ஆனால், இயேசுவானவர் எனக்கு வித்தியாசமான ஒரு திட்டத்தை வைத்திருந்தார். “கர்த்தருடைய ஆவியானவர் என் மேல் இருக்கிறார்; தரித்திரருக்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களை குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்கு பார்வையையும் பிரசித்தப்படுத்தவும்; நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்...” (லூக்கா 4:18) என்று அவர் சொன்னார்.
இயேசுவானவர் சிறைக்கதவுகளைத் திறந்து கைதிகளை விடுவிக்க வந்தார். அது என்னையும் சேர்த்துதான். அதை நான் விசுவாசிக்க வேண்டியிருந்தது. நான் இதைத் துவங்கும் வரை, என்னிடத்தில் பெரிய விடுதலையின் மாற்றம் எதுவும் இல்லை. என்னுடைய எல்லா பிற்போக்கான எண்ணங்களையும் எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக, என் வாழ்க்கைக்குரிய முற்போக்கான தரிசனத்தை நான் எனக்கு முன் வைக்க வேண்டியிருந்தது. என்னுடைய கடந்த காலமோ, நிகழ்காலமோ, என்னுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது, என்று நான் நம்பவேண்டியிருந்தது. அப்பொழுது தான் இயேசுவானவர் என்னுடைய கடந்தகாலக் கட்டுகளிலிருந்து என்னை விடுவிக்க முடியும் - அவர் அதைச் செய்தார். என்ன ஆச்சரியமான அற்புதம்!
உங்களுக்கும் ஒருவேளை அப்படிப்பட்ட துயரமான கடந்தகால நிகழ்ச்சிகள் இருந்திருக்கலாம். நிகழ்காலத்திலும், தற்போதுள்ள சூழ்நிலைகளும் பிற்போக்கானதாக, உங்களை அழுத்துகிறதாக இருக்கலாம். நீங்கள் கடுமையான சூழ்நிலையைச் சந்தித்து, அதன் விளைவாக, நம்பிக்கைக்கும் இடமுண்டோ என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், நான் தைரியமாக உங்களுக்கு சொல்லுகிறேன், உங்கள் கடந்த காலமோ, நிகழ்காலமோ உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில்லை!
தேவன், எகிப்தை விட்டு வெளியே அழைத்து வந்த தலைமுறையினரில் அநேகர், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்கவில்லை. அவர்கள் வனாந்திரத்தில் செத்தார்கள். என்னை பொறுத்த வரை, எல்லாவற்றையும் பெற்றும், அதை அனுபவிக்க முடியாத நிலைதான்; ஒரு கர்த்தருடைய பிள்ளைக்கு நடக்கும் பரிதாபமான காரியம் என்று நான் நினைக்கிறேன்.
தேவனுடைய வார்த்தை உண்மையானது என்று விசுவாசிக்கத் துவங்குங்கள். மாற்கு 9:23ன்படி, “தேவனால் எல்லாம் கூடும்...” என்ற வார்த்தை, நமக்கு உறுதியளிக்கும் ஒன்றாக இருக்கிறது. காணப்படுகிறவைகள், தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லை (எபிரெயர் 11:3). இப்படிப்பட்ட வல்லமையான தேவனை நாம் ஆராதிக்கிறோம். உங்கள் இல்லாமையை அவரிடம் கொடுத்து, அவர் உங்களுக்காக எப்படி கிரியை செய்கிறார் என்று பாருங்கள். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், அவரிலும், அவருடைய வார்த்தையிலும் உங்கள் விசுவாசித்தை வைக்கவேண்டியதுதான். எஞ்சியிருக்கும் காரியங்களை, கர்த்தர் பார்த்துக்கொள்வார்.
பிதாவே, என்னுடைய வாழ்க்கைகென்று நீர் வைத்திருக்கும் தரிசனத்திற்காகவும், திட்டத்திற்காகவும் உமக்கு நன்றி. கடந்தகாலத்துக்குரியவைகளோ, நிகழ்காலத்துக்குரியவைகளோ என் மனதிற்கு விரோதமாக வரும் எந்த பிற்போக்கான பிரச்சனைக்குரிய சிந்தனைகளையும், நான் மேற்கொள்ள எனக்கு உதவிச்செய்யும். நீர் விரும்புவது போலவே நான் வாழ எனக்கு உதவிச்செய்யும். ஆமென்.
Scripture
About this Plan

ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
Related Plans

Growing Your Faith: A Beginner's Journey

Kingdom Parenting

Heaven (Part 1)

God in 60 Seconds - Fun Fatherhood Moments

Hebrews: The Better Way | Video Devotional

Drawing Closer: An Everyday Guide for Lent

Made New: Rewriting the Story of Rejection Through God's Truth

Be the Man They Need: Manhood According to the Life of Christ

Heaven (Part 3)
