மனதின் போர்களம்Sample

காத்திருக்கும் தேவன்
என்னுடைய கஷ்டமான காலங்களில், இந்த வசனம் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியதும், எனக்கு மிகவும் பிடித்த வசனமுமாகும். “லிவிங் பைபிள்” என்ற ஆங்கில வேதாகமம், இந்த வசனத்தை: “தன்னுடைய அன்பைக் காட்டும்படியாக, கர்த்தர் இன்னும் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அவர் சொன்னபடியே, உங்களை ஆசீர்வதிப்பதற்காகவே, உங்களை மீட்டுக்கொண்டார்; ஏனென்றால், அவர் தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற உண்மையுள்ள வராயிருக்கிறார். அவர் உதவி செய்வார் என்று அவருக்காக காத்திருக் கிறவர்கள் பாக்கியவான்கள்”, என்று இப்படியாக மொழியாக்கம் செய்துள்ளது. இந்த வாக்குத்தத்தத்தை நமக்கொன்று எடுத்துக்கொள்ள கொஞ்சம் நினைத்துப்பார்ப்போம். “கர்த்தர் நமக்காக காத்திருப்பார்...” அண்ட சராசரங்களையும் படைத்த தேவன், அனைவருக்கும் ஜீவனை வழங்கியவர், நமக்காக காத்திருக்கத் தீர்மானிக்கிறார். அவர் நம்மேல் காட்டும் அன்பிற்கு பதில் செய்கையாக, நாம் அவர் மேல் அன்புகூர்ந்து, அவருடைய உதவியைப் பெற்றுக்கொள்ள அவரிடம் திரும்புவதற்காக, அவர் காத்திருக்கிறார்!
இந்த எண்ணமே, நம்மைத் திகைக்க வைக்கும் ஒன்றாகும். தேவன், தம்முடைய அன்பை நமக்கு வெளிக்காட்ட விரும்புகிறார்.
இந்த இடத்தில்தான், சாத்தான் நம்முடைய மனதில் தன்னுடைய அரண்களை கட்டி; நம்மேல் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறான். நாம் தேவனுடைய அன்பைக் குறித்து நினைக்கும்போது, நம்மில் அநேகருக்கு, அதை கிரகித்துக்கொள்ள முடிவதில்லை. நாம் நம்முடைய குறைகளையும், தோல்விகளையும், இன்னும் தேவன் நம்மேல் அன்பு கூராமலிருக்க ஆயிரம் காரணங்களையும் யோசிக்க ஆரம்பித்து விடுவோம்.
அநேக ஆண்டுகளாக நான் அறிந்த ஒரு நல்ல மனிதரை, எனக்கு நினைவிற்கு வருகிறது. அவருக்கு அவசியமில்லை என்றாலும், எனக்காக ஒரு சூழ்நிலையில் அவர் உதவி செய்தார். எனக்கு அது மிகவும் ஆச்சரியமாகவும், என் உள்ளத்தை மிகவும் தொட்டதுமாக இருந்தது. “நான் அறிந்தவர்களிலே, நீங்கள் மிகவும் நல்லவர்,” என்று அவரிடம் சொன்னேன்.
அவர் அதிர்ச்சியோடு என்னை முறைத்துப் பார்த்தார். “நானா? நல்லவனா? நான் கெட்டவன்; மிகவும் மோசமானவன்,” என்று சொன்னார். மேலும், “நான் நல்லவராக இருக்க வாய்ப்பே இல்லை, நான் எனக்காகவே வாழ்கிறேன், என்னுடைய குறைகளை எல்லாம் நானே பார்க்கிறேனே,” என்றார் அவர்.
“ஒருவேளை அதனால்தான் உங்களுக்கு பிரச்சினை. உங்கள் குறைகளைத்தான் நீங்கள் தெளிவாக காண்கிறீர்கள், நீங்கள் எவ்வளவு கரிசணை, மனதுருக்கம் உள்ளவர் என்பதை பார்ப்பதேயில்லை, அதைத் தள்ளிவைத்து விடுகிறீர்கள்”, என்று நான் சொன்னேன்.
அவர் நல்லவர் என்று நான் சொன்னதை, அவர் நம்பவில்லை. மேலும், அவர் மென்மையானவர் என்றும் நான் சொன்னேன். அதுவும் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நிறைய நேரங்களில், கர்த்தருடைய பிள்ளைகளும் இப்படித்தான் இருக்கின்றனர். நம்முடைய தோல்விகள், குறைகள் இவைகளையே யோசித்து, கவனம் செலுத்தி, கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிற தேவன், அவர் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார் என்பதை நம்ப மறுக்கிறோம். ஒருவேளை, “தேவன் உங்களை தண்டிக்க விரும்புகிறார்,” என்று வாசித்திருந்தால், அதை உடனே, “ஆமாம், எனக்கு அதுதான் சரியானது,” என்று ஆமோதித்திருப்போம்.
ஆனால், யாராவது உங்களிடம், “தேவன் உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார்” என்று சொன்னால், உடனே, “எனக்கு அதற்கு தகுதியில்லை” என்று சொல்லிவிடுவோம்.
தேவனுடைய ஆசீர்வாதம் நமக்குரியது என்று நம்மில் எத்தனை பேர் விசுவாசிக்கிறோம்? பொதுவாகவே, நமக்கு நன்மையானவைகள் என்றால், பிடிக்கும். நம்மில் தேவன் அன்புகூர வேண்டும், ஆசீர்வதிக்க வேண்டும், நமக்கு வெற்றித்தர வேண்டும் என்று விரும்புவோம். ஆனால், இந்த ஆசீர்வாதங்களை நாம் ஏற்றுக்கொள்ள விரும்பினாலும்; இந்த ஆசீர்வாதங்களுக்கு நான் “தகுதியானவன்” என்று விசுவாசிக்கத் தயங்குகிறோம்.
நமக்குத் தகுதியிருக்கிறது, நாம் அதற்கு பாத்திரமானவர்கள் என்ற விஷயத்தில் ஏன் நாம் தடுமாறுகிறோம்? ஏனென்றால், கர்த்தருடைய ஆசீர்வாதங்களை பெறுவதற்கு, நாம் ஏதாவது முயற்சியை எடுத்தால்தான் அடையமுடியும் என்று பொதுவாக நாம் நினைக்கிறோம். ஆனால், நாம் அவ்வளவு நல்லவர்கள் இல்லை, அந்த அளவு உண்மையானவர்கள் இல்லை என்றுதான் நினைக்கிறோம். தேவனுடைய வல்லமையான, கிருபையுள்ள அன்பை நினைக்கத் தவறிவிடுகிறோம். நாம் நல்லவர்களாக இருப்பதின் விளைவாக, தேவனிடம் ஆசீர்வாதங்களைப் பெறுவதில்லை. மாறாக, அவர் நல்லவராக இருப்பதினால்தான், நாம் அவருடைய ஆசீர்வாதங்களை பெறுகிறோம்.
நாம் தேவனிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு: ஏனென்றால், நாம் அவருடைய பிள்ளைகள். பெற்றோர்களாய் இருப்பவர்கள், இதை எளிதில் புரிந்துகொள்ளமுடியும். நம்முடைய பிள்ளைகளை, இந்த உலகத்திற்குள் நாம்தான் கொண்டு வந்தோம். எனவே, நம்முடைய அன்பிற்கு அவர்கள் பாத்திரமானவர்கள். அவர்கள் நமக்கு ஏதாவது செய்ய ஆரம்பிக்கும் முன்பே, நம்முடைய அன்பை அவர்கள்மேல் பொழிகிறோம். நாம் அவர்களைப் பாதுகாத்து, நன்மையானவைகளை அவர்களுக்கென்று தெரிந்துகொள்ளுகிறோம். அவர்கள், அந்த நன்மைகளை பெறுவதற்கு, நமக்கு ஒன்றும் செய்வதில்லை. நம்முடைய பிள்ளைகளாய் இருப்பதினாலேயே, அவைகளை அவர்கள் பெறுகின்றனர்.
சாத்தான் இந்த விஷயத்தில்தான் நம்மை தடுமாற்றம் அடைய செய்கிறான். ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள எனக்கு உரிமை உண்டு என்று நாம் நினைக்கும் மாத்திரத்திலேயே, நம்முடைய பெலவீனங்களையும், தோல்விகளையும் சுட்டிக்காட்டுகிறான். ஆனால் தேவனோ, அவரோடுள்ள நம்முடைய உறவைச் சுட்டிக்காட்டுகிறார். அதுதான் வித்தியாசம்.
கிருபையும் அன்பும் உள்ள ஆண்டவரே, என்னை ஆசீர்வதிக்க நீர் சித்தமுள்ளவராயிருக்கிறபடியால் உமக்கு நன்றி. பிசாசு என்னதான் நான் தகுதியற்றவன் என்று சொன்னாலும், நான் உம்முடையப் பிள்ளை, நீர் என்னுடைய தகப்பன் என்பதை எனக்கு நினைவுப்படுத்தும். ஆமென்.
Scripture
About this Plan

ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
Related Plans

Growing Your Faith: A Beginner's Journey

Kingdom Parenting

Heaven (Part 1)

God in 60 Seconds - Fun Fatherhood Moments

Hebrews: The Better Way | Video Devotional

Drawing Closer: An Everyday Guide for Lent

Made New: Rewriting the Story of Rejection Through God's Truth

Be the Man They Need: Manhood According to the Life of Christ

Heaven (Part 3)
