YouVersion Logo
Search Icon

Plan Info

இவைகளில் அன்பே பிரதானம்Sample

இவைகளில் அன்பே பிரதானம்

DAY 23 OF 26

வழக்கத்துக்கு மாறான அன்பு கொடுக்க விரும்புகிறது: அகாபேவினால் உந்தப்பட்டும் மெய்யான அன்பு பிறருடைய வாழ்க்கையில் நேரத்தையும், பிரயாசத்தையும், சில சமயங்களில் பணத்தையும் கூட முதலீடு செய்யும். அதுவே ஒரு ஊழியமாகிறது. நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கு ஊழியம் செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், கசந்துவிடக் கூடாது. அது ஒருதலைப்பட்சமானது அல்ல, பரஸ்பரமானது. தேவன் பரியாசம் பண்ணவொட்டார். திருமண உறவில் ஒருவர் மட்டும் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும், அடுத்தவர் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம் அல்ல. உணர்வு பூர்வமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் நல்வாழ்வை கொடுக்கக்கூடிய அன்பை பரிமாரிக்கொள்ளாமல், கணவன் அல்லது மனைவியை துச்சமாக எண்ணி, அதனால் உண்டாகும் காயங்களையும் வழிகளையும் பொருட்படுத்தாமல், அவர்களை தனிமை உணர்வின் ஆழத்தில் தவிக்கவிட்டு வேதனைப்படவைப்பது திருமண வாழ்வைக்குறித்த தேவனுடைய எண்ணம் அல்ல! அநீதியுள்ள குடிகார நாபாலைக் குறித்தும், நீதியுள்ள அபிகாயிலைக் குறித்தும் வேதம் மிகத்தெளிவாக நம்மோடு பேசினாலும், திருமண உறவுகளில் காணப்படும் துஷ்பிரயோகங்களைக் குறித்து திருச்சபை இப்போதுதான் மெதுவாக உணர ஆரம்பித்துள்ளது. ஆகவேதான் பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கக்கூடாது, முன்னே அறியாமையில் அப்படிப்பட்டவர்களைக் குறைசொல்லி, அவதூறு பேசி, குற்றப்படுத்தினது போல இப்போது செய்யக்கூடாது என்கிற உணர்வு திருச்சபைக்குள் இப்போது அதிகம் கொண்டுவரப்படுகிறது. கிறிஸ்தவ வீடுகளில் இப்படிப்பட்ட காரியங்கள் நடப்பதை ஒத்துக்கொள்வது சிலருக்கு சங்கடமாயிருந்தாலும், வேதத்தை கற்றறிந்தவர்கள் ஒரு காரியத்தை ஒத்துக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அதாவது, திருமண உறவில் ஒருவர் அநியாயமாய் வார்த்தைகளாலோ அல்லது உடல் ரீதியாகவோ அல்லது தாம்பத்திய ரீதியாகவோ அல்லது உணர்வு பூர்வமாகவோ திரும்பத்திரும்ப துன்புறுத்தப்பட்டால், துன்புறுத்துகிறவர்கள் மனம் மாறவிரும்பாத பட்சத்தில், அடுத்தவரைப் பற்றி அக்கறை கொள்ளாத பட்சத்தில், துன்புறுத்தப்படுகிறவர் தொடர்ந்து அந்த உறவில் நீடித்து இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இப்படிப்பட்ட உறவுகளில் விவாகரத்து தவிர்க்க முடியாததாகி விடுகிறது (1 கொரிந்தியர் 7:15). தேவ வகையான அகாபே அன்பு கொடுத்துக் கொண்டே இருக்கும் தன்மையுடையதுதான். ஆனால் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். நேசிக்கப்படுபவர் பதிலுக்கு நேசிக்க வேண்டும் என அகாபே அன்பு எதிர்பார்க்கிறது. தேவன் காரணம் இல்லாமல் நேசித்துக்கொண்டே இருப்பதில்லை. நாம் பதிலுக்கு அவரை நேசிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். இவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்நாள் முழுக்க இவரோடு வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பும் நபருக்கு, உங்களைவிட அவருடைய நண்பர்கள் மிகவும் முக்கியமாய் தோன்றினால் எச்சரிக்கையாயிருங்கள். உங்களுக்கு வெகுமதி வாங்குவதை பாக்கியமாக கருதாமல் செலவாக கருதும் ஒருவர், அதைவிட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக தனக்காக செலவு செய்துகொண்டு, அதற்கு நான் தகுதியானவன் தான் என்று தன்னைக்குறித்து எண்ணினால், அதிலுள்ள வஞ்சனையை ஆரம்பத்திலேயே பாருங்கள், மன வேதனையை தவிர்க்க முற்படுங்கள்.
Day 22Day 24

About this Plan

இவைகளில் அன்பே பிரதானம்

கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார். 

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy