யாத்திராகமம் 17:11-12
யாத்திராகமம் 17:11-12 TRV
மோசே தன் கைகளை உயர்த்திக் கொண்டிருக்கும் வரையும் இஸ்ரயேலர் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால் மோசே தன் கைகளைத் தாழ்த்துகின்ற போதெல்லாம் அமலேக்கியர் வெற்றி பெற்றார்கள். மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது ஆரோனும், ஊரும் ஒரு கல்லை எடுத்து அவருக்குக் கீழே வைத்தார்கள். அவர் அதன்மேல் உட்கார்ந்தார். ஆரோனும், ஊரும் ஒரு பக்கம் ஒருவனும், மறுபக்கம் மற்றவனுமாக அவருடைய கைகளை உயர்த்தித் தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள். அதனால் சூரியன் மறையும்வரை அவரது கைகள் உறுதியாயிருந்தன.


