யாத்திராகமம் 10:21-23

யாத்திராகமம் 10:21-23 TRV

அப்போது கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: “உன் கையை ஆகாயத்துக்கு நேராக நீட்டு. அப்போது எல்லோரும் உணரக்கூடிய காரிருள் எகிப்தின்மீது பரவும்” என்றார். மோசே தன் கையை ஆகாயத்தை நோக்கி நீட்டினான். அப்போது மூன்று நாட்கள் முழுமையான காரிருள் எகிப்து முழுவதையும் மூடியது. மூன்று நாட்களுக்கு எவரும் வேறொருவரைப் பார்க்கவோ, அல்லது தங்கள் இடத்திலிருந்து புறப்படவோ முடியாதிருந்தது. ஆயினும் அனைத்து இஸ்ரயேலருக்கும் அவர்கள் வாழ்ந்த இடங்களில் வெளிச்சம் இருந்தது.