ரோமர் முன்னுரை

முன்னுரை
அப்போஸ்தலனாகிய பவுல் ஏறக்குறைய கி.பி. 53–58 ற்கு இடைப்பட்ட காலத்தில், தனது மூன்றாவது நற்செய்தி பயணத்தின்போது, கொரிந்து பட்டணத்தில் இருந்தார். அவர் போகாதிருந்த ரோம் பட்டணத்திற்கு இங்கிருந்து போவதற்குத் திட்டமிட்டிருந்தார். அவர் தம்மையும், தம்முடைய போதனையையும் அங்கிருந்த திருச்சபைக்கு அறிமுகப்படுத்துவதற்காகவே இக்கடிதத்தை எழுதினார். இந்தக் கடிதத்தின் தொடக்கத்திலேயே, ஒவ்வொரு மனிதனும் பாவியாக இருக்கிறான் என்பதை அவர் எடுத்துக் காண்பிக்கிறார். அத்துடன், இறைவன் தமது இரக்கத்தினால், மனிதர் தம்மிடத்தில் திரும்பி வரக்கூடிய வழியை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதையும், அந்த வழியின் மூலமாகவே ஒரு வெற்றிகரமான ஆவிக்குரிய வாழ்க்கையை அடைந்துகொள்ள முடியும் என்பதையும் காண்பிக்கிறார். பின்பு இறைவனுடைய திட்டத்தில் இஸ்ரயேல் என்ன இடம்பெறுகிறது என்பதையும் பவுல் இக்கடிதத்தில் குறிப்பிடுகிறார். ஆவிக்குரிய வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது பற்றிய அறிவுரைகளோடு, அவர் இந்தக் கடிதத்தை முடிக்கிறார்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

ரோமர் முன்னுரை: TCV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល