1
மத்தேயு 7:7
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
ប្រៀបធៀប
រុករក மத்தேயு 7:7
2
மத்தேயு 7:8
ஏனெனில், கேட்கின்ற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கின்றான்; தேடுகின்றவன், கண்டுகொள்கின்றான்; தட்டுகின்றவனுக்குத் திறக்கப்படுகிறது.
រុករក மத்தேயு 7:8
3
மத்தேயு 7:24
“எனவே நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செய்கின்ற ஒவ்வொருவனும், மலைப்பாறையின்மீது தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனிதனைப் போலிருப்பான்.
រុករក மத்தேயு 7:24
4
மத்தேயு 7:12
ஆகவே மற்றவர்கள் உங்களுக்கு எவற்றைச் செய்யவேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களோ, அவற்றையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்; ஏனென்றால் இதுவே நீதிச்சட்டத்தினதும் இறைவாக்கினர்களினதும் சாரம்சமாகும்.
រុករក மத்தேயு 7:12
5
மத்தேயு 7:14
ஆனால் வாழ்வுக்கு வழிநடத்தும் வாயில் எத்தனை குறுகலானது! பாதை எத்தனை கடினமானது! ஒருசிலரே அதனைக் கண்டுபிடிக்கிறார்கள்.
រុករក மத்தேயு 7:14
6
மத்தேயு 7:13
“குறுகலான நுழைவாயில் ஊடாக உட்செல்லுங்கள். ஏனெனில் அழிவை நோக்கி வழிநடத்தும் நுழைவாயில் அகலமானது, அதற்கான பாதையும் இலகுவானது. இதனூடாகவே அநேகர் உள்ளே நுழைகிறார்கள்.
រុករក மத்தேயு 7:13
7
மத்தேயு 7:11
நீங்கள் தீயவர்களாய் இருந்தும், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கின்றீர்கள். அவ்வாறெனின், பரலோகத்திலிருக்கின்ற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு, நல்லவற்றைக் கொடுப்பது எவ்வளவு நிச்சயம்!
រុករក மத்தேயு 7:11
8
மத்தேயு 7:1-2
“நீங்களும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படாதபடி மற்றவர்களைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்புச் செய்யாதிருங்கள்; நீங்கள் மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிப்பது போலவே, நீங்களும் தீர்ப்பளிக்கப்படுவீர்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கின்றீர்களோ, அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
រុករក மத்தேயு 7:1-2
9
மத்தேயு 7:26
ஆனால் எனது இந்த வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செயல்படாத ஒவ்வொருவனும், மணலின் மீது தன் வீட்டைக் கட்டிய மூடனைப் போலிருப்பான்.
រុករក மத்தேயு 7:26
10
மத்தேயு 7:3-4
“நீ உனது கண்ணிலுள்ள மரக்கட்டையைக் கவனிக்கத் தவறி, உனது சகோதரனின் கண்ணிலுள்ள சிறு துரும்பைப் பார்ப்பது ஏன்? உன் கண்ணில் மரக்கட்டை இருக்கையில், நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள சிறு துரும்பை எடுத்துப் போடுகிறேன்’ என எப்படிச் சொல்லலாம்?
រុករក மத்தேயு 7:3-4
11
மத்தேயு 7:15-16
“போலி இறைவாக்கினரைக் குறித்து விழிப்பாயிருங்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ஆனால் உள்ளத்திலோ அவர்கள் கடித்துக் குதறுகின்ற ஓநாய்கள். அவர்களது செயல்களின் விளைவினால் நீங்கள் அவர்களை அறிந்துகொள்வீர்கள். மக்கள் முட்புதர்களில் இருந்து திராட்சைப்பழங்களையும், முட்செடிகளிலிருந்து அத்திப் பழங்களையும் பறிக்கிறார்களா? இல்லையே
រុករក மத்தேயு 7:15-16
12
மத்தேயு 7:17
அதேபோல், ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனிகளை விளைவிக்கும். ஆனால் கெட்ட மரமோ, கெட்ட கனிகளை விளைவிக்கும்.
រុករក மத்தேயு 7:17
13
மத்தேயு 7:18
நல்ல மரத்தினால் கெட்ட கனிகளை விளைவிக்க இயலாது. கெட்ட மரத்தினால் நல்ல கனிகளை விளைவிக்க இயலாது.
រុករក மத்தேயு 7:18
14
மத்தேயு 7:19
நல்ல கனி கொடுக்காத ஒவ்வொரு மரமும் வெட்டி வீழ்த்தப்பட்டு நெருப்பினுள் வீசப்படும்.
រុករក மத்தேயு 7:19
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ