ஆனால் நீங்களோ அவ்வாறிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகின்றவன் எவனோ, அவன் உங்களுக்குப் பணியாளனாய் இருக்கவேண்டும்; முதன்மையாய் இருக்க விரும்புகின்றவன் எவனோ, அவன் உங்களுக்கு அடிமையாய் இருக்கவேண்டும். அவ்வாறே, மனுமகனும் மற்றவர்களிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக அல்ல, மற்றவர்களுக்குச் சேவை செய்யவும், அநேகரை மீட்கும் கட்டணமாகத் தனது உயிரைக் கொடுக்கவுமே வந்தார்” என்றார்.