மூன்றாம் நாளில் அவர்கள் யாவரும் தொடர்ந்து விருத்தசேதனத்தினால் ஏற்பட்ட வலியுடன் இருக்கையில், தீனாளின் அண்ணன்மாரான சிமியோன், லேவி என்னும் யாக்கோபின் இரு மகன்மாரும் வாள்களுடன் போய், எவருமே தாக்குதலை எதிர்பார்த்திராத வேளையில் அந்த பட்டணத்துக்குள் நுழைந்து, அனைத்து ஆண்களையும் கொன்றுவிட்டார்கள்.