ரோமர் 4
4
விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்
1யூதர்களான எமக்கு சரீரத்தின்படி முற்பிதாவாக இருக்கும் ஆபிரகாம், இந்த விடயத்தில் கண்டறிந்தது பற்றி நாம் என்ன சொல்வோம்? 2உண்மையிலேயே ஆபிரகாம் தமது செயல்களினால் நீதிமானாக்கப்பட்டிருந்தால், அவர் அதில் பெருமை பாராட்டிக்கொண்டிருக்கலாம். ஆனால் இறைவனுக்கு முன்பாக அவர் பெருமை பாராட்டிக்கொள்வதற்கு இடமில்லை. 3அவரைப்பற்றி வேதவசனம் என்ன சொல்கின்றது? “ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தார், அது அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது”#4:3 ஆதி. 15:6 வசனம் 22 இலும் காண்க என்கிறது.
4ஒருவன் செய்ததற்குக் கொடுக்கப்படுகின்ற சம்பளம் ஒரு நன்கொடையாகக் கணக்கிடப்படுவதில்லை. அது அவனிடம் கடன்பட்டதை மீண்டும் கொடுத்துத் தீர்ப்பதைப் போன்றது. 5ஆனால் ஒருவன் சுயமுயற்சியின்றி, அநியாயக்காரர்களை நீதிமானாக்கும் இறைவன்மீது நம்பிக்கை வைக்கும்போது, அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்படுகிறது. 6நல்ல செயல்களினால் அல்லாமல் இறைவனால் நீதிமானாகக் கணக்கிடப்படுகின்ற மனிதனுடைய ஆசீர்வாதத்தைக் குறித்து தாவீதும் இவ்விதமாய் கூறுகிறார்:
7“எவரது மீறுதல்கள்#4:7 மீறுதல்கள் – நீதிச்சட்டத்தை மீறி வாழ்தல் என்று பொருள் மன்னிக்கப்பட்டு
பாவங்களும் மூடப்பட்டனவோ,
அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
8எவருடைய பாவத்தை அவர்களுக்கு எதிராக கர்த்தர் இனிமேல் கணக்கில் எண்ணாதிருக்கின்றாரோ,
அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.”#4:8 சங். 32:1,2
9இந்த ஆசீர்வாதம் விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு மாத்திரமா? அல்லது விருத்தசேதனம் அற்றவர்களுக்கும் உரியதா? வேதத்தின்படி#4:9 வேதத்தின்படி – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது “ஆபிரகாமின் விசுவாசமே அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது” என்று நாம் சொல்கின்றோம்.#4:9 ஆதி. 15:6 10அது எப்போது அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது? அவர் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதற்குப் பின்னரா? அல்லது அதற்கு முன்னரா? விருத்தசேதனம் பெற்றுக்கொண்ட பின்பு அல்ல, அதற்கு முன்பே அவ்வாறு கணக்கிடப்பட்டது. 11விருத்தசேதனம் பெறாத நிலையில் இருந்தபோது, ஆபிரகாம் விசுவாசத்தினால் பெற்ற நீதியின் முத்திரையிடப்பட்ட சான்றாக, விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றுக்கொண்டார். ஆகவே விருத்தசேதனம் பெறாதவர்களாயிருந்தும், விசுவாசிக்கின்ற எல்லோருக்கும் ஆபிரகாம் தந்தையாயிருக்கிறார். இதனால், அவ்விதமாகவே அவர்களுடைய விசுவாசமானது அவர்களுக்கும் நீதியாகக் கணக்கிடப்படுகிறது. 12அத்தோடு விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களில் ஒரு சாராருக்கும் அவர் தந்தையாக இருக்கின்றார். இவர்கள் வெறுமனே விருத்தசேதனம் செய்தவர்களாய் மாத்திரமன்றி, எமது தந்தையாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் பெற்றுக்கொள்ள முன்னதாக நடந்த அதே விசுவாச அடிச்சுவட்டிலே நடப்பவர்களாயும் இருப்பவர்கள்.
13ஆபிரகாம் உலகத்தின் வாரிசாவார் என்ற வாக்குறுதியை அவரும் அவரது சந்ததியும் நீதிச்சட்டத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்ளவில்லை, மாறாக விசுவாசத்தினால் வரும் நீதியின் மூலமாகவே பெற்றுக்கொண்டனர். 14ஏனெனில், நீதிச்சட்டத்தைப் பின்பற்றுபவர்களே வாரிசுகளாக வரமுடியும் என்றால், விசுவாசம் அர்த்தமற்றதாகி, வாக்குறுதியும் பயனற்றதாகி விடும்; 15ஏனெனில் நீதிச்சட்டம் இறைவனின் கோபத்தைக் கொண்டுவருகிறது. ஆனால் நீதிச்சட்டம் இல்லாதபோது மீறுதலும் இருப்பதில்லை.
16இதற்காகவே, வாக்குறுதி செய்யப்பட்டதானது கிருபையினால் கிடைக்கப் பெறும்படி, அது விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவ்வாறு, அது ஆபிரகாமின் சந்ததியினர் அனைவருக்கும் உரியது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது; அதாவது, நீதிச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாக ஆபிரகாமின் வழிவந்தவர்களுக்கு மட்டுமன்றி, ஆபிரகாமின் விசுவாசத்தையுடைய எல்லோருக்கும் அது உரியது. அவரே நம் எல்லோருக்கும் தந்தை. 17“அநேக இன மக்களுக்கு#4:17 அநேக இன மக்களுக்கு – கிரேக்க மொழியில், யூதரல்லாத மக்களுக்கு நான் உன்னைத் தந்தையாக்கினேன்”#4:17 ஆதி. 17:5 என்று ஆபிரகாமைக் குறித்து எழுதப்பட்டிருக்கின்றது. அதன்படி மரணித்தவர்களுக்கு உயிர் கொடுக்கின்றவரும், இல்லாதவற்றை கட்டளையிட்டு உருவாக்குபவருமான இறைவனை விசுவாசித்த ஆபிரகாம், இறைவனின் பார்வையில் நம் அனைவருக்கும் தந்தையாய் இருக்கின்றார்.
18“உனது சந்ததி இவ்விதம் எண்ணிக்கைக்கு அடங்காமல் இருக்கும்”#4:18 எண்ணிக்கைக்கு அடங்காமல் இருக்கும் – கிரேக்க மொழியில், உனது சந்ததி இவ்விதம் இருக்கும் என்று அவருக்குக் கொடுக்கப்பட்ட வாக்கின்படியே, அநேக இனங்களுக்கு, தான் தந்தையாவேன் என்ற வாக்குறுதியில் நம்பிக்கை இழக்கக் கூடிய சூழ்நிலையிலும் நம்பிக்கையுடன் ஆபிரகாம் விசுவாசித்தார். அதனால் அநேக இனங்களுக்குத் தந்தையானார்.#4:18 ஆதி. 15:5 19அவர் ஏறத்தாழ நூறு வயதுள்ளவராக இருந்தபோது, தனது உடல் பிள்ளை பெறும் தன்மை அற்றதாகிவிட்டது#4:19 தன்மை அற்றதாகிவிட்டது – கிரேக்க மொழியில் உயிரற்றது போல் ஆகிவிட்டது என்றும், சாராளின் கருவறை கருத்தரிக்கும் தன்மையை இழந்துவிட்டது என்றும் உணர்ந்தபோதும், அவர் விசுவாசத்தில் தளரவில்லை. 20இறைவனுடைய வாக்குறுதியைக் குறித்து அவிசுவாசத்தினால் அவர் தடுமாற்றமடையாமல், தனது விசுவாசத்தில் வலிமை அடைந்து, இறைவனுக்கே மகிமையைச் செலுத்தி, 21தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இறைவன் வல்லமை உள்ளவர் என்பதை அவர் உறுதியாக நம்பினார். 22இதனால்தான், “அவருடைய விசுவாசம் அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.” 23“அவருக்குக் கணக்கிடப்பட்டது” என்ற இந்த வார்த்தைகள் ஆபிரகாம் ஒருவருக்காக மட்டும் எழுதப்படவில்லை. 24நம்முடைய ஆண்டவர் இயேசுவை மரணித்தோரிலிருந்து எழுப்பியவரின்#4:24 எழுப்பியவரின் – இறைவனைக் குறிக்கின்றது மீது விசுவாசம் வைக்கின்ற நமக்கும் அவ்வாறே கணக்கிடப்படும். 25இந்த ஆண்டவர் இயேசு, நமது மீறுதல்களுக்காக மரணதண்டனைக்குக்#4:25 மரணதண்டனைக்குக் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது கையளிக்கப்பட்டு, நாம் நீதிமானாக்கப்படுவதற்காக உயிரோடு எழுப்பப்பட்டார்.
Currently Selected:
ரோமர் 4: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.
