யோனா 3
3
யோனா நினிவேக்குச் செல்லுதல்
1அதன் பின்னர் இரண்டாம் முறையும் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு வந்தது: 2கர்த்தர் யோனாவிடம், “நீ எழுந்து உடனே மாபெரும் பட்டணமான நினிவேக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்கே அறிவிப்பாயாக” என்றார்.
3யோனா கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து எழுந்து நினிவேக்குப் போனான். நினிவே ஒரு மாபெரும் பட்டணமாக இருந்தது;#3:3 சில மூலப்பிரதிகளில் நினிவே கர்த்தருக்கு ஒரு முக்கியமான பட்டணமாயிருந்தது என உள்ளது. அதை சுற்றி நடந்துவருவதற்கு மூன்று நாட்கள் எடுக்கும். 4யோனா ஒருநாள் முழுவதும் பட்டணத்துக்குள்ளே பயணம் செய்து,#3:4 சுமார் 30 கிலோ மீற்றர் தூரம். “நினிவே இன்னும் நாற்பது நாட்களில் அழிக்கப்படும்#3:4 அழிக்கப்படும் அல்லது கவிழ்க்கப்படும்.” என அறிவித்தான். 5நினிவேயின் மக்கள் இறைவனை விசுவாசித்தார்கள். அவர்கள் எல்லோரும் உபவாச நாளை அறிவித்து சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும் துயரஆடை#3:5 துயரஆடை – ஒருவர் மனம் வருந்துவதை வெளிக்காட்ட அணியும் உடலை அரிக்கும் துணி. அணிந்துகொண்டார்கள்.
6இந்தச் செய்தி நினிவேயின் அரசனுக்கு எட்டியவுடனே, அவன் தன் அரியணையைவிட்டு எழுந்து, தன் அரசஅங்கியைக் களைந்து, துயரஆடையால் தன்னை மூடிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான். 7அதன் பின்னர் அரசன் நினிவேயில் ஒரு அறிவிப்பை விடுத்தான்.
“அரசரும், அவருடைய பிரபுக்களும் பிறப்பித்துள்ள கட்டளை என்னவெனில்,
“மக்களோ மிருகங்களோ, மாட்டு மந்தையோ ஆட்டு மந்தையோ, எவையுமோ எதையும் சுவைத்துப் பார்க்கக் கூடாது. அவர்கள் சாப்பிடவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ கூடாது. 8மக்களும் மிருகங்களும் துயரஆடைகளினால் மூடப்பட வேண்டும். ஒவ்வொருவரும் உரத்த குரலில் இறைவனை அழைக்கட்டும். அவர்கள் தங்களுடைய தீமையான வழிகளையும் வன்முறையையும் விட்டுத் திரும்பட்டும். 9யாருக்குத் தெரியும்? ஒருவேளை, நாம் அழிந்துபோகாதபடி இறைவன் மனமிரங்கி மனதை மாற்றி, தம்முடைய கடுங்கோபத்தை விட்டுத் திரும்பக்கூடும்.”
10அவர்கள் செய்தவற்றையும், அவர்கள் எவ்வாறாகத் தங்கள் தீமையான வழிகளைவிட்டு விலகினார்கள் என்பதையும் இறைவன் பார்த்தபோது, அவர்கள்மீது தாம் கொண்டு வருவதாகச் சொல்லியிருந்த பேரழிவைக் குறித்து மனமிரங்கி மனதை மாற்றி, அதைச் செய்யாதிருந்தார்.
Currently Selected:
யோனா 3: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.