யோனா 2
2
1யோனா மீனுக்குள்ளே இருந்தவாறு தனது இறைவனாகிய கர்த்தரிடம் மன்றாடினான். 2அவன் தனது மன்றாடுதலில்:
“என் நெருக்கடியில் நான் கர்த்தரை நோக்கி அழைத்தேன்,
அவர் எனக்குப் பதிலளித்தார்;
பாதாளத்தின் வயிற்றிலிருந்து#2:2 வயிற்றிலிருந்து அல்லது ஆழத்திலிருந்து உதவி வேண்டி அழைத்தேன்,
நீர் எனது குரலைக் கேட்டீர்.
3நீர் என்னை ஆழத்துக்குள்,
நடுக்கடலின் மையத்தில் தள்ளிவிட்டீர்,
நீரோட்டம் என்னைச் சுற்றிச் சுழன்றது;
உம்முடைய அனைத்து அலைகள், பேரலைகள் எல்லாம்
எனக்கு மேலாக மோதிச் சென்றன.
4‘உமது பார்வையிலிருந்து
நான் துரத்தப்பட்டேன்.
இருந்தாலும், நான் மீண்டும்
உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப் பார்ப்பேன்’ என்றேன்.
5என் உயிரைப் பறித்துக் கொள்ளும்படியாக தண்ணீர் என்னை மூடிக்கொண்டது#2:5 அல்லது கழுத்தளவு எழுந்த தண்ணீர் என்னை நெருக்கியது,
ஆழம் என்னைச் சூழ்ந்து கொண்டது;
கடற்பாசிக் கொடிகள்#2:5 கடற்பாசிக் கொடிகள் அல்லது கடல் தாவரங்கள் என் கழுத்தைச் சுற்றிக்கொண்டன.
6மலைகளின் அடிவாரங்கள்வரை நான் இறங்கி அமிழ்ந்தேன்,
அந்த இடத்திலுள்ள#2:6 அந்த இடத்திலுள்ள சில மொழிபெயர்ப்புகளில் பூமியின் அடிவாரத்துக்கு என்றுள்ளது கதவின் கம்பிகள் என்னை என்றென்றும் அங்கிருப்பதற்காக அடைத்து வைத்தன.
ஆனால் என் இறைவனாகிய கர்த்தாவே,
குழியிலிருந்து நீர் என் உயிரை மேலே கொண்டுவந்தீர்.
7“என் உயிர் என்னைவிட்டு மங்கிப்போகையில்
நான் கர்த்தரை நினைவுகூர்ந்தேன்,
எனது வேண்டுதல்
உமது பரிசுத்த ஆலயத்தில் உம்மிடம் வந்தடைந்தது.
8“ஒன்றுக்கும் உதவாத விக்கிரகங்களைப் பற்றிக்கொள்கின்றவர்கள்
தங்களுக்குக் கிடைக்கக்கூடிய நிலையான அன்பின் நம்பிக்கையை இழந்து போகின்றார்கள்.
9ஆனால், நானோ நன்றியின் குரலோடு
உமக்குப் பலியிடுவேன்.
நான் செய்த பொருத்தனையை நிறைவேற்றுவேன்.
‘இரட்சிப்பு கர்த்தருடையது#2:9 இரட்சிப்பு கர்த்தருடையது அல்லது இரட்சிப்பு கர்த்தரிடமிருந்து வருகிறது.’ ” என்றான்.
10அப்போது, கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார்; அது யோனாவைக் கரையிலே வாந்தியெடுத்தது.
Currently Selected:
யோனா 2: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.