1
மத்தேயு 27:46
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
பிற்பகல் மூன்று மணியளவில், இயேசு பலத்த குரலில், “ஏலீ, ஏலீ, லாமா சபக்தானி” என்று சத்தமாய்க் கதறினார். “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்பதே அதன் அர்த்தமாகும்.
Compare
Explore மத்தேயு 27:46
2
மத்தேயு 27:51-52
அவ்வேளையில் இதோ! ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது; பூமியதிர்ந்தது; மலைப்பாறைகள் பிளந்தன; கல்லறைகளும் நொருங்குண்டு திறந்தன; இறந்து போயிருந்த பல பரிசுத்த மக்களின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன.
Explore மத்தேயு 27:51-52
3
மத்தேயு 27:50
இயேசு மீண்டும் பலத்த சத்தத்தோடு அழைத்து, தமது ஆவியை விட்டார்.
Explore மத்தேயு 27:50
4
மத்தேயு 27:54
இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்த நூற்றுக்குத் தளபதியும் அவனோடிருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த எல்லாவற்றையும் கண்டு கலக்கமடைந்து, “நிச்சயமாகவே இவர் இறைவனின் மகன்!” என்று சொன்னார்கள்.
Explore மத்தேயு 27:54
5
மத்தேயு 27:45
நண்பகல் பன்னிரண்டு மணியிலிருந்து, பிற்பகல் மூன்று மணி வரை பூமி முழுவதையும் இருள் சூழ்ந்து கொண்டது.
Explore மத்தேயு 27:45
6
மத்தேயு 27:22-23
“அவ்வாறாயின் மேசியா என அழைக்கப்படும் இயேசுவை நான் என்ன செய்யவேண்டும்?” என்று பிலாத்து கேட்டான். அவர்கள் எல்லோரும், “அவனைச் சிலுவையில் அறைவீராக!” என்று பதிலளித்தார்கள். “ஏன்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என பிலாத்து கேட்டான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறைவீராக!” என்று மேலும் உக்கிரமாகச் சத்தமிட்டார்கள்.
Explore மத்தேயு 27:22-23