திட்ட விவரம்

இயேசு யார்?மாதிரி

Who Is Jesus?

5 ல் 5 நாள்

இயேசுவே உயிர்த்தெழுந்த தெய்வம்


நீங்கள் என்றாவது இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று விட்டீர்களா? இது சரியான கேள்வி அல்ல என்று அறிவேன். தீடிரென இக்கேள்வியை கேட்டதற்காக மன்னியுங்கள். ஆனால் இறுதிச் சடங்குகள் நமக்குள் பல்வேறு பெரிய கேள்விகளை எழுப்புகின்றது, இதில் இறப்புக்கு பின்னான வாழ்க்கையைக் குறித்த கேள்விகளும் அடங்கும். 


இறப்பு இப்பூமிக்குரிய வாழ்வுக்கு முற்றுப்புள்ளி போன்றதா? அல்லது இறப்பு வாழ்விற்கு பின்னான ஏதோ ஒரு மாற்றத்திற்கான குறிப்பதற்கான காற்புள்ளி போன்றதா? 


இறப்புக்குப் பிறகான வாழ்க்கை நம்புவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா, கல்லறையை தாண்டி நம்பிக்கை ஏதாவது இருக்கிறதா?


நாம் இப்பொழுது வாசித்த சம்பவம் ரோமர்கள் இயேசுவை கொன்ற பிறகு ஒரு மேல் வீட்டறையில் நடந்தது. இயேசுவின் பிரிவினால் நொறுங்கியவர்களாய், பயந்தவர்களாக, இதற்கு மேல் செய்வதறியாதவர்களாக அங்கே ஒன்று கூடி இருந்தனர், அப்பொழுது, திடீரென்று அவர்கள் மத்தியில் இயேசு தோன்றினர். 


இப்படி தன்னை உயிரோடு மீண்டும் காண்பிப்பதன் மூலமாக சீஷர்களை திடுக்கிடச் செய்தது இது முதல் முறை அல்ல. ஆனால், இதற்கு முன்பாக மற்றவர்களிடம் இப்படி இயேசு தன்னை வெளிப்படுத்திய போது அங்கே தோமா இல்லை. எனவே தோமா இதனை நம்பாமல் இருந்தார். எனவே இயேசு தோமாவை தனியாக அனுகி இவ்வாறாகக் கூறினார், 


“‭‭நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார். தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.“ (வ. 27, 28).



இங்கு தான்  “சந்தேகிக்கும் தோமா” என்ற வாக்கியத்தை நாம் பெற்றோம்.



சில வேளைகளில், தோமாவைப் போல, ரமக்கும்  சந்தேகங்கள் வரலாம்; கடவுள் உண்மையிலே இருக்கின்றாரா இல்லையா என்று கேள்வி எழும்பலாம்; இயேசு நம்மை உண்மையிலேயே நேசிக்கிறாரா என்று அதிசயிக்கலாம். “இதெல்லாம் உண்மை தானா?”, “நான் இப்போது காண முடியாத ஒன்றை நம்புவதா?” என்பன போன்ற கேள்விகள் வரலாம். 



நல்ல வேளை, தேவன் நம் சந்தேகங்களை குறித்து அஞ்சுவதில்லை,  மேலும் நாம் நம் சந்தேகங்களை தேவனிடம் கூறுவது விசுவாசத்தின் கிரியையாய் இருக்கிறது. உண்மையாக, நம் கேள்விகளின் நடுவிலும், இயேசு நம் அருகில் வர நினைக்கிறார் என்பதை இந்தச் சம்பவத்தில் கற்றுக்கொள்கிறோம்,  மேலும், மிக பலமான உறுதியான நம்பிக்கையுடைய விசுவாசம், நாம் நம் கேள்விகளோடு போராடுகிற மறு பக்கத்தில் தான் இருக்கிறது. 



ஆனால், சந்தேகங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், நல்ல செய்தி என்னவென்றால், தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதை நாம் விசுவாசிக்க திடமான காரணங்கள் பல உள்ளன. அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்: 




     
  • இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்தார் என்று அறிவிக்கப்பட்டப் பின்பு, அந்த ஞாயிற்றுக்கிழமையில் இயேசுவின் கல்லறை காலியாக இருந்தது. 

  •  
  • அதன் பின் இயேசு நாற்பது நாட்கள் தம்முடைய சீடர்களை சந்தித்தார், அவர், சந்தேகித்த தோமாவையும், நம்பிக்கையற்ற யாக்கோபு, பவுல் போன்றவர்களையும், மேலும் இயேசுவை உண்மையாக பின்பற்றாதவர்களையும் கூட சந்தித்தார்.

  •  
  • இதன் விளைவாக, சீடர்களின் வாழ்க்கை முற்றிலுமாக மாறி, ஒரு கட்டத்தில் இயேசுவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையின் நிமித்தமாக பாடுகள் அனுபவித்து மரணிக்கக் கூட அவர்கள் தயங்கவில்லை. வெளிப்படையாக மக்கள் தாங்கள் உண்மை என்று நம்புகின்ற காரியத்திற்காக (ஒரு மதத்திற்காக) தங்களை ஜீவனைக் கொடுப்பார்கள், ஆனால் எந்த புத்தியுள்ள மனிதனும் உண்மையில்லாத ஒரு காரியத்திற்காக தன் உயிரைக் கொடுக்க மாட்டான்! இந்தச் சம்பவம் நமக்கு ஞாபகப்படுத்துவது என்னவென்றால் இயேசுவின் முதல் சீஷர்கள், இயேசு உயிர்த்தெழுந்தது உண்மையா இல்லையா என்பதை அறிந்துக் கொள்ளும் படியான ஒரு உறுதியற்ற ஆனால் ஆராயும் நிலையில் இருந்தார்கள்!


கிறிஸ்தவத்தின் வளர்ச்சியையும், இன்றைய நாள் வரை வாழ்வுகளில் ஏற்படுகின்ற தொடர் மாற்றங்களையும் மேற்சொல்லப்பட்ட அனைத்தையும் விவரிக்க சிறந்த வழி, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்! 



இந்த ஐந்து நாள் வேத வாசிப்புத் திட்டம் இயேசுவின் அடையாளத்தின் மீது நம் கவனத்தை  திருப்புகிறது.  இயேசுவின் சரீர உயிர்த்தெழுதல் அவருடைய அட்யாளத்தைப் பற்றி இறுதியான துப்பு தருகின்றது. 



தேவன், தாமே, இயேசுவின் அடையாளத்தை ஒரு அதிசயத்தின் மூலம் உறுதி செய்திருக்கிறார். 



இயேசு மெய்யாகவே தேவனின் குமாரன், அவரே நம் இரட்சகர்! 



மரணம் என்பது நம் வாழ்க்கையின் முடிவல்ல என்பது உயிர்த்தெழுதல் மூலமாக உறுதியாகிறது.



கல்லறைக்கு பின்னும் ஒரு நம்பிக்கை இருக்கின்றது. 



மரணம் என்பது ஒரு முற்றுப்புள்ளி அல்ல;  அது இயேசுவின் பிரசன்னத்திற்குள் நாம் பிரவேசிக்கும்படியாக நம்மை அழைத்துச் செல்கிற தொடற்புள்ளி. 



“என் ஆண்டவரே என் தேவனே!” என தோமாவைப் போல நாமும் தேவனை நம்பி சரணடைவதின் மூலம், நாம் இயேசுவிற்கு செவி கொடுத்து பதிலளிக்க அழைக்கப்படுகிறோம்! 


வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Who Is Jesus?

இயேசுவே கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாய் இருக்கிறார். இந்த 5 நாள் திட்டம் இயேசு யார் என்பதை பற்றிய ஆழமான தோற்றத்தைக் காண்பிக்கிறது. இயேசு: பாவங்களை மன்னிக்கிறவர், பாவிகளின் சிநேகிதர், ஒளியாயிருக்கிறவர், அற்புதங்களை நடப்பிக...

More

இத்திட்டத்தை வழங்குவோர் ஆல்பா மற்றும் ஆல்பா யூத் சீரிஸ். இத்திட்டம் வாழ்க்கையின் பெரிய கேள்விகளை ஆராயும் 13-பகுதிகளை உடையது.மேலும் அறிந்து கொள்ள: http://alpha.org/youth

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்