திட்ட விவரம்

இயேசு யார்?மாதிரி

Who Is Jesus?

5 ல் 4 நாள்

அப்பங்களும் மீன்களும்

நீங்கள், “பிரின்ஸ் ஆஃப் எகிப்து” என்னும் டிஸ்னி படத்தை பார்த்திருக்கிறீர்களா


உண்மையை சொல்லப் போனால் — இது அலாவுதீன் கதை போல அல்ல. 


லயன் கிங் என்னும் படம் கூட சிறந்த படம். 


ஆனால், அலாவுதீன் போல, லயன் கிங் எனும் படத்தைப் போல அல்லாமல்  பிரின்ஸ் ஆப் எகிப்து  வேதாகமத்தில் உள்ள ஒரு உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டது — யாத்ராகமத்தின் கதை. 


பழைய ஏற்பாட்டின் யாத்திராகம புத்தகத்தில், தேவன் மோசி பயன்படுத்தி தனது மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தார். பின்னர் இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் சோர்வுற்றவர்களாக அலைந்து திரிந்தனர். தேவன் அனுப்பிய "மன்னா" என்னும் பரலோக உணவை குறை கூறினர், எபிரேயத்தில் மன்னா என்றால் "இது என்ன?" என்று பொருள். 


இந்த மொத்தக் கதையும் வேதாகமத்தின் ஒரு முக்கியச் சம்பவம். 


ஆனால் நீங்கள் கேட்கலாம், “யாத்திராகமத்திற்கு நற்செய்திகளில் நாம் வாசிக்கும் சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம்?” 


அதற்கான பதில் இந்த மண்ணாவில் உள்ளது. 


யோவான் 6 அதிகாரத்தில் மக்கள் வனாந்தரத்தில் உணவின்றி இருந்தனர். அப்பொழுது இயேசு பரலோகத்தை நோக்கி ஜெபித்தபோது, அதிசயமாக உணவு கிடைத்தது. 


இது ஏற்கனவே பழக்கமானது போல தோன்றுகிறதா? 


மீண்டும் ஒருமுறை வனாந்திரத்தில் அதிசயமாக மக்களுக்கு உணவளிக்கப்பட்டது. 


இச்சம்பவத்தின் மூலம் வரலாற்றில் தேவ சித்தம் என்னும் பின்னனியில் எப்படி என்றும் அதில் இயேசுவின் அடையாளத்தைப் பற்றி இது நமக்கு என்ன சொல்கிறது?


மோசே தன்னை விட ஒரு பெரிய தீர்க்கதரிசியும், ஒரு அற்புதமான தலைவரும், வருங்காலத்திலே வரப்போகிற தேவனின் பிரதிநிதியையும் குறித்து எழுதினார். இயேசு அந்த சத்தியத்தை நிறைவேற்றுகிறவராய் இன்னும் மேன்மையான மீட்பை தருகிறவராயிருக்கிறார். இயேசு புதிய மோசேயை போல இருந்து, தேவனின் பிள்ளைகளை தங்கள் பாவ அடிமைத்தனத்தினின்று விடுவித்து ஒரு புதிய யாத்திராகமத்தின் பாதையில் வழிநடத்துகிறார். மேலும், தேவனின் உறுதியளிக்கப்பட்ட இரட்சகராய், அவர் தம்முடைய ஜனங்களை, தங்களது முடிவான வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கும், தேவனின் புதிய வானத்திற்கும், புதிய பூமிக்கும் நேராய் வழிநடத்தி, அவர்கள் அதை சுதந்தரித்துக கொள்ளும்படியாய் அவர்களை தக்க வைக்கத் தேவையான ஆவிக்குரிய ஊட்டச்சத்தையும் தம் ஜனங்களுக்கு அளிக்கிறார்!


நாம் சாதாரணமாக வாசிக்கும் கதைகள் கூட, தேவன் நம்மை போன்றவர்களையும் தம்முடைய மேலான திட்டத்தில் பங்கு பெற அழைத்திருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது. 


இந்த பெயர் தெரியாத சிறுவன் தன்னிடம் இருந்த உணவை தானே பதுக்கி வைத்திருந்திருக்கலாம். ஆனால், அப்படி செய்திருந்தால் அவன் தேவன் செய்த அந்த பெரிய அற்புதத்தை தவறவிட்டிருப்பான். மாறாக அவன் திறந்த கைகளை உடையவனும், தாராளமனமுள்ளவனுமாக இருந்ததினால் தன்னை விடப் பெரிதான ஒரு காரியத்தில் ஒரு பங்காய் இருக்கும்படிக்கு அவனுக்கு அருளப்பட்டது! 


உங்கள் கைகளையும், இருதயத்தையும் தேவனுக்கும் மக்களுக்கும் மூடி வைப்பதினால், தேவன் இந்த உலகத்தில் செய்து வருகின்ற அவரின் பெரிய கிரியைகளை தவறவிட்டு விடாதிருங்கள். ஒரு சிறு துண்டு அப்பத்திற்காக ஒரு அற்புதத்தை இழந்து விடாதீர்கள், அல்லது உடனடி பாதுகாப்பிற்காக தேவனின் ராஜ்யத்தில் ஏற்படும் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை விட்டு விடாதீர்கள். 


மாறாக, உங்கள் மனதிடமே கேளுங்கள், உன் கைகளில் என்ன இருக்கிறது? என்னென்ன தாலந்துகள், ஈவுகள், ஆற்றல்கள் மற்றும் வளங்களை தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கிறார்?  உங்களுக்கு அது அதிகமாய் இல்லாதது போல இருக்கலாம், ஆனால் நம் தேவனுக்கு அற்புதம் செய்ய அதிகமானதொன்றும் தேவையில்லை — அவருக்கு வெறும் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களுமே போதுமானது. 


மேற்கொண்டு கூறினால், அவருக்கு உங்கள் கையில் என்ன இருக்கிறதோ அதுவே போதுமானது. 


வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Who Is Jesus?

இயேசுவே கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாய் இருக்கிறார். இந்த 5 நாள் திட்டம் இயேசு யார் என்பதை பற்றிய ஆழமான தோற்றத்தைக் காண்பிக்கிறது. இயேசு: பாவங்களை மன்னிக்கிறவர், பாவிகளின் சிநேகிதர், ஒளியாயிருக்கிறவர், அற்புதங்களை நடப்பிக...

More

இத்திட்டத்தை வழங்குவோர் ஆல்பா மற்றும் ஆல்பா யூத் சீரிஸ். இத்திட்டம் வாழ்க்கையின் பெரிய கேள்விகளை ஆராயும் 13-பகுதிகளை உடையது.மேலும் அறிந்து கொள்ள: http://alpha.org/youth

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்