அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

இன்றைய வேதாகம வாசிப்புவசனத்தில் வரும் ”முதலாவது” என்ற வார்த்தைக்கும் அதி- காலை ஜெபத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கின்றது
<உலகில் நம்மை அனேக திசைகளில் இழுக்கும்-அழுத்தங்களால் உண்டாகும் கவனச்சிதறல்கள் இன்றைக்கு அதிகம். யார் அல்லது எது நம்முடைய இருதயங்களின் மைய்யத்தில் இருக்கின்றது என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். அது பணமா? அல்லது வாழ்க்கையில் வெற்றி என்பதா? மத்தவங்க என்னை பத்தி என்ன நினைக்கிறாங்க என்பதா - ஒரு பக்கம்> அல்லது
நம்மை சிருஷ்டித்து, போஷித்து (நாம் விடும் மூச்சும் கூட அவர் தருவது) – நம்மை சிருஷ்டித்த – ஆண்டவர் இயேசு / சர்வவல்ல தேவன்–உடன் நான் கொண்டிருக்கும் உறவிற்கே என் வாழ்வில் முதல் இடம் என்ற எண்ணம் நம் வாழ்வில் முதல் இடம் பிடித்திருக்கிறதா?
முதல் இடம் என் தேவனுக்கு என்பது ஒரு தெரிந்தெடுப்பு (OPTION) அல்ல. அது நமக்கு கொடுக்கப்பட்ட கட்டளை (COMMAND)...
இன்றைய வேதாகம வாசிப்பு மத்தேயு 6:33 என்பது நாம் முதல் இடத்தை தேவனுக்கு கொடுத்தால்- ராஜாதி ராஜா வாகிய அவரின் ராஜ்யத்திற்கு நம் வாழ்வில் முதல் இடம் கொடுத்தால் – அவர் நம் தேவைகள் யாவற்றையும் சந்திப்பேன் என்று வாக்கு கொடுக்கின்றார் ( JESUS - himself promises us in this VERSE).
நம்முடைய இருதயம், செயல், தீர்மானங்கள் - தேவனுடைய வார்த்தையுடன் ஆதரவாக இருப்பதாக அதிகாலையில் எழுந்து- கூறுவது அல்லது ஆதரவைத் தெரிவிப்பதே - அதி-காலை ஜெபம். – நம் வாழ்வில் இன்று முதல் இதுவே – முதலாவது! ஆக ஆகட்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

அதிகாலை - உலகம் தூங்கி கொண்டிருக்கும்; தெருக்கள் அமைதியாக இருக்கும் - இருட்டான வேளை ஒரு விசேஷமான நேரம். பரலோகம் நெருக்கமாகநின்று உங்கள் ஜெபத்தை செவிகொடுத்துகேட்கும் நேரம். நீங்கள் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் போது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சம்வங்கள் நடக்கும். நீங்கள் எனக்கு வழிதெரியவில்லை என்ற நான்கு வழி சந்திப்பில் நிறிகிறீர்களா? ஜெபவேளையில் - தேவன் தாம் பேசும் வார்த்தைகளை நீங்கள் எளிதில்புரிந்து கொள்வீர்கள்; அது வார்த்தைகளாக கூட இராது; தேவன் தரும் ஓர் அமைதியாக - "எனக்காக தேவன் யாவற்றையும் செய்து முடிப்பார்" என்ற நிச்சயம் தரும் வேளையாகவும் - அது இருக்கலாம். உலகை இருள் சூழ்ந்திருக்கும் - அமைதியான - அதிகாலை நேரத்தில் - தேவன் நமக்குள் தரும் வெளிச்சமும் அதிகரிக்கும். ஏனென்றால் தேவன் - நாம் நியமித்திருக்கும் – கடிகாரம் காட்டும் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். தேவ மைந்தன் இயேசுவே நமக்கு நல்ல முன்மாதிரி; இன்றைய வேதபகுதி மாற்கு 1:35 ஐ உங்கள் வேதாகமத்தில் எடுத்து வாசியுங்கள்- புரியும்.....
More
இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவர் சர்வவல்லவர்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
