அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

உங்களில் சிலர் – “உணர்வுகளில், சரீரங்களில் காயப்பட்டு எனக்கு சுகம் உண்டா ” என்ற கேள்வியுடன் இருக்கலாம். இது எனக்கு சாத்தியமே இல்லை என்பதால் தீர்மானம் எடுக்க முடியாமல் ”என்ன செய்வது என்று அறியாது இருக்கும் வேளை” யாகவும் இந்த நாட்கள் இருக்கலாம். விடமுடியாத பழக்கத்திற்கு அடிமையாகி ”என்னை இந்த பரிதாப நிலையில் இருந்து விடுவிப்பவர் யார்” என்பவராகவும் இருக்கலாம்.
மேற்கண்ட சூழ்நிலைகள் யாவற்றுக்கும் ஒரே ஒரு தீர்வு தான் உண்டு.
தீர்வு அதிகாலையில் ஜெபிப்பது.
அதிகாலையில் எழுந்து ஜெபிப்பது என்பது சுலபமானது அல்ல. உங்கள் உடம்பு தூங்கு என்று சொல்லும்போது -எழுந்து முழங்கால் படியிட்டு வார்த்தைகளை வாயில் உச்சரிப்பது என்பது சௌகரியமான ஒன்றும் இல்லை.
ஆனால்,
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை பெறுவதற்கு -குறிப்பிட்ட தீர்வை பெறுவதற்கு முக்கியமானது...அதிகாலை ஜெபம்.
உலக கவலைகள் நம் இருதயத்தை ”காலையில்-நிறைக்கும்” முன்பதாக – அதி-காலையில் - நாம் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து நாம் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துவோமா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

அதிகாலை - உலகம் தூங்கி கொண்டிருக்கும்; தெருக்கள் அமைதியாக இருக்கும் - இருட்டான வேளை ஒரு விசேஷமான நேரம். பரலோகம் நெருக்கமாகநின்று உங்கள் ஜெபத்தை செவிகொடுத்துகேட்கும் நேரம். நீங்கள் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் போது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சம்வங்கள் நடக்கும். நீங்கள் எனக்கு வழிதெரியவில்லை என்ற நான்கு வழி சந்திப்பில் நிறிகிறீர்களா? ஜெபவேளையில் - தேவன் தாம் பேசும் வார்த்தைகளை நீங்கள் எளிதில்புரிந்து கொள்வீர்கள்; அது வார்த்தைகளாக கூட இராது; தேவன் தரும் ஓர் அமைதியாக - "எனக்காக தேவன் யாவற்றையும் செய்து முடிப்பார்" என்ற நிச்சயம் தரும் வேளையாகவும் - அது இருக்கலாம். உலகை இருள் சூழ்ந்திருக்கும் - அமைதியான - அதிகாலை நேரத்தில் - தேவன் நமக்குள் தரும் வெளிச்சமும் அதிகரிக்கும். ஏனென்றால் தேவன் - நாம் நியமித்திருக்கும் – கடிகாரம் காட்டும் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். தேவ மைந்தன் இயேசுவே நமக்கு நல்ல முன்மாதிரி; இன்றைய வேதபகுதி மாற்கு 1:35 ஐ உங்கள் வேதாகமத்தில் எடுத்து வாசியுங்கள்- புரியும்.....
More
இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d