விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்மாதிரி

இப்போதே நீ ஊக்கமடைவாயாக! 🙌
கடந்த சில நாட்களாக விரக்தியை மேற்கொள்ளுதல் பற்றி நாம் தியானித்த செய்தித் தொடர் உனக்கு பெரும் ஊக்கத்தை அளித்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த வாரம் உன் வாழ்க்கையில் ஆண்டவர் செய்த நன்மைகளை எண்ணி ஒருசில நிமிடங்கள் நன்றி சொல்வாயா?
இந்த ஊக்கமளிக்கும் வல்லமை வாய்ந்த சாட்சிகளை வாசிக்க நான் உன்னை அழைக்கிறேன். ஆண்டவரின் செயல்கள் ஆச்சரியமானவை.
- “நான் தற்கொலை எண்ணத்திலிருந்தேன். நான் என் சொந்த வாழ்வில் சந்தோஷமாக வாழ்வதாக உணரவில்லை, இத்தருணத்தில் 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலை வாசித்தபோது, நான் ஆண்டவருடைய பிள்ளை என்பதை உணர்ந்தேன். ஒருவர் ஏற்கனவே என் உயிருக்காக கிரயம் செலுத்திவிட்டார், இந்தச் சரீரம் இனி எனக்குச் சொந்தமானது அல்ல. நான் மரிப்பதைப் பற்றி ஒருக்காலும் நினைக்கமாட்டேன். நான் ஆண்டவருக்காக வாழ்ந்து அவருடைய மகத்துவத்தை அறிவிக்க விரும்புகிறேன்!" (ஷீலா)
- "என்னைப் புண்படுத்தியவர்களை மன்னிக்கும் மனவலிமையை ஆண்டவர் எனக்குக் கொடுத்தார்; இன்று நான் எனது கசப்பான மனதை மாற்றிக்கொண்டு ஆண்டவருடன் இணைந்து முன்னோக்கிச் செல்கிறேன்! என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவின் மூலமாக என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்." (வனஜா)
- “என் வாழ்வில் நான் நம்பிக்கையற்று இருந்தபோதுதான், ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலைப் பெற ஆரம்பித்தேன். ஆண்டவர் எனக்காக செய்ய வேண்டியதை இன்னும் செய்து முடிக்கவில்லை என்பது எனக்குப் புரிந்தது; ஆனால் நான் மிகவும் மனச் சோர்வடைந்திருந்தேன்; எப்படி முன்னேறுவது என்று கூட எனக்குத் தெரியவில்லை. 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சல் செய்தியைப் பெற்று வாசிப்பது பல தடைகளைத் தாண்டி மீண்டு வர எனக்கு உதவியது. இந்தக் கடிதங்கள் மூலம் நான் ஊக்கம் பெற ஆண்டவர் இந்த மின்னஞ்சலைப் பயன்படுத்தினார். ஒவ்வொருவரும் அவருக்கு எவ்வளவு விலையேறப்பெற்றவர்கள் என்பதையும், அவருடைய அன்பு நம்மீது எவ்வளவு நிலையானதாக இருக்கிறது என்பதையும் இது எனக்கு நினைவூட்டுகிறது. இப்போது நான் ஒரு புதுப்பிக்கப்பட்ட தரிசனம் மற்றும் நோக்கத்தை உணர்கிறேன்; மேலும் தேவ ராஜ்யத்தில் பெரிய காரியங்களை எதிர்பார்க்கிறேன்!" (ஆரோன்)
இந்த சாட்சிகள் உன்னை ஊக்குவித்து பலப்படுத்தியிருக்கும் என்று நான் நம்புகிறேன்! நம்முடைய தேவன் மிகவும் பெரியவர்; மிகவும் நல்லவர்; அற்புதமானவர். அவருடைய அன்பு எவ்வளவு பெரியது; அவருடைய உண்மை எவ்வளவு மகத்துவமானது!
சங்கீதக்காரர் அதை மிகச் சிறப்பாகச் சொல்கிறார்: “உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது!” (சங்கீதம் 57:10)
ஒருபோதும் முடிவடையாது என்பதாகத் தோன்றும் கடினமான சூழ்நிலைகளை நீ கடந்து சென்றுகொண்டிருப்பாயானால், நீ என் நினைவுகளில் இருக்கிறாய் என்பதை அறிந்துகொள். நான் உனக்காக ஜெபிக்கிறேன்; கர்த்தர் உன்னைப் பலப்படுத்தி உற்சாகப்படுத்துவாராக.
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஏன் கர்த்தாவே ஏன் ? நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் விரக்தியை அனுபவிக்கிறோம்.இந்த கடினமான சூழ்நிலையை ஏன் "ஆண்டவர் அனுமதிக்கிறார்" என்பதை புரிந்துகொள்வது பலருக்கும் கடினமாக இருக்கலாம். அதனால்தான் விரக்திக்கான வேதாகமத்தின் பதிலைப் பற்றி மேலும் அறியும் பயணத்தில் அப்போஸ்தலன் பவுலின் அடிச்சுவடுகளில் உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=OvercomingFrustration
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

வனாந்தர அதிசயம்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

மேடைகள் vs தூண்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு
