விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்மாதிரி

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

7 ல் 3 நாள்

ஆண்டவர் பதிலளிக்காதபோது நீ என்ன செய்வாய்?

இன்று அப்போஸ்தலனாகிய பவுலைப் பற்றிப் பார்ப்போம். அவர் துன்பத்திலிருந்து தன்னை விடுவிக்கும்படி ஆண்டவரிடத்தில் மூன்றுமுறை ஜெபங்களை ஏறெடுத்தார். (2 கொரிந்தியர் 12:7-10)

அவர் கொரிந்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில், "அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்" என்று எழுதியது உனக்கு நினைவிருக்கிறதா? (2கொரிந்தியர் 12:8)

நான் கற்பனை செய்வதுபோல், அவர் முதன்முறையாக ஜெபித்தபோது, ​​​​தனக்கிருந்த இந்தத் தடுக்கல்லிருந்து உடனடியாக விடுபடுவோம் என்று அவர் உறுதியாக நம்பியிருந்திருக்கலாம்:

“ஆண்டவரே, நீர் எனக்கு வேண்டும்... இந்தச் சூழல் என்னை ஆட்டிப்படைக்கிறது. தயவுகூர்ந்து... இந்த வலியை என்னிடமிருந்து அகற்றிவிடும். ஆமென்.”

ஆனாலும், முள் அப்படியே தான் இருந்தது. இருப்பினும், குணத்தில் ஸ்திரமான பவுல், மனம் தளரவில்லை. அவர் இரட்டிப்பான ஆர்வத்துடன் ஜெபத்தில் விடாமுயற்சியுடன் காணப்பட்டார்:

“ஆண்டவரே, இந்த முள்ளை என்னிடமிருந்து எடுத்துப்போடும்படி நான் மீண்டும் உம்மிடம் வருகிறேன். நான் அதைப் பற்றி உண்மையிலேயே யோசித்தேன், அது என்னை ஊழியத்தில் ஊனப்படுத்துகிறது. நீர் இதை என்னிடமிருந்து அகற்றினால், நான் இன்று இருப்பதை விட உமக்குச் சிறப்பாக ஊழியம் செய்ய முடியும்: நான் அதிகமான விதவைகளைச் சந்திக்க முடியும், அதிகமான மக்களைப் பயிற்றுவிக்க முடியும், உமது திருச்சபையில் ஜனங்களுக்கு கற்பிக்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் அதிக கடிதங்களை எழுதவும் முடியும்! இந்தத் துன்பம் நீங்க வேண்டும்! ஆமென்.”

இப்படி ஜெபம் செய்த பின்பும் இன்னும்... முள் அகலவில்லை.

இந்த நேரத்தில், பவுல் நிச்சயமாக உபவாசிக்கவும், ஜெபிக்கவும் நேரத்தை ஒதுக்கியிருப்பார்; அவருடைய வலி நீங்குவதைக் காண ஆசைப்பட்டார்:

“இயேசுவே, நீர் சிலுவையில் மரித்ததன் மூலம் எங்கள் துன்பங்களை ஏற்றுக்கொண்டதாகச் சொன்னீர், என்னைப் பொறுத்தவரை, இந்த முள்ளை எதிர்த்துப் போராடும் விஷயத்தில் நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். நான் உம்மிடம் மீண்டும் ஒரு முறை கடைசியாகக் கேட்கிறேன்... இந்த வலியை என்னிடமிருந்து நீக்கிவிடும். தயவுசெய்து அதைச் செய்யும்! இல்லையென்றால், உம்மிடமிருந்து எனக்கு ஒரு வார்த்தையேனும் தேவை. ஆமென்.”

இன்று, பவுலுடன் இணைந்து இந்த ஜெபத்தை ஏறெடுக்கும்படி உன்னை அழைக்கிறேன்.

"ஆண்டவரே... நான் பலவீனமாக இருக்கும்போதும், ​​நான் மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பதாக உணரும்போதும், ​​என்னால் அதை சகித்துக்கொள்ள முடியாது என்று நினைக்கும்போதும், ​​நான் அதை இழக்கப் போகிறேன் என்று நினைக்கும்போதும், நான் என் வாழ்வின் விளிம்பில் இருக்கும்போதும், இந்த விரக்தியை என்னால் தாங்க முடியாதபோதும், ​​நான் மிகவும் பலவீனமாக இருக்கும்போதும், இயேசுவே, உம்மால் நான் பலமுள்ளவனாக/பலமுள்ளவளாக இருக்கிறேன். என் முள்ளையும், என் விரக்தியையும் விட்டொழித்து உமது கரங்களில் என்னை ஒப்படைக்கிறேன். ஆமென்!”

இந்த திட்டத்தைப் பற்றி

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

ஏன் கர்த்தாவே ஏன் ? நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் விரக்தியை அனுபவிக்கிறோம்.இந்த கடினமான சூழ்நிலையை ஏன் "ஆண்டவர் அனுமதிக்கிறார்" என்பதை புரிந்துகொள்வது பலருக்கும் கடினமாக இருக்கலாம். அதனால்தான் விரக்திக்கான வேதாகமத்தின் பதிலைப் பற்றி மேலும் அறியும் பயணத்தில் அப்போஸ்தலன் பவுலின் அடிச்சுவடுகளில் உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=OvercomingFrustration