நம்மில் தேவனின் திட்டம்மாதிரி

நம்மில் தேவனின் திட்டம்

5 ல் 3 நாள்

இயேசுவே உலகத்தின் ஒளி தேவனின் ஒளியால் ஒளிரும் வெற்றி பயணத்தில் நடக்க தொடங்குவோம்

தேவனின் ஒளியை நம் வாழ்வில் அழைப்பது அவருடைய திட்டத்துடன் இணைந்திருப்பதன் ஒரு தெளிவான அத்தாட்சி. இவ்வகையான தெளிவு, நிச்சயமான ஒரு வெற்றியைக் கொண்டுவருகிறது. அவரது ஒளி நம்மை இருளிலிருந்து வெளியே கொண்டு வந்து வழிநடத்துகிறது, மேலும் மறைந்திருக்கும் ஆசீர்வாதங்களையும்கூட வெளிப்படுத்துகிறது. விசுவாசிக்கிற நம் ஒவ்வொருவரையும் அவருடைய நன்மையின் பிரதிபலிப்புகளாக இருக்க மாற்றி விடுகிறது. நம்மில் மீட்பு மற்றும் மறுசீரமைப்பின் பாதையை உருவாக்குகிறது. அவருடைய ஒளியில் நடப்பதன் காரணத்தினால் எப்படி நம் வாழ்க்கையை மாறிவிடுகிறது என்பது இங்கே அறிய வருகிறோம்.

தேவனின் ஒளி அதிக வல்லமையாய் பிரகாசிக்கிறது

தேவனின் ஒளி இருளை அகற்றி, அமைதியையும் நம்பிக்கையையும் தருகிறது. சங்கீதம் 27:1 கூறுவது, “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?" இந்த ஒளி நம் வாழ்வில் தெளிவைக் கொண்டுவருகிறது, அச்சங்களை நீக்குகிறது மற்றும் நமது நோக்கத்தைத் தொடர அதிகமான தைரியத்தையும் அளிக்கிறது. அவருடைய ஒளியைத் தேடுவதன் மூலம், அவர் நம்முடன் இருக்கிறார் என்பதை அறிந்து, ஒவ்வொரு அடியிலும் ஞானத்தையும் வழிகாட்டுதலையும் தொடர்ந்து பெறுகிறோம்.

மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை வெளிப்படுத்துதல்

தேவனின் ஒளி மறைக்கப்பட்ட ஆசீர்வாதங்களையும் வாய்ப்புகளையும் வெளிப்படுத்துகிறது. ஏசாயா 45:3, “வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்;” என்று உறுதியளிக்கிறது. அவருடைய வெளிச்சத்தில் நடப்பதன் மூலம், நமக்கான அவருடைய நோக்கத்தை நிறைவேற்றும் வாய்ப்புகளை நோக்கி நாம் வழிநடத்தப்படுகிறோம். இந்த பொக்கிஷங்கள் ஆவிக்குரிய உறவுகளாகவும், திறக்கப்பட்ட புதிய பாதைகளாகவும் அல்லது பல்வேறு ஆசீர்வாதங்களாகவும் இருக்கலாம், அவர் தனது திட்டத்தை நம்மில் நிறைவேற்றுவதற்காக ஏற்கனவே திட்டம் செய்து ஆயத்தப்படுத்தி வைத்துள்ளார். எனவே நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வினை அர்த்தமுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் வாழ நமக்கு உதவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மைப் விடுதலை செய்கிறது.

தேவனின் ஒளி நம்மை தூய்மைப்படுத்துகிறது. “அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். என 1 யோவான் 1:7 கூறுகிறது

நாம் அவருடைய ஒளியை நம் வாழ்வில் விரும்பி அழைக்கும்போது, ​​அந்த ஒளி அது எல்லாவித அநீதியையும் வெளிப்படுத்துகிறது, ஆன்மீக வளர்ச்சி மற்றும் குணப்படுத்துதலை நோக்கி நம்மை ஊக்குவிக்கிறது. இந்த வெளிச்சம் கண்டனம் செய்வதற்காக அல்ல, மாறாக சுதந்திரத்தைக் கொண்டுவருவதற்காக, ஒருமைப்பாட்டுடனும் நோக்கத்துடனும் வாழ நம்மை வழிநடத்துகிறது.

ஒரு தெய்வீக முன்மாதிரி அமைத்தல்

தேவனின் வெளிச்சத்தில் நடப்பது என்பது அவருடைய நற்குணத்தின் முன்மாதிரியாக மாறுவதாகும். “இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” மத்தேயு 5:16 என்று கூறி நம்மை ஊக்குவிக்கிறது. அவருடைய அன்பைப் பிரதிபலிப்பதன் மூலம், அவரைத் தேட மற்றவர்களையும் கூட ஊக்குவிக்கிறோம். அவருடைய ஒளியால் வழிநடத்தப்படும் நம் வாழ்க்கை, அவருடைய உண்மைத்தன்மையின் சக்திவாய்ந்த சாட்சியாக மாறுகிறது, மற்றவர்கள் அவருடைய தொடர்பு மேலும் தேவனோடு இணைந்து வாழ தேவ அன்பை உணர அனுபவிக்க உதவுகிறது.

மீட்பு பெறவும் மற்றும் மறுரூபம் அடையவும் செய்கிறது

தேவனின் ஒளி நம்மை மறுரூபம் அடையச் செய்து மீட்பின் பாதைகளுக்கு அழைத்துச் செல்கிறது. சங்கீதம் 119:105 நமக்கு நினைவூட்டுகிறது என்னவென்றால். “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” அவருடைய வழிகாட்டுதலின் மூலம், அவர் தனது வாக்குறுதிகளை நோக்கி நம்மை வழிநடத்துகிறார் என்று நம்பி, வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். அவருடைய ஒளியில் நடப்பது, சுகத்தையும், அமைதியையும், நம் வாழ்வுக்கான அவருடைய திட்டத்தை நிறைவேற்றுவதையும் கொண்டுவருகிறது.

இறுதி பிரதிபலிப்பு

தேவனின் ஒளியில் நடப்பது தெளிவைக் கொண்டுவருகிறது, ஆசீர்வாதங்களை வெளிப்படுத்துகிறது, மேலும் ஒரு நோக்கத்துடன் இயங்கும் வாழ்க்கையை வாழ நமக்கு அதிகாரம் அளிக்கிறது. நாம் அவருடைய ஒளியைத் தேடும்போது, ​​நாம் வெற்றியையும் நிறைவையும் காண்பது மட்டுமல்லாமல், நம்மைச் சுற்றியுள்ள உலகத்திற்கு அவருடைய அன்பின் கலங்கரை விளக்கங்களாகவும் மாறுகிறோம்.

இந்த திட்டத்தைப் பற்றி

நம்மில் தேவனின் திட்டம்

நம்மில் தேவனின் திட்டம் என்பது நாம் இழந்து போன தேவனின் பிள்ளைகள் என்ற முழுமையான நிலையை மீண்டும் பெறுவதாகும். தேவனின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு, தேவன் நம்மை உருவாக்கும் போதே நமக்கு தந்தருளின இயல்பான வலிமைகள், திறமைகள் இவற்றை உரிமைப் படுத்தி விசுவாசத்தில் செயல்படுவதற்கு வழி காட்டுவது மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் தேவனின் பரிபூரண சித்தத்துடன் இணைந்து தேவனுடைய அழியாத வாக்குறுதிகளில் நம்பிக்கை உடையவர்களாக விசுவாசத்துடன் தொடர்ந்து வாழ கிருபை பெற்றுக்கொள்கிறோம். நமது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் நாம் ஆன்மீக உன்னத அந்தஸ்தை இழந்து விட்டோம். தேவன் நம் ஒவ்வொருவருக்காக திட்டம் பண்ணின வாழ்க்கையை நோக்கி நம்பிக்கையுடன் செல்லுவோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Annie David க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: ruminatewithannie.in