நம்மில் தேவனின் திட்டம்மாதிரி

தலைமுறை சாபங்களை உடைத்து ஆசீர்வாதங்களை அடைவது ஒரு விசுவாசத்தின் செயல்
விசுவாசிகளாகிய நாம் தலைமுறைத் தடைகளைத் தாண்டி, ஆசீர்வாதங்களின் பாரம்பரியத்தை நிலைநாட்ட அழைக்கப்படுகிறோம். சாபங்களை உடைத்து, நமது பரம்பரைக்கான தேவனின் வாக்குறுதிகளை அறிக்கை செய்வதன் மூலம் விசுவாசத்தை வளர்க்கும் அடித்தளத்தை நாம் உருவாக்க முடியும். இந்த பயணத்திற்கு நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் அவரது ஆசீர்வாதங்களை நம் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி மற்றும் குடும்பங்கள் மீது அறிவிக்க தைரியமும் மன உறுதியும் தேவை.
தலைமுறை சாபங்களை நாம் எவ்விதம் உடைத்தெறிய இயலும்?
தலைமுறை சாபங்களை உடைப்பது, நம் குடும்பங்களில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஒவ்வொரு எதிர்மறையான செயல்பாடுகள் மீதும் கிறிஸ்துவின் சக்தியை அறிக்கை செய்வதில் தொடங்குகிறது. “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்” (கலாத்தியர் 3:13). அவருடைய மீட்பின் மூலம், நமது குடும்பத்தின் ஆசீர்வாதங்களுக்குத் தடையாக இருக்கும் கோட்டைகளை உடைக்கவும், தடைகளை அகற்றவும் நாம் ஒவ்வொருவரும் அதிகாரம் பெற்றுள்ளோம். நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அகற்றுவதற்கு தேவனின் வாக்குத்தத்தம் அளிக்கும் வல்லமைக்காக ஜெபிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசிக்கிற நமக்கு தேவனால் தரப்பட்ட சுதந்திரத்தை அறிக்கை செய்யும் போது ஒவ்வொரு அறிக்கைகளும் இருண்ட கோட்டைகளை உடைத்தெறியும் வல்லமையாக மாறிவிடுகிறது. இவ்விதம் நமக்குள் தேவ ராஜ்யத்தை விஸ்தாரம் செய்யவும் இயலுகிறது. அதாவது வியாதியிலிருந்து குணப்படுத்துதல் மற்றும் இழந்து போன நன்மைகளை மீண்டும் பெற்றுக் கொள்வது. சீரற்றவைகளை மறுசீரமைப்புக்கான அடித்தளத்தை அமைக்கவும் வழி திறக்கிறது.
–தலைமுறை ஆசீர்வாதங்களை மீட்டு எடுப்பது
சாபங்களை உடைப்பது இன்றியமையாததுதான் என்றாலும், நம் பரம்பரைக்காக வரும் சந்ததிக்கான ஆசீர்வாதங்களை மீண்டும் பெற்றுக் கொள்வது அதைவிடவும் அதிக இன்றியமையாதது. ”ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன்”(உபாகமம் 7:9), என்று உறுதியளிக்கிறது. தேவனுடைய வாக்குறுதிகள் நிலையானவை, அவருடைய வழிகளை மதிக்கிறவர்களுக்குப் பயனளிக்கும். இந்த ஆசீர்வாதங்களை உயிர்ப்பிக்கவும் மீட்டெடுக்கவும் அவரிடம் இத் தினமே கேட்கத் தொடங்குவோம், அவருடைய பெரிதான அரிதான ஆசீர்வாதங்கள் நம் குடும்பத்தில் மறுபடியும் பெருக்கெடுத்து ஓட தொடங்கப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த விசுவாச ஜெபம் அவருடைய தயவையும் இரக்கத்தையும் வரவழைக்கிறது மற்றும் வருங்கால சந்ததியின் மேலும் அளவில்லாத ஆசீர்வாதங்களை தந்து நம்மை மறுபடியும் புதுப்பிக்கிறது.
தேவனின் மகிமைக்காக ஒரு புதிய பாரம்பரியத்தை உருவாக்கும் வழி
இந்த தெய்வீக பரம்பரை நமது தேவனின் வல்லமைக்கு சான்றாக அமையும். நம்முடைய தனிப்பட்ட வெற்றிக்காக மட்டுமல்ல, அவருடைய மகிமைக்காகவும் அவருடைய ராஜ்யத்தை முக்கியமாக கட்டியெழுப்ப உறுதி கொள்ள வேண்டும். ஒவ்வொரு சாதனையையும் தேவாதி தேவனை கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கவும். இந்த அறிவுடன் பரிசுத்த ஆவியின் ஒருமைப்பாட்டுடன் செயல்பட உறுதியாக அறிக்கை இட்டு ஜெபிக்க வேண்டும். நமது உள்ளான நாட்டங்கள் அவருடைய அனாதி திட்டத்தை பிரதிபலிக்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவோம். நம்முடைய வெற்றிகளை தேவனுக்கு அர்ப்பணிப்பதன் மூலம், பிறரையும் தேவனுக்கு நேராக கவர்ந்திழுக்கும் ஒரு வல்லமையை நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதற்கு சந்தேகம் இல்லை. புதிய ஒரு பாரம்பரியத்தையே உருவாக்குகிறோம். பொதுவாக நமது வேலை இடம், குடும்ப வாழ்வு, தேவனுக்குச் செய்யும் ஊழியம் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு முயற்சியும் அவருடைய அன்புக்கும் இரக்கத்திற்கும் ஒரு தளமாகவே மாறிவிட அறிக்கை செய்து இந்தவேண்டிக் கொள்ளுவோம்.
நம்பிக்கையோடு அவருடைய ராஜ்யத்தை விரிவுபடுத்த தேவன் நம்மை அழைக்கிறார்
தனிப்பட்ட சாதனைகளுக்கு அப்பால், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவும் அவருடைய ராஜ்யத்தை விரிவுபடுத்தவும் தேவன் நம்மை அழைக்கிறார். (சங்கீதம் 2:8) நமக்கு நினைவூட்டுகிறது,”என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;” இந்த வாக்குத்தத்தம், தம்முடைய மக்களுக்கான தேவனின் விரிவான பார்வையை வெளிப்படுத்துகிறது. நீங்கள் வாழும் சுற்று வட்டாரத்திற்கு அப்பால் உடனடியாக மக்களைச் சென்றடையும், நம்பிக்கையின் மரபை உருவாக்க முயலும் இதயத்திற்காக ஜெபம் செய்யத் தொடங்குவோம். இந்த அழைப்பிற்குள் நீங்கள் அடியெடுத்து வைக்கும் போது, தேவன் நம்முடைய செல்வாக்கைப் பயன்படுத்தி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும், அவருடைய உண்மையை எல்லைகளுக்கு அப்பால் விரிவுபடுத்துவார் என்றும் நம்பி செயல்பட தொடங்குவோம்.
தெய்வீக ஆசீர்வாதங்கள் பரம்பரைத் தடைகளைத் தாண்டியது
தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான பயணம் என்பது அதன சவால்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இடையூறாக இருக்கும் எந்த தடைகளுக்கும் எதிராக மன உறுதிக்காக ஜெபித்து அறிக்கை செய்வோம். ஏசாயா 54:17ல், “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும்” என்று வாக்களிக்கப்பட்டிருக்கிறது. எனவே நம் நம்பிக்கையில் உறுதியாக இருப்போம். எந்த எதிர்ப்பையும் முறியடிக்கும் என்று தேவ வாக்கு பெற்றிருக்கிறோம். எனவே இந்த நம்பிக்கையுடன், தேவனின் திட்டத்தில் முழுமையான வழி நடத்துதலை பெறுவதற்கு, நம் ஒவ்வொருவருக்கும், நம்முடைய தனித்த நிலைமையிலும் குடும்பங்களுக்கும்கூட அவரால் நியமிக்கப்பட்ட ஆசீர்வாதங்களில் நாம் முன்வந்து நடப்பதற்கும் அதற்கான பாதைகளை திறந்து அது வழியாய் உட்பிரவேசிக்கிறோம் என்பது நிச்சயம்.
இறுதி பிரதிபலிப்பு
சாபங்களை உடைத்து ஆசீர்வாதங்களை நிலைநாட்டுவது என்பது விசுவாசத்தின் ஆழமான செயலாகும். இது தேவனின் வாக்குறுதிகளுடன் இணைந்த ஒரு மரபைப் பாதுகாப்பதற்கான ஒரு செயலின் முடிவாகும். சாபங்களை முறியடித்து, ஆசீர்வாதங்களை மீட்டெடுப்பதன் மூலம் அவருடைய மகிமைக்காக தேசங்களை கட்டி எழுப்பி தேசங்களை சுதந்திரமாக பெறுகிறோம். மற்றும் தடைகளை கடப்பதன் மூலம், நாம் நம் தலைமுறைகளும் செழிக்க ஒரு அடித்தளத்தை ஏற்படுத்துகிறோம். தேவனின் வாக்குறுதிகளை நம்புங்கள். நாம் நிறுவும் மரபு அவருடைய அன்பு மற்றும் விசுவாசத்தின் கலங்கரை விளக்காக பிரகாசிக்கும் என்பதை திட்டமாய் உறுதிப்படுத்திக் கொள்ளுவோம்.
இந்த திட்டத்தைப் பற்றி

நம்மில் தேவனின் திட்டம் என்பது நாம் இழந்து போன தேவனின் பிள்ளைகள் என்ற முழுமையான நிலையை மீண்டும் பெறுவதாகும். தேவனின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு, தேவன் நம்மை உருவாக்கும் போதே நமக்கு தந்தருளின இயல்பான வலிமைகள், திறமைகள் இவற்றை உரிமைப் படுத்தி விசுவாசத்தில் செயல்படுவதற்கு வழி காட்டுவது மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் தேவனின் பரிபூரண சித்தத்துடன் இணைந்து தேவனுடைய அழியாத வாக்குறுதிகளில் நம்பிக்கை உடையவர்களாக விசுவாசத்துடன் தொடர்ந்து வாழ கிருபை பெற்றுக்கொள்கிறோம். நமது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் நாம் ஆன்மீக உன்னத அந்தஸ்தை இழந்து விட்டோம். தேவன் நம் ஒவ்வொருவருக்காக திட்டம் பண்ணின வாழ்க்கையை நோக்கி நம்பிக்கையுடன் செல்லுவோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Annie David க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: ruminatewithannie.in
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்
